Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
இந்த 4 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க எலும்பு மோசமா இருக்குன்னு அர்த்தம்.. எச்சரிக்கும் டாக்டர்!
World Osteoporosis Day 2025: ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்பது எலும்புகள் சேதம் அடைந்து வலுவிழக்கும் நோயாகும். ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 20-ம் தேதி உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்பு ஆரோக்கியம் தொடர்பான புரிதலை மேம்படுத்தி, சரியான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
வலுவான, ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இந்த தினம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் "அமைதியான நோய்" என்று அழைக்கப்படுகிறது. இது எலும்புகளை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. எலும்புகள் சிதிலம் அடைந்து உடையும் நிலைக்குச் செல்வதே ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும்.

இது உலக அளவில் பல லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் முரளிதரன் வெங்கடேசன் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்றால் என்ன?
"ஆஸ்டியோபோரோசிஸ் என்பது காலப்போக்கில் எலும்பு அடர்த்தி குறைந்து, அதன் தரமும் உறுதியும் குறையும் ஒரு நிலையாகும். பொதுவாக, உடலானது தொடர்ந்து பழைய எலும்பைப் புதுப்பித்துப் புதிய எலும்பை உருவாக்குகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்ற பாதிப்பு ஏற்படும் போது, புதிய எலும்புகள் புதுப்பிக்கப்படும் சமநிலை பாதிக்கப்படுகிறது.
பழைய எலும்புகள் பாதிப்புக்கு ஏற்ப புதிய எலும்பு உருவாகும் வேகம் இருக்காது. அந்த வேகம் குறையும். இதன் விளைவாக, எலும்புகளில் நுண்துளைகள் ஏற்பட்டு அது உடையக்கூடியதாக மாறும். இது எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக மணிக்கட்டு, இடுப்பு, முதுகெலும்பு ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும்."என்று டாக்டர் கூறினார்.
காரணங்களும்.. ஆபத்துகளும்..
ஆஸ்டியோபோரோசிஸுக்கு பல காரணங்கள் உள்ளன. வயது முதிர்வு என்பது மிகவும் பொதுவான காரணமாகும். ஏனெனில் எலும்பின் நிறை 30 ஆண்டுகளில் உச்சத்தை அடைந்து அதன் பிறகு மெதுவாக குறைகிறது. ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள், பெண்களிடையே எலும்பு பாதிப்பை கணிசமாக அதிகரிக்கின்றன.
பிற ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு:
* குடும்பத்தில் முன்பு வேறு யாருக்காவது ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு இருந்திருக்கலாம்.
* உடல் செயல்பாடுகள் இல்லாமை அல்லது நீண்ட காலம் படுக்கை ஓய்வில் இருத்தல்.
* கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துகள் பற்றாக்குறை. இந்த சத்துக்கள் கொண்ட உணவுகளைப் போதுமான அளவு உண்ணாமல் இருப்பது.
* புகைபிடித்தல், அதிகப்படியாக மது அருந்துதல்.
* ஸ்டீராய்டுகள், தைராய்டு மருந்துகள் போன்ற சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்
எலும்பு சிதைந்து முறிவு ஏற்படும் வரை ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருப்பினும், நுட்பமான அறிகுறிகள் தெரியும்.
1. முதுகுவலி
2. காலப்போக்கில் உயரம் குறைதல்
3. குனிந்த தோற்ற நிலை ஏற்படுதல்
4. சாதாரணமாக சிறிய அளவில் விழுந்தால் கூட எளிதில் எலும்பு முறிவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
எலும்பு அடர்த்தி சோதனையைப் (டெக்ஸா ஸ்கேன் -DEXA Scan) பயன்படுத்தி முன்கூட்டியே இதனைக் கண்டறிவதன் மூலம் கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே எலும்பு இழப்பு பாதிப்பை அடையாளம் கண்டு சிகிச்சை அளித்து, பெரிய சிக்கல்களைத் தடுக்க முடியும்.
வலுவான எலும்புகளைப் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்
எலும்புகளைப் பாதுகாக்கும் உணவுகள், நோய்த் தடுப்பிலும், பராமரிப்பு மேலாண்மையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் உணவுகள் பின்வருமாறு:
கால்சியம் நிறைந்த உணவுகள்: பால், தயிர், வெண்ணை, கேப்பை, பாதாம், கீரை போன்ற உணவு வகைகள்.
வைட்டமின் டி ஆதாரங்கள்: அதிகாலையில் இருக்கும் சூரிய ஒளி, செறிவூட்டப்பட்ட தானியங்கள், முட்டையின் மஞ்சள் கரு, சால்மன், சார்டின்கள் போன்ற கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்.
புரதமும் நுண்ணூட்டச்சத்துக்களும்: பருப்பு, பீன்ஸ், சோயா, உலர் விதை வகைகள்/நட்ஸ் போன்றவை எலும்புகளைப் பாதுகாத்துத் தசை வலிமையைப் பராமரிக்க உதவுகின்றன. எலும்புகளின் வளர்சிதை மாற்றத்திற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவையும் அவசியம்.
நினைவில் கொள்ள வேண்டியவைகள்
"ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) பாதிப்பை, வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அதன் பாதிப்பு அதிகரிக்கவிடாமல் தடுக்க முடியும் மற்றும் கட்டுப்படுத்த முடியும். வழக்கமான உடற்பயிற்சி, குறிப்பாக நடைபயிற்சி போன்ற எடையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சீரான முறையில் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது நல்ல பலன்களை அளிக்கும்.அவ்வப்போது எலும்பு பரிசோதனைகள் செய்து கொள்வது பாதிப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்றவகையில் சிகிச்சைகளைப் பெற உதவும்.
எனவே இவை அனைத்தும் வயது முதிர்ந்த காலத்தில் ஆரோக்கியமான உடல்நலத்துக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. 2025-ம் ஆண்டின் உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினத்தன்று, "வலுவான முறையில், சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வகையில் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்காக, எலும்பு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்" என நாம் உறுதியேற்றுக் கொண்டு அதன்படி செயல்படுவோம்" என்று டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














