Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...
யோகா ஒருவரது உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, அதிகரிக்கவும் உதவும். மேலும் யோகா ஒருவரது தசையின் அளவை அதிகரிப்பதோடு, உடலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு உடல் எடையைக் குறைக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதேப்போல் உடல் எடையை அதிகரிப்பதிலும் ஆர்வம் காட்டும் மக்களும் உள்ளனர். ஒல்லியாக இருக்கும் பலருக்கும் நாம் குண்டாகமாட்டோமா என்ற ஏக்கம் இருக்கும். ஏனெனில் ஒல்லியாக இருப்பவர்கள் என்ன தான் கலோரி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும், அவர்களால் ஒரு கிலோ கூட எடை அதிகரித்துக் காட்ட முடியாது.

அத்தகையவர்களுக்கு யோகா மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் யோகா ஒருவரது உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, அதிகரிக்கவும் உதவும். மேலும் யோகா ஒருவரது தசையின் அளவை அதிகரிப்பதோடு, உடலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். இப்போது உடல் எடையை அதிகரிக்க உதவும் யோகா நிலைகள் எவையென்று காண்போம்.

புஜங்காசனம்
* இந்த ஆசனம் செய்வதற்கு படத்தில் காட்டியவாறு முதலில் குப்புறப் படுக்க வேண்டும்.
* பின் கைகளை படத்தில் காட்டியவாறு முன்புறம் வைத்து நீட்டி, உடலை மேலே தூக்க வேண்டும்.
* இந்நிலையில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.
* இப்படி 2 முறை என ஒவ்வொரு முறைக்கும் 10 நொடிகள் இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.

சர்வங்காசனம்
* இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் கால்களை நீட்டி படுக்க வேண்டும்.
* பின் படத்தில் காட்டியவாறு கீழ் உடலை மெதுவாக மேலே தூக்க வேண்டும்.
* உடலின் மொத்த சுமையையும் தோள்பட்டை சுமக்க வேண்டும்.
* பின்பு படத்தில் காட்டப்பட்டவாறு கைகளால் உடலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* இந்த ஆசனத்துடன், ஒருவர் சரியான டயட்டையும் மேற்கொண்டால், உடல் எடை அதிகரிப்பது உறுதி.

வஜ்ராசனம்
* இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் முழங்கால் போட்டு, குதிகால்களின் மீது அமர வேண்டும்.
* பின் கைகளை முழங்கால்களின் மீது நீட்டி வைக்க வேண்டும்.
* இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, வெளி விட வேண்டும்.

பவனமுக்தாசனம்
* முதலில் தரையில் படுத்து, கால்களை படத்தில் காட்டியவாறு மடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளால் கால்களை இறுக்கமாக இழுத்து, நெஞ்சோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கால்களை விடும் போது, மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
* இப்படி 5-10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மட்ஸ்யாசனம்
* இந்த ஆசனம் செய்வதற்கு தரையில் முதலில் படுக்க வேண்டும்.
* பின் கைகளை படத்தில் காட்டியவாறு பிட்டத்தின் அடியில் வைக்க வேண்டும்.
* அதன் பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து உச்சந்தலையானது தரையைத் தொடும் படி செய்ய வேண்டும்.
* பின்பு தலையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.

சாவாசனம்
* இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுக்க வேண்டும்.
* பின் உள்ளங்கை மேல் நோக்கியவாறு கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும்.
* இந்நிலையில் உடலை ரிலாக்ஸாக வைத்து, கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.

உட்டாசனம்
* இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நேராக நிற்க வேண்டும்.
* பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு படத்தில் காட்டியவாறு முன்னோக்கி குனிந்து பாதங்களைத் தொட வேண்டும்.
* இப்படி 5 நொடிகள் இந்நிலையில் இருக்க வேண்டும்.
* அதன் பின் மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.

கபல்பதி யோகா
* இந்த யோகா செய்வதற்கு படத்தில் காட்டியவாறு கால்களை மடக்கி உட்கார்ந்து, கைகளை தொடையின் மீது வைக்க வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்து, வேகமாக மூச்சை வெளிவிட வேண்டும்.
* இப்படி 5 நிமிடம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications