Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் இறப்பதற்கான அபாயம் 50 சதவீதம் அதிகம் உள்ளதாம்.. உஷார்...
உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாளை ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் தேதி கொண்டாடுகிறது.
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாளை ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் தேதி கொண்டாடுகிறது. பொதுவாக புகைப்பிடிப்பதற்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து நாம் நன்கு அறிவோம்.

இருப்பினும் கோவிட் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கும் காலத்தில், புகைப்பிடிப்பது ஒருவருக்கு கொரோனாவை எளிதில் ஏற்படுத்தும் என்று பலர் சந்தேகம் கொள்கின்றனர். இந்த கேள்விக்கான பதிலை இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கும்
புகைப்பிடிப்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனாவின் ஆபத்து அதிகம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் புகைப்பிடிப்பது நுரையீரலின் செயல்பாட்டை சீர்குலைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக சேதப்படுத்தி, பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட முடியாமல் உடலை கடினமாக்குகிறது. இப்படி சிகரெட் பழக்கம் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைப்பதால், அது கோவிட் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.

மரணத்தை அதிகரிக்கும் கொரோனா
இந்நிலையில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனாவால் கடுமையான நோய்கள் மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 50 சதவீதம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். மேலும் கோவிட்-19 மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்க புகைப்பிடிப்பவர்கள் செய்ய வேண்டிய மிகச் சிறந்த ஒரே விஷயம் அப்பழக்கத்தைக் கைவிடுவது தான் என்றும் அறிவுறுத்தினார்.

புகைப்பழக்கத்தின் பிற அபாயங்கள்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, இதய நோய், புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நான்கு முக்கிய நோய்களுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக புகையிலை பயன்பாடு இருக்கிறது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டால், உலகில் பெரும்பாலான மக்கள் அவதிப்படும் இந்த நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

வாய் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்
இந்த நான்கு முக்கிய நோய்களைத் தவிர, புகைப்பழக்கம் ஈறுகளையும் பாதிக்கிறது மற்றும் பல்வேறு ஈறு தொடர்பான நோய்களுக்கும் வழிவகுக்கிறது. ஆகவே புகைப்பிடிப்பவர்கள் இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு ஆலோசகர் அல்லது மனநல நிபுணரை சந்திக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஒருவருக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்காக கொடுக்கப்படும் ஆலோசனை, உடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கத்தில் இருந்து வெளியேற உதவும்.

புகைப்பழக்கத்தை நிறுத்தும் சிகிச்சையில் உள்ள பகுதிகள்
புகையிலைப் பழக்கத்தை நிறுத்தும் சிகிச்சை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மனநல ஆலோசனை, மற்றொன்று மருத்துவ சிகிச்சை.

ஒருவர் புகைப்பிடிப்பதை கைவிட உதவும் முக்கிய வழிகள்:
* உங்கள் ஆரோக்கியத்தின் பாதுகாப்பை முக்கியமாக கருதுவதன் மூலம், புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கு உங்களை ஊக்குவியுங்கள்.
* புகைப்பழக்கத்தைக் கைவிட திட்டமிடுவதற்கு முன் திட்டமிடுங்கள். சிகரெட் போதைக்கு அடிமையாக்கும் ஒன்று. எனவே எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் கைவிடுவது என்பது இயலாது. ஆகவே ஒவ்வொரு நாளும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் படிப்படியாக இப்பழக்கத்தை கைவிடுங்கள்.
* நிக்கோடின் மாற்று சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்
* புகைபிடிப்பதை கைவிட உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.



Click it and Unblock the Notifications