Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கொரோனா நோயாளிகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க இன்னும் முழுசா குணமாகலனு அர்த்தம்....!
நமது வாழ்க்கையை கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் என பிரிக்கும் அளவிற்கு கொரோனா நம் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் நாம் முழுதாக வெளிவர முடியாமல் இருக்கும் போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 லிருந்து மீண்டு வந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் நீண்டகால விளைவுகளை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். இந்த தொற்று பல COVID-19 நோயாளிகளுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில அறிகுறிகள் மிகவும் கடுமையானவை, அதிலிருந்து மீள முடியாது என்று கூறப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சேதம் குறையலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிட் குணமடைந்த பிறகும் நுரையீரலில் தொடரக்கூடிய சில பிரச்சினைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்
முழுமையான இதயம் மற்றும் நுரையீரல் பரிசோதனைகள் சில COVID-19 தொற்றிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் ஏன் இன்னும் மூச்சுத் திணறலை அனுபவிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவும். ஆய்வுகளின் படி பல நோயாளிகள் நுரையீரல் செயல்பாடு சோதனைகள், எக்கோ கார்டியோகிராம்கள், மார்பு எக்ஸ்-கதிர்கள் அல்லது நிலையான செயல்பாட்டு சோதனைகள் போன்ற வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர், ஆனால் முடிவுகள் எல்லாம் இயல்பாக இருப்பதாக கூறியது, மேலும் மூச்சுத்திணறலுக்கான காரணத்தை அவற்றால் கண்டறிய இயலவில்லை.
நுரையீரலில் திரவம் இருப்பது
கோவிட்-19 நோயாளிகளின் நுரையீரலில் அதிகப்படியான திரவம் இருக்கும், இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. நோயின் ஆரம்ப கட்டங்களில், கோவிட்-19 நோயாளிகளின் நுரையீரலில் கசியும் புரத திரவம் சில காலம் நீடிக்கும்.
கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி
உலகெங்கிலும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில், COVID-19 தொற்றுநோய் கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆரம்ப அறிக்கைகளின்படி, கோவிட்-19-தொடர்புடைய ARDS முந்தைய ARDSல் இருந்து பல வழிகளில் வேறுபடுகிறது.
ஒரு வருடம் வரை பாதிப்புகள் இருக்கலாம்
நிமோனியாவை உண்டாக்கும் சுவாச நோயான COVID-19 மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைப் போலவே குறுகிய கால நுரையீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும். சேதம் மிகவும் கடுமையானதாக இருந்தால், அது குணமடைய நீண்ட காலமாகலாம். உண்மையில், நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, மூன்றில் ஒரு பங்கு COVID நோயாளிகள் நுரையீரல் பரிசோதனையின் போது வடுக்களை உணர்வதாக ஆய்வுகள் கூறுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
