Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Zika Virus: ஜிகா வைரஸ் உடலில் புகுந்தால் எந்தெந்த உறுப்புக்களை முதலில் பாதிக்கும் தெரியுமா?
Zika Virus: டெங்குவை அடுத்து, தற்போது இந்தியாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. 1947 ஆம் ஆண்டில் உகாண்டாவில் முதன்முதலாக கொசுக்களால் பரவியவை தான் ஜிகா வைரஸ். இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்கள், குறிப்பாக ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றின் மூலம் பரவும் வைரஸ் ஆகும்.
இந்த கொசுக்கள் பகலில் சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்களை கடித்து வைரஸ்களை பரப்பும். இந்த வைரஸ் கொசுக்களால் மட்டுமின்றி, பாலியல் தொடர்பு, இரத்த மாற்றம் மற்றும் கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கும் பரவும்.

தற்போது இந்த வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்த வைரஸ் உடலினுள் நுழைந்ததும் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உடலுறுப்புக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காண்போம்.
ஜிகா வைரஸ் எப்படி உடலினுள் நுழைகிறது?
ஜிகா வைரஸானது ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலமாக மனிதர்களின் உடலில் நுழைந்து, இரத்த ஓட்டத்தில் வேகமாக ஊடுருவி பெருகத் தொடங்குகிறது. இரத்த ஓட்டத்தில் நுழைந்ததும், முதலில் நோயெதிர்ப்பு மண்டல செல்கள் மற்றும் நஞ்சுக்கொடி செல்கள் போன்றவற்றை குறிவைத்து படையெடுக்கத் தொடங்குகிறது மற்றும் இரத்தத்தில் ஜிகா வைரஸ் அளவை அதிகரிக்க செய்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலமானது ஜிகா வைரஸை கண்டறிந்ததும், அதை எதிர்த்து போராட தொடங்குகிறது. நோயெதிர்ப்பு செல்கள் இந்த வைரஸை நடுநிலையாக்கி உடலில் இருந்து அகற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும். இருப்பினும் சில சமயங்களில் இந்த வைரஸை எதிர்க்க முடியாமல் தொற்று நீடித்திருக்கிறது.
ஜிகா வைரஸ் உடல் உறுப்புக்களை எப்படி தாக்குகிறது?
ஜிகா வைரஸ் உடலினுள் நுழைந்ததும் உடலின் பல்வேறு உறுப்புக்களை ஆக்கிரோஷமாக தாக்கி, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இப்போது ஜிகா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை எப்படி பாதிக்கிறது என்பதைக் காண்போம்.
மூளை
ஜிகா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கினால், அது நஞ்சுக்கொடியைத் தாக்கி, பிறக்காத வயிற்றில் வளரும் குழந்தைக்கு மைக்ரோசெபாலி உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். அதாவது, இந்த வைரஸால் பாதிக்கப்படும் குழந்தையின் தலை சிறியதாக இருக்கும் மற்றும் இது மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும்.
கண்கள்
ஜிகா வைரஸ் மூளையை மட்டும் தாக்குவதில்லை, கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இது யுவைடிஸை ஏற்படுத்தும். அதாவது இது கண்ணின் உள்ளே வீக்கம், வலி, சிவத்தல் மற்றும் பார்வை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையானது அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.
இதயம்
அடுத்தபடியாக ஜிகா வைரஸ் இதயத்தை தாக்கி மயோர்கார்டிடிஸை ஏற்படுத்தும். இந்நிலையில் இதயம் பலவீனமாவதோடு, மார்பு வலி, சோர்வு மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இன்னும் தீவிரமான நிலைகளில் மாரடைப்பு, இதய செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும்.
கல்லீரல்
அடுத்ததாக ஜிகா வைரஸ் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் சில சமயங்களில் இது கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி ஹெபடைடிஸை உண்டாக்கும். இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், ஜிகா வைரஸ் நோயாளிகளிடம் கல்லீரல் பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சிறுநீரகங்கள்
ஜிகா வைரஸ் மூளை, கண்கள், இதயம், கல்லீரல் ஆகியவற்றை பாதிப்பது மட்டுமல்லாமல், சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும். சில ஆய்வுகள் இந்த வைரஸ் சிறுநீரக செயல்பாட்டை பாதிப்பதாக கூறுகின்றன. இதன் விளைவாக சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டுவதை கடினமாக்குகிறது.
ஜிகா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள்
ஜிகா வைரஸ் ஒருவரை தாக்கினால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவை:
* உடல் வலியுடன் காய்ச்சல்
* சருமத்தில் வெடிப்புகள்
* மூட்டு வலி
* சிவந்த கண்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அவற்றைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications