Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
World Heart Day 2023: எந்த வயதில் இதய பரிசோதனை செய்ய வேண்டும்? யாரெல்லாம் அவசியம் செய்ய வேண்டும்?
World Heart Day 2023 In Tamil: சமீப காலமாக மாரடைப்பால் நிறைய பேர் உயிரிழக்கிறார்கள். உலகளவில் இதய பிரச்சனையானது வயதானவர்களிடம் மட்டுமின்றி, 20, 30 வயதினரிடையேயும் காணப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் தான் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதை தவிர்க்க சிறந்த வழி ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் வழக்கமான பரிசோதனைகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்துதல் ஆகும்.
முக்கியமாக ஏற்கனவே ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அல்லது பரம்பரையில் இதய பிரச்சனையைக் கொண்டவர்கள் இதய பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம், இதய நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை அளித்து, மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இதய தினத்தை முன்னிட்டு, இதய பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், இதய பரிசோதனைசெய்ய சரியான நேரம் எதுவென்பதைப் பற்றியும் காண்போம்.
இதய பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 1.79 கோடி இறப்புக்கு முக்கிய காரணம் இதய நோய்களாகும். அதுவும் இதில் 85% மரணம் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகிறது.
இந்தியாவில் இதயம் தொடர்பான நோய்களால் நிறைய பேர் மரணமடைவதற்கு காரணம், சரியான நேரத்தில் நோயை கண்டறியாமல் இருப்பதும், வாழ்க்கை முறை மாற்றங்களும் தான். ஆனால் இதய பரிசோதனைகளை வழக்காக செய்வதன் மூலம், இதய நோயை ஆடம்பத்திலேயே கண்டறிந்து, அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
எனவே நீங்கள் இதய நோயால் மரணமடையக்கூடாதெனில், வருடந்தோறும் முழு உடல் பரிசோதனைகளை செய்யுங்கள். இப்படி பரிசோதனைகளை செய்வதன் மூலம், உயிருக்கு ஆபத்தான நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்து சரிசெய்ய வசதியாக இருக்கும்.
யாரெல்லாம் தவறாமல் இதய பரிசோதனைகளை செய்ய வேண்டும்?
தற்போது மாரடைப்பு எந்த வயதினருக்கும் வருகிறது. எனவே இதய பரிசோதனைகளை செய்வதற்கு எந்த ஒரு வயது கட்டுப்பாடும் இல்லை. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசனின் கூற்றுப்படி, சில வகையான இதய பரிசோதனைகளை 20 வயதிலேயே செய்ய தொடங்க வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட வயதினர் வழக்கமாக இதய பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அதுவும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயம் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே ஒருவரை அமைதியாக கொல்லக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளாகும் மற்றும் இவை இரண்டும் இதய ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இப்பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கட்டாயம் இதய பரிசோதனைகளை வழக்கமாக கொள்ள வேண்டும்.
இதயத்தை பரிசோதிக்க சரியான நேரம் எப்போது?
வழக்கமான இதய பரிசோதனைகள் மற்றும் ஸ்க்ரீனிங்கை 20 வயதிலேயே தொடங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு 2-4 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனைகளை செய்ய வேண்டும். இது தவிர இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பிஎம்ஐ அளவு போன்றவற்றையும் 20 வயதில் இருந்தே சோதனை செய்ய வேண்டும்.
அதோடு 30 வயதுகளில் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஏனெனில் 30 வயதுகளில் உடலில் அனைத்துவிதமான பிரச்சனைகளும் எழத் தொடங்கும். இதற்கு காரணம் 30-களில் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் தான்.
இதய நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்
* இரத்த பரிசோதனைகள்
* எலக்ட்ரோகார்டியோகிராம் (ECG)
* உடற்பயிற்சி அழுத்த பரிசோதனை - இந்த சோதனையில் கடுமையான வேலைகளின் போது இதயம் எவ்வளவு கடினமாக வேலை செய்ய வேண்டும் என்பதை மதிப்பிடுகிறது.
* கரோனரி ஆஞ்சியோகிராம் அல்லது கரோனரி கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT)
* ஆஞ்சியோகிராம் - இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துவிட்டதா அல்லது அடைப்பு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்கும் சோதனையாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகள் இதய ஆரோக்கியத்தை கண்காணிக்க செய்யப்படும் பரிசோதனைகளாகும். எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வருடம் ஒருமுறை தவறாமல் இதய பரிசோதனைகளை செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











