Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நெஞ்சு சளியைக் கரைத்து வெளியேற்றணுமா? இந்த 3 டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க போதும்...
Winter Health Tips In Tamil: குளிர்காலத்தில் நிறைய பேர் சளி பிரச்சனையால் அவதிப்படுவார்கள். சளி பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், பின் அதைத் தொடர்ந்து தொண்டைப் புண், சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்கள் குளிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். இத்தகைய நிலையில் இவர்கள் சளி அதிகரிக்காமல் இருக்க சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த சளி அதிரித்து, பின் நிலைமையை மோசமாக்கிவிடும்.
சளியைக் குறைக்க இயற்கை வைத்தியத்தில் பல்வேறு வைத்தியங்கள் உள்ளன. அதில் ஒன்று மூலிகை மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு டீக்களை தயாரித்து குடிப்பது. இப்படியான டீக்களை ஒருவர் குளிர்காலத்தில் குடித்து வந்தால், அது நெஞ்சு சளியைக் குறைப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இப்போது ஒன்லிமைஹெல்த் என்ற தளத்திற்கு ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா நெஞ்சு சளியைக் குறைக்க உதவும் 3 மூலிகை டீக்களைப் பற்றியும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும் கூறியுள்ளார். அந்த டீக்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. இஞ்சி துளசி டீ
இஞ்சி, துளசி ஆகிய இரண்டுமே ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட பொருட்களாகும். இவ்விரண்டும் ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களாகும். குறிப்பாக இந்த இரண்டு பொருட்களும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ளவும், சளியைக் குறைக்கவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
அதுவும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொண்டைப் புண் மற்றும் சளியைக் குறைக்க உதவுகிறது. அதேப் போல் துளசியில் ஆன்டி-பாக்ரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகின்றன.
இப்படிப்பட்ட துளசியின் 6 இலைகளை எடுத்து, 1 கப் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும்.
2. மஞ்சள் மற்றும் பட்டை டீ
மஞ்சள், பட்டை ஆகிய இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. அதுவும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. அதேப்போல் பட்டையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. இவ்விரண்டையும் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளியைக் குறைக்கவும் உதவும்.
அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு ஒருமுறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், இந்த டீ உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது, சளியைக் குறைக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3. அதிமதுரம் மற்றும் கிராம்பு டீ
அதிமதுரம், கிராம்பு ஆகிய இரண்டுமே சளியைக் குறைத்து, தொண்டை வலியை சரிசெய்யும் ஆற்றலைக் கொண்டது. அதுவும் அதிமதுரத்தில் ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளன. அதேப் போல் கிராம்பில் உள்ள மருத்துவ பண்புகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட அதிமதுரம் மற்றும் பட்டைக் கொண்டு டீ தயாரித்து குளிர்காலத்தில் குடித்து வந்தால், குளிர்காலத்தில் சந்திக்கும் சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
அதற்கு ஒரு கப் நீரில் சிறிய துண்டு அதிமதுரம் மற்று 2-3 கிராம்புகளை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது தொண்டை மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications