For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு எந்த மாதிரியான தீபம் வெக்க போறீங்க....

By Maha
|

தீபாவளி அன்று அனைத்து வீடுகளிலும் பட்டாசுகள் வெடிப்பதோடு, தீபங்களாலும் வீடுகளை மாலை நேரத்தில் அலங்கரிப்பர். அத்தகைய தீபங்களில் பல வகைகள் உள்ளன. அதிலும் அந்த தீபங்கள் ஏற்றவதற்கு காரணம், தீபாவளி அன்று தான் இராமன் இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு, அயோத்திக்கு வருகைத் தருவதால், அயோத்தியில் உள்ள மக்கள் இராமன், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோரை வரவேற்கும் வகையில், அந்த வெற்றியின் காரணமாக தீபங்களை வீட்டில் ஏற்றுகின்றனர்.

அதனால் தான் அன்று முதல் இன்று வரை அனைவரும் வீட்டில் தீபங்களை தொன்றுதொட்டு ஏற்றி வருகின்றோம் என்று புராணங்கள் பல சொல்கின்றன. அதுமட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள காமாட்சி அம்மன், சிவனின் பாதியாக வேண்டுமென்று 21 நாட்கள் விரதமிருந்து, 21 ஆவது நாளான ஐப்பதி மாதத்தின் அமாவாசை நாளில், சிவன் காமாட்சி அம்மனை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனதால், தமிழ்நாட்டு மக்களும் அந்த நாளில் தீபங்களை ஏற்றி, சௌபாக்கியத்தை பெற அம்மனை வழிபட்டு வருகின்றனர் என்றும் ஸ்கந்த புராணங்கள் கூறுகின்றன.

ஆகவே அத்தகைய தீபங்களான விளக்குகள் தற்போது பல டிசைன்களில் வெளிவந்துள்ளன. மேலும் அந்த டிசைன்களில் செய்யப்படும் தீபங்களின் விலை 5 முதல் 100 ரூபாயாக மட்டுமே இருக்கும். எனவே அத்தகைய தீபங்களின் டிசைன்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம். எது உங்களுக்கு பிடிக்கிறதோ, அதை வாங்கி வீட்டில் ஏற்றி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஜா இதழ் தீபம்

ரோஜா இதழ் தீபம்

இந்த தீபம் பார்ப்பதற்கு ரோஜாவின் இதழ்கள் திறந்திருப்பது போன்று களிமண்ணால் அழகாக செய்யப்பட்டுள்ளது.

இதய வடிவ தீபம்

இதய வடிவ தீபம்

இதய வடிவ தீபம் சாதாரணமாக, அழகாக, க்யூட்டாக உள்ளது. ஆகவே இதனை அன்பை வெளிப்படுத்தும் வகையில் வீட்டில் ஏற்றி மகிழலாம்.

சங்கு வடிவ தீபம்

சங்கு வடிவ தீபம்

தீபத்தில் இது பார்க்க சற்று வித்தியாசமாக சங்கு போன்று எளிமையான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிளை வடிவ தீபம்

கிளை வடிவ தீபம்

இதனை 'ட்வின்ஸ் தீபம்' என்று சொல்லலாம். மேலும் இது பார்ப்பதற்கு மரத்தில் இருக்கும் தண்டிலிருந்து இரண்டு இலைகள் மட்டும் தனித்திருப்பது போல் சூப்பராக செய்யப்பட்டுள்ளது.

கணபதி தீபம்

கணபதி தீபம்

அனைத்திற்கும் முதன்மையான கணபதியை தீபாவளி அன்று வணங்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே கணபதியை அதிகம் விரும்புபவர்கள், கணபதியின் வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் தீபத்தை வாங்கி, வீட்டில் ஏற்றினால், கணபதியே நமம்முடன் இருப்பது போல் இருக்கும்.

பறவைகளின் கூடு வடிவ தீபம்

பறவைகளின் கூடு வடிவ தீபம்

இந்த வடிவ தீபமானது, கூட்டின் உள்ளிருந்து வெளிச்சம் வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான சங்கு தீபம்

வண்ணமயமான சங்கு தீபம்

இந்த தீபமானது சங்கு தீபம் போன்றது தான். ஆனால் இது சற்று பெரியதாக இருப்பதோடு, வண்ணம் பூசப்பட்டுள்ளது.

லஷ்மி கணபதி தீபம்

லஷ்மி கணபதி தீபம்

இந்த தீபத்தில் லஷ்மி மற்றும் கணபதியின் முகமானது வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, தீபத்தின் முனைகளில் அவர்களை சற்று அழகாக காண்பிப்பதற்கு தங்கநிற முலாம் பூசப்பட்டுள்ளது.

தாமரை வடிவ தீபம்

தாமரை வடிவ தீபம்

இது பார்ப்பதற்கு தாமரை மலர் மலர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து முக தீபம்

ஐந்து முக தீபம்

ஒரே தீபத்தில் பல முகங்கள் வேண்டுமென்றால், அதற்கு இந்த வகையான தீபம் தான் சிறந்தது.

வண்ணமயமான கண்ணாடி தீபம்

வண்ணமயமான கண்ணாடி தீபம்

இது கண்ணாடியால் செய்யப்பட்ட முற்றிலும் வித்தியாசமான மற்றும் அழகான தீபம். இதனை வாங்கி வீட்டில் அழகாக அலங்கரித்து ஏற்றினால், அருமையாக இருக்கும். மேலும் இதனை பத்திரமாக கிறிஸ்துமஸ் வரை வைத்து, ஒரு செண்டட் மெழுகுவர்த்தி போல் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Some Diya Designs To Dazzle You This Diwali | தீபாவளிக்கு எந்த மாதிரியான தீபம் வெக்க போறீங்க....

This year variety of diyas has made their way into the market. Not only are these diyas exquisite in design, they are also quite affordable. The diyas range from a price of Rs 5 to Rs 100 and trust me, they are totally worth the money. To help you select diyas for Diwali, Boldsky has picked 12 diya designs that are innovative and quite compelling.
Desktop Bottom Promotion