Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
மாத்திரை போடாமலே பிசிஓடி-யை சரிசெய்யணுமா? அப்ப அக்குபஞ்சரை ட்ரை பண்ணுங்க.. கூறும் டாக்டர் ஆனிஷா..
Womens Day 2025: தற்போது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக பிசிஓடி என்னும் பாலிசிஸ்டிக் ஓவரி நோய் உள்ளது. இதை தமிழில் சினைப்பை நீர்க்கட்டிகள் என்பர். இந்த பிசிஓடி ஹார்மோன் சமநிலையின்மையால் வரக்கூடிய ஒரு நிலையாகும். இந்த பிரச்சனையால் தற்போது நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருமணமான பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படும் போது, அதன் விளைவாக கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும் இந்த பிசிஓடி பிரச்சனை கொண்ட பெண்கள், அதை சரிசெய்வதற்காக மருத்துவரை நாடும் போது, நிறைய மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த பிசிஓடி பிரச்சனைக்கு மாத்திரை எதுவும் போடாமல் அக்குபஞ்சர் மூலம் திறம்பட சிகிச்சை அளித்து சரிசெய்துவிடலாம் என்று அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர்.எம். ஆனிஷா சபிகா கூறியுள்ளார். அதுவும் திருமணமான பெண்களிடையே உள்ள பிசிஓடி பிரச்சனையை சரிசெய்து, கருத்தரிக்க வைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பெண்களை கொண்டாடும் வகையில் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பெண்கள் சந்திக்கும் பிசிஓடி பிரச்சனையை எப்படி அக்குபஞ்சர் மூலம் சரிசெய்யலாம் என்று அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர்.எம். ஆனிஷா சபிகா தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
அக்குபஞ்சர் என்றால் என்ன?
இயற்கையாகவே நமது உடலில் 361 புள்ளிகள் இருக்கும். இந்த புள்ளிகளே எந்த நோயாக இருந்தாலும் அதை சரிசெய்துவிடும். இந்த புள்ளிகளை தூண்டிவிடும் ஒரு சிகிச்சை முறை தான் அக்குபஞ்சர். இந்த அக்குபஞ்சரை 'குத்தூசி மருத்துவம்' என்று அழைப்பர். இந்த சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள புள்ளிகளில் ஊசிகளை குறிப்பிட்ட நேரம் வரை சொருகி தூண்டிவிடப்படும். அதுவும் நோயின் தன்மை, இடம் பொறுத்து நேரமும், ஊசியின் அளவும் மாறுபடும்.
பிசிஓடி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
பிசிஓடி என்பது சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் சரியான வளர்ச்சி பெற்று சினைப்பையில் இருந்து வெளிவராமல் இருக்கும் போது, அந்த சினைப்பையின் வெளியில் நீர்க்கட்டிகள் ஏற்படும். இவ்வாறு நீர்க்கட்டிகள் உருவாகும் போது, உடலில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்பட்டு, அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும். வயது வந்த ஒரு பெண்ணுக்கு பிசிஓடி பிரச்சனை இருந்தால், அந்த பெண்ணிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகத்தில் முடி வளர்வது, முகப்பரு போன்ற அறிகுறிகள் தெரியும்.
இந்த பிசிஓடி பிரச்சனையை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மட்டுமே அறிய முடியும். அதுவும் நீர்க்கட்டியின் அளவு 10-12 cmm இருந்தால், அப்பெண்ணுக்கு பிசிஓடி என்று அர்த்தம். இந்த பிசிஓடி பிரச்சனையானது வயது வந்தது முதல் நடுத்தர வயதினர் வரை எந்த வயதினரையும் தாக்கலாம் என்று டாக்டர் ஆனிஷா கூறியுள்ளார்.
குழந்தைகள் ஏன் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்?
பெண் குழந்தைகள் இந்த பிசிஓடி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் அதிகம் ஓடியாடி விளையாமல் இருப்பது, ஜங்க் உணவுகளை உண்பது, தூக்க சுழற்சியில் மாற்றம் மற்றும் வயிற்று பகுதிக்கு அருகே கேட்ஜெட்டுகளின் பயன்பாடு போன்றவை தான். வயது வந்த பெண் பிள்ளைகள் பிசிஓடி பிரச்சனையைக் கொண்டிருந்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி தான் முதன்மையான அறிகுறியாகும். அதுவே திருமணமானவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியுடன், கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று ஆனிஷா கூறியுள்ளார்.
பிசிஓடி பிரச்சனைக்கு அக்குபஞ்சரில் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பொதுவாக பிசிஓடி என்பது அதிக உடல் சூட்டினால் வரக்கூடிய நீர்க்கட்டிகளாகும். இப்படி அதிக சூட்டினால் வரக்கூடிய சினைப்பை நீர்க்கட்டிகளை கரைக்க வேண்டுமானால், உடலில் உள்ள குளிர்ச்சியான புள்ளிகளை தூண்டி, அந்த கட்டிகளை கரைய வைப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும், ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யவும் சிகிச்சை அளிக்கப்படும்.
நமது உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பஞ்சபூத புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளுள் குளிர்ச்சியான புள்ளிகளை ஊசியின் மூலம் குத்தி தூண்டிவிடுவதன் மூலம், கருப்பை நீர்க்கட்டிகளானது உடையத் தொடங்கும். ஆரம்பத்திலேயே பிசிஓடி பிரச்சனைக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால், குறுகிய காலத்தில் இப்பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமாகலாம் என்றும் ஆனிஷா கூறியுள்ளார்.
அக்குபஞ்சர் சிகிச்சையில் டயட் ஏதேனும் உள்ளதா?
பிசிஓடி பிரச்சனைக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால், ஒருசில உணவுகள் பரிந்துரைக்கப்படும். அந்த உணவுகளை தவறாமல் உட்கொண்டு வர வேண்டும். அந்த உணவுகளாவன முளைக்கட்டிய பயிர்கள், கீரை வகைகள், சிறுதானிய உணவுகள் போன்றவை. அதுவும் ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப அக்குபஞ்சர் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை தவறாமல் உட்கொண்டு வந்தால், பிசிஓடி பிரச்சனையைத் தவிர்க்கலாம் என்று ஆனிஷா கூறியுள்ளார்.
எனவே பிசிஓடி பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை எடுக்க பிடிக்காவிட்டால், எவ்வித பக்கவிளைவும் இல்லாத அக்குபஞ்சர் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











