Latest Updates
-
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
பெண்களே! உங்க பிராவை துவைக்காமல் மீண்டும் மீண்டும் யூஸ் பண்ணா... என்ன நடக்கும் தெரியுமா?
உங்கள் உள்ளாடைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கந்தையானாலும் கசக்கி கட்டு என்பார்கள் அதற்கேற்ப ஆடைகளை சுத்தம் செய்து அணிவது அவசியம். ஏனெனில் அதிகப்படியான வியர்வையால் இந்த உள்ளாடைகள் சீக்கிரமே பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
அதிலும் நிறைய பெண்கள் ஒரே பிராவை இரண்டு மூன்று நாட்களுக்கு பயன்படுத்துவது உண்டு. உண்மையில் பிராக்களை சரியாக துவைக்காமல் பயன்படுத்துவது உங்களுக்கு ஏகப்பட்ட சரும பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிராக்களில் படியும் வியர்வைகளால் உங்களுக்கு பாக்டீரியா தொற்று, வியர்வை துர்நாற்றம் மற்றும் மார்பக பகுதியில் அரிப்பு, மார்பக பகுதியின் மடிப்பில் நிறமாற்றம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே பெண்களே பிராக்களை சரியாக துவைக்காமல் அணிவதால் எந்த மாதிரியான பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
சரும பிரச்சனைகள்
உங்கள் பிராவை நீங்கள் துவைக்காமல் இருக்கும் போது அதில் உங்கள் வியர்வைகள், அழுக்குகள், எண்ணெய்கள் மற்றும் தூசிகள் எல்லாம் படிய ஆரம்பிக்கும். இதன் காரணமாக பிராவில் பூஞ்சை மற்றும் பல்வேறு வகையான நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சியை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவை சரும பிரச்சனைகளை உண்டாக்கும் என சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரும தொற்று அல்லது சொறி பிரச்சினைகள்
சரும எரிச்சலுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக அழுக்கு ஆடைகளை அணிவது இருக்கிறது. எனவே நுண்ணுயிர்கள் அதிகளவில் உள்ள பிராவை அப்படியே அணியும் போது உங்களுக்கு சரும எரிச்சல் மற்றும் சொறி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் உங்கள் சருமம் சிவந்து போய் அரிக்க ஆரம்பித்து விடும்.
மார்பக காம்பு வெடிப்பு
அழுக்கு பிராவை அணிவதால் மார்பக காம்பு வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பிராவில் உள்ள வியர்வை உங்கள் மார்பக காம்புகளை வறண்டு போகச் செய்து வெடிப்புக்கு உள்ளாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மார்பக காம்புகளில் வலி உண்டாகும் என எச்சரிக்கிறார்கள் சரும நிபுணர்கள்.
மார்பகப் பகுதியில் பருக்கள் உண்டாகும்
உங்கள் ஸ்போர்ட்ஸ் பிராவையோ அல்லது சாதாரண பிராவையோ மீண்டும் மீண்டும் துவைக்காமல் பயன்படுத்தும் போது மார்பகப் பகுதியில் பருக்கள் உண்டாகக் கூடும். உங்கள் பிராவை நீங்கள் துவைக்காமல் பயன்படுத்தும் போது அதிலுள்ள அழுக்குகள் உங்கள் சரும துளைகளை அடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பிராவில் உள்ள பாக்டீரியாக்கள் உங்களுக்கு பருக்களை உண்டாக்க நேரிடும். இது காலப்போக்கில் முகப்பரு வெடிப்புக்கு வழி வகுக்கும். மேலும் இறுக்கமான பிராவை அணிந்து உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு உராய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த உராய்வு வெப்பத்தால் முதுகெலும்பு, மார்பக பகுதி மற்றும் விலா எலும்பு பகுதிகளில் பருக்கள் வெடிக்க தொடங்கும்.
உடல் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது
நீங்கள் அழுக்கு பிராவை மேலும் மேலும் அணியும் போது அது ஒரு கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் சங்கடத்தை சந்திக்கலாம். உங்களுக்கும் வெளியே செல்ல சங்கடமாக இருக்கும். எனவே இந்த துர்நாற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றால் நன்றாக சுத்தம் செய்த பிராக்களை அணிந்து செல்லுங்கள். அவ்வப்போது பிராக்களை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்.
உங்கள் பிராக்களில் கறை படிய ஆரம்பிக்கும்
உங்கள் துர்நாற்றத்தை மறைக்க நீங்கள் டியோடரெண்டுகளை அல்லது வாசனை திரவியங்களை நாடலாம். ஆனால் அது உங்களுக்கு தற்காலிகமாக வாசனையை தரும். ஆனால் காலப்போக்கில் அது உங்கள் பிராவை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. அது உங்கள் பிராவில் கறைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
உங்கள் பிராவின் ஹூக் பகுதி துருப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. டியோடரெண்டுகளில் உள்ள இராசயன கலவை பிராக்களில் மஞ்சள் கறைகளை ஏற்படுத்தும். நீங்கள் என்ன தான் துவைத்தாலும் இந்த கறை நீங்காது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
உங்களுக்கு வியர்க்கவில்லை என்றால் கூட உங்கள் பிராவை அடிக்கடி துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிராவை இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்தக் கூடாது. ஒரு பிராவை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்துங்கள். துணிகளை சேதப்படுத்தாத சோப்புக் கொண்டு பிராவை துவைத்து உலர வையுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


