Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
தினமும் உடற்பயிற்சி செய்வீங்களா? அப்ப தினமும் மாலையில் செய்யுங்க... எதுக்கு-ன்னு படிச்சு பாருங்க..!
உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். பெரும்பலான மக்கள் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.
வொர்க்அவுட்டிற்கு எது நல்ல நேரம் என்பது எப்போதும் விவாதத்திற்குரிய தலைப்பாகவே இருந்துவருகிறது. சில உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் காலையில் முதலில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது என்றும் இன்னும் சிலர் மாலை நேர உடற்பயிற்சிகள் தகுதியானவை என்றும் பரிந்துரைக்கின்றனர்.

வொர்க்அவுட்டிற்கான இரண்டு விருப்பங்களையும் கருத்தில் கொண்டு, மாலை நேர உடற்பயிற்சியுடன் தொடர்புடைய சில நன்மைகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தினமும் மாலை நேரத்தில் உடற்பயிற்சியை ஏன் சேர்க்க வேண்டும் என்பதை அறிய இக்கட்டுரையைப் படியுங்கள்.
மன அழுத்தத்தை போக்கக்கூடியது
பொதுவாக நாளின் தொடக்கத்தில் நீங்கள் மன அழுத்ததை உணர்கிறீர்கள் எனில், அது அந்த நாள் முழுவதும் இருக்கும். மாலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, நாள் முழுவதும் நீங்கள் குவிந்திருக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
உடல் பதற்றத்தை குறைக்கிறது
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடலின் தசைகளை கடினமாக்குகிறது. மாலையில் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, இந்த பதற்றத்தை உடைத்து உடலை எளிதாக்க உதவுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடல் சரியாக தூங்குவதைத் தடுக்கிறது. எனவே மிதமான தீவிர உடற்பயிற்சி செய்வது உங்களை தூங்க வைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரம் உள்ளது
மாலை நேர உடற்பயிற்சிகள் சிறந்த விருப்பங்களாகும். ஏனெனில் அவை உடற்பயிற்சி செய்ய அதிக நேரம் கொடுக்கின்றன. பணியிடத்திற்குச் செல்வது அல்லது பயணத்தைப் பற்றி கவலைப்படுவது போன்ற மன அழுத்தம் உங்களுக்கு மலை நேரத்தில் இருக்காது. பெரும்பாலான மக்களுக்கு மாலை நேரத்தில் பெரிதாக எந்த வேலையும் இருக்காது. எனவே, இது உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாக அமைகிறது.
நீங்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது
காலையில் செய்வதை விட மாலை நேரத்தில் உங்கள் உடற்பயிற்சிகளை சிறப்பாக நீங்கள் செய்ய முடியும். இதில் மன அழுத்த காரணி முக்கிய பங்கு வகிக்கிறது. மாலை நேரத்தில், நீங்கள் உங்கள் வேலையை முடித்தவுடன், நீங்கள் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள். மன அழுத்தம் இல்லாததால் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும்.
மாலை நேர உடற்பயிற்சிகள் அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது
2022 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, மாலை நேர உடற்பயிற்சிகள் ஆண்களுக்குச் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஏனெனில் இது அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. இது பெண்களின் தசைகளின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
காலை உடற்பயிற்சி பெண்களின் அடிவயிற்று கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மாலை நேர உடற்பயிற்சி பெண்களின் தசை செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் ஆண்களில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இறுதிக்குறிப்பு
வொர்க்அவுட் செய்யும் நேரம் மாறி இருந்தாலும், தனிப்பட்ட அனுபவத்தை பெரிதும் நம்பியிருந்தாலும், அது எந்த நாளில் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. உங்கள் வொர்க்அவுட்டில் இருந்து அதிக பலன்களைப் பெற, சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரிடமிருந்து விரிவான உடற்பயிற்சி பகுப்பாய்வைப் பெற வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
