உங்களுக்கு அடிக்கடி பயங்கரமா தலைவலிக்குதா? அப்ப இத வீட்டுல பண்ணுங்க...உடனே சரியாகிடும்..!

பண்டைய காலம் முதல் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சில பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை மோசமான தலைவலியை சரிசெய்வது மட்டுமல்லாமல், உங்களுக்கு தலைவலி அடிக்கடி ஏற்படுவதையும் தடுக்கும்.

இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். பரபரப்பான வாழ்க்கை முறை, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது, செல்போன், டீவி மற்றும் கணினியில் அதிகப்படியான நேரம் செலவிடுவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை உங்களுக்கு மோசமான அல்லது கடுமையான தலைவலியை ஏற்படுத்தலாம்.

இந்த அனைத்து வாழ்க்கை முறை சிக்கல்களின் விளைவாக உங்களுக்கு தலைவலி ஏற்படும்போது, அந்த ஆரோக்கியமற்ற பழக்கங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேலும், தலைவலியை சமாளிப்பது என்பது மிகவும் கடினம். இது நம் மனநிலை மற்றும் அன்றைய நாளை வெகுவாக பாதிக்கும்.

Which Spice is Good For Headache in Tamil

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் திடீர் தலைவலியை சமாளிக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது தற்காலிமாக உங்களுக்கு தீர்வு தந்தாலும், சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதைப் பற்றி நீங்கள் என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? உங்கள் தலைவலியை வீட்டிலையே நீங்கள் குறைக்கலாம், இதற்காக மருத்துவமனை அல்லது மெடிக்கலுக்கு செல்லவோ வேண்டியதில்லை. உங்கள் சமையலறைக்கு சென்றாலே போதும்.

பண்டைய காலம் முதல் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சில பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை மோசமான தலைவலியை சரிசெய்வது மட்டுமல்லாமல், உங்களுக்கு தலைவலி அடிக்கடி ஏற்படுவதையும் தடுக்கும். எந்த மூன்று மசாலாக்கள் இயற்கையாகவே மோசமான தலைவலியை சரிசெய்ய உதவும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

இலவங்கபட்டை

மிகவும் பிரபலமான இலவங்கப்பட்டை மசாலா, தினசரி சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மசாலாவை உங்கள் பானங்கள் அல்லது தேநீரில் அறிமுகப்படுத்துவதன் மூலமோ அல்லது நெற்றியில் தடவுவதன் மூலமோ, மோசமான தலைவலியை சரிசெய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மை. உங்களுக்கு இது நம்பமுடியாததாகத் தோன்றலாம். ஆனால் இந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த மசாலா நரம்பு மண்டலத்தை அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் மற்றும் வலுவான நறுமணத்துடன் குணப்படுத்த உதவுகிறது.

தலைவலியைப் போக்க உங்கள் கிரீன் டீயில் சிறிதளவு இலவங்கப்பட்டை அல்லது அதன் தூளை சேர்க்கவும். மேலும், இலவங்கப்பட்டை தூளில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட்டாக தயார் செய்துகொள்ளவும். அதை உங்கள் நெற்றியில் தடவி 30 நிமிடங்கள் படுத்து ஓய்வெடுங்கள். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இவ்வாறு செய்தால் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி

ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இஞ்சி உங்கள் தலைவலியை குறைக்க உதவும். உங்களுக்கு தலைவலி இருந்தால், இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடியுங்கள். இது தலைவலியை திறம்பட குறைக்க உதவும். வெதுவெதுப்பான இஞ்சி டீயை குடிப்பது தலைவலியால் ஏற்படும் இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். சளி அல்லது காய்ச்சலினால் தலைவலி ஏற்பட்டால், இஞ்சிச் சாறு, கருப்பட்டி வெல்லம், எலுமிச்சைச் சாற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வைத்து இஞ்சி மாத்திரைகளைத் தயாரிக்கலாம். இது உங்கள் நாசிப் பாதையில் இருக்கும் சளியை அகற்ற உதவுகிறது.

கிராம்பு

இந்த பொதுவான சமையலறை மசாலா மோசமான தலைவலியை குணப்படுத்த உதவும். புதினா இலைகள் மற்றும் கிராம்புகளுடன் மசாலா தேநீரை வீட்டிலையே தயார் செய்யலாம். கிராம்பின் வலுவான பண்புகள் தலையின் இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்கவும் வலியை சரிசெய்யவும் உதவும். சளி மற்றும் இருமல் சார்ந்த தலைவலி ஏற்பட்டால், ஒரு துணியை எடுத்து, அரைத்த கிராம்புகளுடன் கருஞ்சீரக விதைகளை வைத்து, துணியால் கட்டி, அதன் சாரத்தை உள்ளிழுக்க வேண்டும். இது நெரிசலைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், சைனஸ் சார்ந்த தலைவலியையும் சரிசெய்யும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, March 18, 2023, 14:30 [IST]
Desktop Bottom Promotion