Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
தினமும் பப்பாளி சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Papaya Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கை நமக்கு அளித்த மிகச்சிறந்த மற்றும் சுவையான உணவு தான் பழங்கள். இந்த பழங்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஒருவர் தினமும் தங்களது உணவில் ஏதாவது ஒரு பழத்தை சேர்த்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
சொல்லப்போனால் பழங்களிலேயே வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய மிகவும் விலைக்குறைவான ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளன. அதோடு இப்பழத்தில் கொழுப்புக்களும் இல்லை. இப்படிப்பட்ட பப்பாளி பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடலினுள் ஏராளமான நல்ல மாற்றங்களைக் காணக்கூடும்.

முக்கியமாக இந்த பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இந்த பழத்தை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் புற்றுநோயின் அபாயம் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும். இப்படிப்பட்ட பப்பாளி பழத்தை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.
செரிமானம் மேம்படும்
பப்பாளியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. எனவே இதுவரை மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பப்பாளியை தினமும் உட்கொள்ளும் போது, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் இதில் பாப்பைன் அதிகம் உள்ளது. இது உண்ணும் உணவில் உள்ள புரோட்டீன்களை உடைத்தெறித்து செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் பப்பாளி நெஞ்செரிச்சல் அறிகுறிகளை குறைக்கவும், தடுக்கவும் உதவுகிறது.
பார்வை மேம்படும்
தினமும் பப்பாளி பழத்தை உட்கொண்டு வந்தால், பார்வை வலுபெறும். ஏனெனில் பப்பாளியில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான லைகோபைன், லுடீர் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள லைகோபைன் கண்களில் உள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுவதையும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் தடுக்கிறது. முக்கியமாக பப்பாளி கண் புரை அபாயத்தைத் தடுக்க உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடாதெனில், பப்பாளி பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள்.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
பப்பாளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழங்களுள் ஒன்றாகும். மேலும் பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்க உதவுகிறது மற்றும் மன நிறைவை அளிக்க உதவுகிறது. அதோடு இதில் லைகோபைனும் உள்ளது. இது டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் இருந்து, அதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வந்தால், உணவில் பப்பாளியை சேர்த்து வரலாம்.
புற்றுநோயைத் தடுக்கும்
பப்பாளி பழத்தில் லைகோபைன் என்னும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழத்தை உட்கொண்டு வந்தால் அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தைக் குறைக்கிறது. முக்கியமாக பப்பாளி ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், பப்பாளியை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
உடல் வீக்கம் குறையும்
பப்பாளி பழத்தை தினமும் ஒரு பௌல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலினுள் வீக்கத்திற்கு வழிவகுக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராட உதவுகின்றன. இப்படி உடலினுள் வீக்கங்கள் அதிகமாக இருந்தால், அது ஆர்த்ரிடிஸ், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய், அல்சைமர் நோய் போன்ற பல நிலைமைகளுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











