Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
உங்க முகம் மற்றும் கழுத்தில் இந்த மாற்றம் தெரியுதா? அசால்ட்டா இருக்காதீங்க.. நுரையீரல் புற்றுநோயா இருக்கலாம்..
World Lung Cancer Day 2024: புற்றுநோய்களிலேயே நுரையீல் புற்றுநோய் மிகவும் கொடிய புற்றுநோயாகும். மேலும் உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளுக்கு இந்த நுரையீரல் புற்றுநோய் தான் முக்கிய காரணமாகும். நுரையீரல் புற்றுநோய் என்பது ஒரு வகையான புற்றுநோய்.
இது நுரையீரலில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியினால் தொடங்குகிறது. இப்படி செல்கள் கட்டுப்பாடின்றி வளரும் போது, நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, தீவிர நிலையில் அந்த செல்கள் பிரிந்து மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும்.

நுரையீரல் என்பது நமது நெஞ்சு பகுதியில் உள்ள பஞ்சு போன்ற உறுப்பாகும். இது சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட நுரையீரலில் புற்றுநோயானது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும், இதற்கு முதன்மையான மற்றும் முக்கியமான காரணம் புகைப்பிடிப்பது. இந்த புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் நிறைய உள்ளது. அதுமட்டுமின்றி, புகைப்பிடிக்காதவர்களுக்கு கூட இந்த கொடிய புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினமானது நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது. இந்த நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால், உயிருக்கு ஏற்படும் அபாயத்தைத் தடுத்து, ஆயுளை நீட்டிக்கலாம். இங்கு நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் நுரையீரல் புற்றுநோய் இருந்தால், அதன் அறிகுறிகள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியிலும் தெரியும். இப்போது அந்த அறிகுறிகளைக் காண்போம்.
வீங்கிய முகம்
ஒருவர் தங்கள் முகத்தில் அடிக்கடி காரணமின்றி வீக்கத்தைக் கண்டால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் நுரையீரலில் உள்ள புற்றுநோய் கட்டிகளானது சுப்பீரியர் வேனா காவாவிற்கு (SVC) அருகில் இருந்து நரம்பு அல்லது சுற்றியுள்ள பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஒருவித அடைப்பை உண்டாக்கி, அதன் விளைவாக வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இந்த வீக்கமானது முகத்தில் மட்டுமின்றி, கழுத்து, கைகள் மற்றும் மார்பின் மேல் பகுதிகளையும் பாதிக்கும், அதோடு சருமமானது நீலம் கலந்த சிவப்பு நிறத்தில் தோற்றக்கூடும்.
சரும அமைப்பில் மாற்றம்
நுரையீரல் புற்றுநோய் இருந்தால், அது சரும அமைப்பு மற்றும் நிறத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதுவும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சருமத்தின் நிறம் மற்றவர்களை விட அதிக கருமையாக இருந்தால், நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சருமத்தில் தட்டையான பழுப்பு, கருப்பு, சிவப்பு நிறங்களில் புள்ளிகள் அல்லது திட்டுக்கள் தென்பட்டாலும், அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம்.
முக வலி
முகத்தில் வலி என்பது மெட்டாஸ்டேடிக் அல்லாத நுரையீரல் புற்றுநோயின் ஒரு அரிய அறிகுறியாகும். இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். இருப்பினும் காரணமின்றி திடீரென்று அடிக்கடி இப்படி முகப்பகுதியில் வலியை அனுபவித்தால், நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.
முக அமைப்பில் மாற்றம்
சில நேரங்களில் முகமானது சமச்சீரற்று அல்லது தொங்கி காணப்பட்டால், அது நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் குறிக்கலாம். இப்படி முகத்தில் ஏற்படும் மாற்றமானது முகத்தில் உணர்வின்மைக்கு வழிவகுக்கிறது.
உதடுகளின் நிற மாற்றம்
உதடுகளின் நிறமானது நீலம் அல்லது ஊதா நிறமாக மாறுவதைக் கண்டால், உங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். இதற்கு நுரையீரல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
நுரையீரல் புற்றுநோயின் பிற அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் மற்ற சாதாரண ஆரோக்கிய பிரச்சனைகளுடனும் தொடர்புடையதால், நிறைய பேர் அதை சாதாராணமாக எடுத்துக் கொண்டு புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது. அதே சமயம், சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்தாலும் ஆரம்பத்தில் அறிகுறிகளே தெரியாமல், முற்றிய நிலையில் தான் தெரியும். நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:
* தொடர்ச்சியான இருமல்
* மூச்சுத்திணறல்
* மார்பு வலி மற்றும் அசௌகரியம்
* சுவாசிப்பதில் சிரமம்
* இரத்தம் கலந்த இருமல்
* குரலில் கரகரப்பு
* பசியின்மை
* திடீர் எடை இழப்பு
* தோள்களில் வலி
* ஒரு பக்கம் மட்டும் தொங்கிய கண் இமை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, பிரச்சனை இருப்பின் ஆரம்பத்திலேயே சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
