Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
இரத்தம், நிறம், வாசனை - இவற்றில் எதைக் கொண்டு கொசுக்கள் ஒருவரை கடிக்குது-ன்னு தெரியுமா?
Reasons Mosquitoes Bite Some People: கொசுக்கள் அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், மிகவும் கொடியவை. அதுவும் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கொசுக்களால் நிறைய நோய்கள் தற்போது பரவிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால், நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, கொசுக்களானது உலகிலேயே மிகவும் ஆபத்தான கொடிய விலங்குகள்.
ஏன் இப்படி கூறப்படுகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில் கொசுக்களானது மிகவும் கொடிய மற்றும் உயிரைப் பறிக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை பரப்புகின்றன. அதில் சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு, ஜிக்கா, வெஸ்ட் நைல் வைரஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வைரஸ் தொற்றுகளானது காலநிலை மாற்றத்தின் போது அதிகம் பரவும். அதில் சில முன்னெப்போதையும் விட அதிகமாக பரவவும் வாய்ப்புள்ளன.

சரி, கொசுக்கள் இப்படி மனிதர்களை அதிகம் கடிக்க எது காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதில் ஒருவரது இரத்த வகை, உடுத்தும் ஆடையின் நிறம் போன்றவைகள் தான் காரணமாக இருக்கக்கூடும் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். உண்மையில், கொசுக்களை மனிதர்களிடம் ஈர்ப்பது எது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஆய்வு
கொசுக்கள் மனிதர்களை எப்படி தாக்குகிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றில், கொசுக்களால் வாசனை மற்றும் நிறம் ஆகிய இரண்டையும் உணர்ந்து கண்காணிக்க முடிவது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் நீங்கள் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கொசுக்களானது உங்களை மட்டும் குறி வைத்து தாக்கிக கொண்டிருந்தால், அது நீங்கள் அணிந்திருக்கும் உடையின் நிறமோ அல்லது உங்களின் வாசனை காரணமாக இருக்கலாம்.
நிறங்கள்
கொசுக்கள் குறிப்பிட்ட சில நிறங்களுக்கு ஈர்க்கப்படுகின்றன. வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்க்க நிபுணர்கள் நடத்திய ஆய்வில், சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதற்கு பல காரணங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒன்று தான் நிறங்கள். அதுவும் சிவப்பு, கருப்பு போன்ற நிறங்கள் கொசுக்களை ஈர்ப்பதாகவும், பச்சை, வெள்ளை போன்ற நிறங்களை கொசுக்கள் விரும்புவதில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாசனை
எப்படி கொசுக்கள் குறிப்பிட்ட நிறங்களால் ஈர்க்கப்படுகிறதோ, அதேப் போல் சில வகையான வாசனைகளாலும் ஈர்க்கப்படும். உங்கள் அருகில் இருப்பவர்களை கொசுக்கள் கடிக்காமல் உங்களை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிக்கிறது என்றால், அதற்கு உங்கள் மீது வீசும் வாசனையும் காரணமாக இருக்கலாம். குறிப்பாக இப்படி வாசனையைக் கொண்டு பெண் கொசுக்கள் தான் அதிகம் கடிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதுவும் வியர்வையில் இருந்து வெளியேற்றப்படும் வாசனை, கெமிக்கல்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்றவற்ளின் வாசனையைக் கொண்டு கொசுக்கள் மனிதர்களை குறி வைத்து தாக்குகின்றன.
முக்கியமாக கொசுக்களும் சிறப்பான கற்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்த ஆற்றலைக் கொண்டு தான், அவைகளால் நேர்மறை மற்றும் எதிர்மறை தொடர்புகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இதைக் கொண்டு தான் கொசுக்கள் மீண்டும் மீண்டும் ஒருவரை கடிக்க கற்று கொள்கின்றன. இது தவிர, கொசுக்கள் பல வகையான சர்க்கரை மூலங்களாலும் ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாக பழங்களின் இனிப்புச் சுவையின் வாசனையால் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கொசுக்களை ஈர்ப்பது என்னவென்பதை அறிந்து, அவற்றை விலக்கி வைத்தால், கொசுக்கள் கடிப்பதைத் தவிர்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications