Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
World Kidney Day 2024: சிறுநீரக நோய் எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த பழங்களை அதிகமா சாப்பிடுங்க போதும்...
World Kidney Day 2024: நமது உடலில் சிறுநீரகங்கள் உடலை சுத்தம் செய்யும் மிகவும் முக்கியமான பணியை செய்கின்றன. நமது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள், அழுக்குகள் போன்றவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி வெளியேற்றுவதால், இந்த சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
இப்படிப்பட்ட சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய பல்வேறு நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக சிறுநீரக தினமானது மார்ச் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் அதன் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், பழங்களை அதிகம் சாப்பிட தோன்றும். பழங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களையும் கொண்டுள்ளன.
அதுவும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவான உணவுகளை உண்ண வேண்டும் என்பதால், அதற்கு பழங்கள் மிகச்சிறந்த தேர்வுகளாகும்.
நீங்கள் உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்த மாதிரியான பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும், செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பழங்களை அடிக்கடி உட்கொண்டு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மாதுளை
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடலினுள் வீக்கம் ஏற்படுவதைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இது இரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுவதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுமட்டுமின்றி மாதுளையில் பொட்டாசியம் அதிகம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் குறைவு என்பதால், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது. ஏனெனில் இவற்றில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவு. மேலும் இப்பழங்கள் திசுக்களை இறுக்கமடையச் செய்யவும், நீர் தேக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதுவும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக் பெர்ரி, அகாய் பெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி, மாங்கனீசு, ஃபோலேட், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. மேலும் இவற்றில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால், இப்பழங்கள் தினமும் சாப்பிட ஏற்றதும் கூட.
ஆப்பிள்
ஆப்பிளில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவு என்பதால், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பழமாக ஆப்பிள் கருதப்படுகிறது. அதற்கு ஆப்பிளை அப்படியே சாப்பிடலாம் அல்லது விரும்பியவாக சமைத்தும் உட்கொள்ளலாம். அதுவும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள், ஆப்பிளை தினமும் உட்கொள்வதால், மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையைக் கொண்ட சூப்பரான பழங்கள் மட்டுமின்றி, இப்பழங்களை உட்கொள்வதால் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதுவும் இப்பழங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகின்றன. எனவே இந்த பழங்களை முடிந்தவரை தினசரி உணவில் சேர்த்து வர முயலுங்கள். முடிந்தால் கோடைக்காலத்தில் அவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வாருங்கள்.
அவகேடோ
அவகேடோ பழத்தில் பொட்டாசிய்ம் அதிகம் உள்ளன. எனவே ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையைக் கொண்டவர்கள் இந்த பழத்தை உட்கொள்ள நினைத்தால், மத்த்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே உட்கொள்ள வேண்டும். அதுவே உங்களுக்கு எவ்வித சிறுநீரக பிரச்சனைகளும் இல்லாவிட்டால், அவகேடோ பழத்தை மிதமான அளவில் உட்கொள்ளுங்கள் இதனால் அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகளைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











