Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? அப்ப அத தூக்கி போடாம கிச்சன்-ல இப்படி யூஸ் பண்ணுங்க..
Kitchen Cleaning Tips In Tamil: நமது தினசரி சமையலில் சேர்க்கும் ஒரு முக்கியமான பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை நமது சமையலுக்கு ஒரு நல்ல ப்ளேவரை தருவதோடு, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டதும் கூட. இப்படிப்பட்ட கறிவேப்பிலையை காய்கறி கடைகளில் இலவசமாகவே தருவார்கள். இவ்வாறு ப்ரீயாக கிடைப்பதால், பலரது வீடுகளில் கறிவேப்பிலை மட்டும் அதிகம் சேர்ந்திருக்கும்.
இப்படி அதிகம் சேரும் கறிவேப்பிலையை நிறைய பேர் தேவையான அளவு மட்டும் வைத்துக் கொண்டு மீதமானதை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இப்படி வீட்டில் அதிகம் சேர்ந்திருக்கும் கறிவேப்பிலையை வெறுமனே தூக்கி எறிவதற்கு பதிலாக, அவற்றைக் கொண்டு சமையலறையை சுத்தம் செய்யலாம் என்பது தெரியுமா?

என்னது கறிவேப்பிலை கொண்டு சமையலறையை சுத்தம் செய்யலாமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், கறிவேப்பிலையை சமையலில் மட்டுமின்றி, சமையலறையை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். கீழே சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
சமையலறையை நல்ல மணத்துடன் வைக்க..
உங்களின் சமையலறை கெட்ட நாற்றத்துடன் உள்ளதா? உங்களின் சமையலறை நல்ல புத்துணர்ச்சியான நறுமணத்துடன் நிரம்பியிருக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீராவியை சமையலறையில் காட்டுங்கள். இப்படி காட்டும் போது சமையலறையில் இருக்கும் மீன் அல்லது இறைச்சிகளின் வலுவான வாசனை மறைந்து, சமையலறை நல்ல மணத்துடன் இருக்கும்.
சமையலறை திட்டுக்களை சுத்தம் செய்ய...
என்ன தான் காய்கறிகளை நறுக்க பலகைகள் இருந்தாலும், சில சமயங்களில் அவசரமாக சமைக்கும் போது சமையலறை திட்டுக்களில் வைத்து பூண்டு பற்களை தட்டுவது, சில காய்கறிகளை நறுக்குவது, சப்பாத்தியை உருட்டுவது என பலவற்றை செய்வோம். எனவே இந்த சமையலறை திட்டுக்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். கறிவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. எனவே இந்த கறிவேப்பிலையை ஒரு கையளவு எடுத்து, அரைத்து பேஸ்ட் செய்து, அதை சமையலறை திட்டுக்களை தடவி சில நிமிடங்கள் ஊறு வைத்து, பின் ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். இதனால் சமையலறை திட்டுக்கள் சுத்தமாவதோடு, திட்டுக்களில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.
பாத்திரங்கள் பளபளக்க...
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, அதன் பளபளப்பு குறையும். இந்த பளபளப்பை மீட்டெடுக்க கெமிக்கல் கலந்த க்ளீனர்கள் இருந்தாலும், ஏன் வீட்டில் உள்ள கறிவேப்பிலையை நீங்கள் பயன்படுத்தக்கூடாது? ஆம் கறிவேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்யும் போது பாத்திரங்கள் எப்போதும் பளபளவென்று புதிதாக இருக்கும்.
கேஸ் அடுப்புகளில் உள்ள பிசுபிசுப்பு நீங்க..
கேஸ் அடுப்பில் சமைக்கும் போது, அதன் திட்டுக்களில் எண்ணெய்கள் படிந்து, பிசுபிசுவென்றும், கறையுடனும் இருக்கும். இந்த சூழ்நிலையில் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் இருந்தால், அந்த கறிவேப்பிலையை அரைத்து, சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதை ஸ்டௌவ் மேல் தடவி சிறிது நேரம் தேய்த்தால், பிசுபிசுப்பு விரைவில் நீங்கி, பளபளவென்று மின்னும்.
பருப்புக்களில் பூச்சி விழாமல் இருக்க...
தானியங்கள், பருப்பு வகைகள், மசாலா பொருட்களில் பூச்சிகள் விரைவில் வந்துவிடும். ஆனால் அவற்றில் சிறிது கறிவேப்பிலையை காய வைத்து அதை சேர்த்துக் கொண்டால், அதன் மணத்தால் பூச்சிகள் அண்டாமல், பருப்புக்கள சுத்தமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications