Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
World Asthma Day 2024: உங்களுக்கு ஆஸ்துமா இருக்குதா? அப்ப இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
World Asthma Day 2024: ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய்கள் வீங்கி குறுகியிருக்கும் ஒரு நிலையாகும். இந்நிலையில் அதிகப்படியான சளியும் உற்பத்தி செய்யப்படலாம். இந்த ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள். ஒருவருக்கு ஆஸ்துமா இருந்தால், அது இருமல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போது விசில் சப்தம் போன்றவற்றை உண்டாக்கும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் ஆஸ்துமாவானது கிட்டத்தட்ட 262 மில்லியன் மக்கள் பாதித்ததோடு, 455,000 இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு மோசமான ஆஸ்துமா பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று ஆஸ்துமா தினம். ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டும் தூண்டப்படுவதில்லை. ஒருசில உணவுகளாலும் தூண்டப்படும். எனவே ஆஸ்துமா நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களின் நிலையை மோசமாக்கும். இப்போது அந்த உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.
1. முட்டை
என்ன தான் முட்டை ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், முட்டையும் ஆஸ்துமாவை தூண்டும் என்பது தெரியுமா? ஆம், எப்படியெனில் முட்டையை சாப்பிடும் போது, நமது உடல் முட்டையில் உள்ள புரோட்டீன்களுக்கு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இந்த ஆன்டிபாடிகள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் மற்றும் முட்டைகளுக்கு ஒவ்வாமை இருந்தால், முட்டை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் ஆஸ்துமா நிலை தீவிரமடையலாம்.
2. மீன்
முட்டைக்கு அடுத்தப்படியாக, மீன்களும் ஆஸ்துமாவை தூண்டலாம். ஏனெனில் மீனில் பார்வால்புமின் என்ற புரோட்டீன் உள்ளது. இந்த பார்வால்புமின் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். அதுவும் மீன் சேராதவர்கள் இவற்றை உண்ணும் போது, அது ஆஸ்துமாவைத் தூண்டலாம். எனவே ஆஸ்துமா இருந்தால், மீனை சாப்பிடும் முன் மருத்துவரிடம் இதுக்குறித்து கேட்டுக் கொள்வது நல்லது.
3. கோதுமை
சிலருக்கு கோதுமை அழற்சியை ஏற்படுத்தும். இப்படி கோதுமை சேராதவர்கள் அவற்றை உட்கொண்டால், சில சமயங்களில் அது ஆஸ்துமாவைத் தூண்டலாம். இதற்கு கோதுமையில் உள்ள புரோட்டீன் முக்கிய காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த புரோட்டீனானது காற்றுப்பாதைகளை எரிச்சலடையச் செய்து வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது கோதுமை பல உணவுகளில் காணப்படுகிறது. எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் கோதுமையை உணவில் சேர்க்கும் முன், ஒருமுறை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
4. மாட்டுப் பால்
பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் மாட்டுப் பால் ஆஸ்துமாவைத் தூண்டும் ஒரு பொதுவான உணவுப் பொருளாகும். சொல்லப்போனால், சுமார் 80 சதவீத குழந்தைகளுக்கு மாட்டுப் பால் ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே உங்களுக்கு ஆஸ்துமா இருந்து மற்றும் தினமும் மாட்டுப் பாலை குடித்து வந்தால், உங்களுக்கு ஆஸ்துமா அறிகுறிகள் தீவிரமாக நிறைய வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி சளி பிடிப்பது, சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால், மாட்டுப் பாலை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
5. வேர்க்கடலை
வேர்க்கடலை ஒரு சுவையான ஸ்நாக்ஸாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு வேர்க்கடலை ஆஸ்துமாவைத் தூண்டலாம். ஏனெனில் வேர்க்கடலையில் உள்ள புரோட்டின் சுவாசப் பாதைகளில் அழற்சியை ஏற்படுத்தி, ஆஸ்துமா அறிகுறிகளை தீவிரப்படுத்தலாம். எனவே உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிட்ட பின் ஏதாவது வித்தியாசமான அறிகுறிகளை உணர்ந்தால், உடனே வேர்க்கடலையை உங்கள் உணவில் இருந்து அகற்றுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
