Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கறுப்பு பூனை குறுக்கே வந்தால் என்ன பலன்? அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? உண்மை என்ன?
Black Cat Crosses Path : இந்தியாவில், ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையைக் கடந்தால் அது அசுபமானது என்று நம்பிக்கை உள்ளது. இருப்பினும், உலகின் சில பகுதிகளில், இது உண்மையில் நல்ல அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. பிரிட்டன், ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உங்கள் பயணத்தில் ஒரு கருப்பு பூனை வருவது அதிர்ஷ்டம்.
இதற்கிடையில், இந்தியாவில், இது ஒரு கெட்ட சகுனம் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில், கருப்பு நிறம் பொதுவாக சனி பகவானுடன் தொடர்புடையது. ஜோதிடத்தில், சனி பகவான் உங்களை வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்க முயற்சிப்பதாக நம்பப்படுகிறது. அல்லது பணி தாமதமாகும் என சொல்லப்படுவதுண்டு..

இந்தியாவில் பூனைகள் சாலையின் குறுக்கே நம்மை கடந்து செல்வது அபசகுணமாக கருதப்படுகிறது. அதிலும் கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. பழைய நம்பிக்கைகளின்படி, பூனைகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன. எனவே வீட்டில் பூனை இருப்பது நல்லதல்ல என சொல்லப்பட்டது. பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்று பலர் கருதினர். ஒருவேளை வலமிருந்து இடமாக நகர்ந்தால் அது மங்களகரமானதாக பார்க்கப்பட்டது.
கருப்பு பூனை குறுக்கே செல்வது அபசகுணமா?
ஒரு பூனையின் அழுகை கூட சாதகமற்றதாக பார்க்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் பூனையை கெட்ட சகுணமாக கருதுகின்றனர். குறிப்பாக கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. ஏனென்றால் கருப்பு சனி பகவானுக்கு உகந்தது என்பதால் தீமை ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் அது அப்படி கிடையாது.. பூனை குறுக்கே சென்றால் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்ற மூடநம்பிக்கையை இன்று சந்திர மண்டலத்திற்கு ராக்கெட் விட்டுள்ள காலத்திலும் மக்கள் நம்புகிறார்கள். இந்த பூனைக்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. அதாவது அந்த காலங்களில் மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கும் முன்பு மக்கள் குதிரை வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும்தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வர். இதனால் 50 கி.மீ.ரில் உள்ள பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட பலமணி நேரம் தாமதமாகும்.
சில நேரங்களில் நீண்ட தூர பயணங்கள் நாள் கணக்கில் கூட ஆகலாம். இதற்காக சப்பாடு கட்டிக் கொண்டு வண்டியை நிறுத்தி சாப்பிட்டு விட்டு இரவெல்லாம் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கும். அப்போது இரவு நேரத்தில் காட்டு பகுதியில் பூனைகள் வரும் அதன் கண்கள் பார்ப்பதற்கு ரேடியம் விளக்கு போல் மின்னும், உடல் எல்லாம் தெரியாது, கண்கள் மட்டும் மின்னும். அது பூனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, புலி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் கண்களும் இரவு நேரத்தில் மின்னும்.
இதனால் அந்த மின்னொளியை பார்த்து குதிரையோ மாடோ பயந்தால் மிரளும், இதனால் வண்டி ஆட்டம் காணும். பின்பு பயணமே பாதிக்கப்படும். இதனால்தான் இது போல் பூனையின் கண்களை பார்த்துவிட்டாலே அது பூனையோ இல்லையோ சிறிது நேரம் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துவிட்டு குதிரைக்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டிவிட்டு செல்வார்கள். இதுதான் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்றாகிவிட்டது.எனவே இனியாவது மூடநம்பிக்கையை தவிர்த்து விட்டு. பூனைக்காக எந்த செயலையும் தள்ளி போடாதீர்கள்.



Click it and Unblock the Notifications