Latest Updates
-
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது
ஹை பிபி இருக்கா? மாத்திரை அதிகம் போடாம குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை அடிக்கடி குடிங்க...
World Hypertension Day 2023: இரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இந்த இரத்த அழுத்த பிரச்சனையை ஒருவர் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
சாதாரண இரத்த அழுத்தத்தின் அளவானது 120/80 மற்றும் 140/90-க்கு இடைப்பட்ட அளவில் இருக்கும். எப்போது 140/90-க்கு மேல் இரத்த அழுத்தம் செல்கிறதோ, அப்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்சன் என்றும் அழைப்பர்.

தற்போது நிறைய பேருக்கு மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம். இந்த உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள்.
இருப்பினும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஒருசில பானங்கள் உதவி புரியும். இன்று உலக ஹைப்பர்டென்சன் தினம் என்பதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பானங்கள் அல்லது ஜூஸ்கள் குறித்து காண்போம்.
தக்காளி ஜூஸ்
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பானம் தான் தக்காளி ஜூஸ். ஆய்வு ஒன்றின்படி, உப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்த அளவைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் தக்காளி ஜூஸ் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயம் குறைகிறது. எனவே ஹை பிபி உள்ளவர்கள் தக்காளி ஜூஸை தினமும் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
பீட்ரூட் ஜூஸ்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு அற்புதமான ஜூஸ் தான் பீட்ரூட் ஜூஸ். பீட்ரூட்டில் கலோரிகள் குறைவு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் என்பதால், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக பீட்ரூட்டில் உள்ள டயட்டரி நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கொண்டவர்கள் பீட்ரூட்டை ஜூஸாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
மாதுளை ஜூஸ்
நிறைய பேர் விரும்பி குடிக்கும் ஒரு ஜூஸ் தான் மாதுளை ஜூஸ். இந்த மாதுளை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும். மாதுளையில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் இருப்பது மட்டுமின்றி, இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இது ஒரு ACE தடுப்பானாகும். ACE என்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு நொதிப்பொருள் மற்றும் இது இரத்த நாளங்களை இறுக்கமாக்குகிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
செம்பருத்தி டீ
செம்பருத்தி டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் அந்தோசையனின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இவை இரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகின்றன. அதற்கு செம்பருத்தி பூக்களை நீரில் போட்டு 5-6 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக குடிக்கலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த ஆரஞ்சு பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் குடித்து வந்தால், ஏராளான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இந்த ஜூஸால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் கிடைப்பதோடு, இரத்த அழுத்தமும் பராமரிக்கப்படும்.
ஆப்பிள் சீடர் வினிகர் நீர்
உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் ஆப்பிள் சீடர் வினிகர் நீரைக் குடிப்பது நல்லது. அதற்கு ஒரு டம்ளர் சுடுநீரில் 5-10 துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
குறிப்பு: எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் இயற்கை வழிகளை நாடும் முன், மருத்துவரிடம் அதுக்குறித்து பேசி, அவரின் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











