For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 28 : நோயின் தாக்கம், வகைகள், அறிகுறிகள்

உலக ஹெபடைடிஸ் நாள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 28ம் தேதி உலகளவில் அந்நோய்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ,பி,சி,டி,இ ஆகிய நோய்த்தொற்றுகளின் குழு மற்றும் அதற்கான

|

உலக ஹெபடைடிஸ் நாள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 28ம் தேதி உலகளவில் அந்நோய்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ,பி,சி,டி,இ ஆகிய நோய்த்தொற்றுகளின் குழு மற்றும் அதற்கான நோயறிதல் சிகிச்சை முறையினை ஹெபடைடிஸ் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது.

World Hepatitis Day

ஹெபடைடிஎஸ் உலகம் முழுக்க இருக்கக் கூடிய 100க்கும் மேற்பட்ட மில்லியன் மக்களை இந்த நோயால் பாதிப்படைகின்றனர். அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 1.34 மில்லியன் மக்கள் இந்த நோய்த் தாக்கத்தால் இறப்பைச் சந்திக்கின்றனர். ஹெபடைடிஸ் நோய்த்தாக்கம் உடையவர்களை குடல் சார்ந்த நோய்களுக்கும் ஆளாகிறார்கள் இதனால் தான் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக சுகாதர நிறுவனம்

உலக சுகாதர நிறுவனம்

உலக சுகாதார நிறுவனத்தால் உலகளாவிய பொது சுகாதார விழிப்புணர்வுக்காக அனுசரிக்கப்படும் உலக சுகாதார தினம், உலக இரத்த தான தினம், உலக நோய்த் தடுப்பு வாரம், உலக காசநோய் தினம், உலக புகையிலை நாள், உலக மலேரியா தினம் உலக எயிட்ஸ் தினம் உள்ளிட்ட 8 தினங்களில் உலக ஹெபடைடிஸ் தினமும் ஒன்றாகும். இந்த விழிப்புணர்வு ஒவ்வொரு வருடமும் ஜுலை 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் நோய்

ஹெபடைடிஸ் நோய்

கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சி நிலையையே ஹெபடைடிஸ் என்கிறோம். பொதுவாக வைரஸ் தொற்றுகளால் இவ்வகை நோய் ஏற்படுகிறது. அதே சமயத்தில் வேறு காரணங்களாலும் இந்நோய் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி மருந்துகள், நச்சுகள், ஆல்கஹால் உட்கொல்லுதல் ஆகியவற்றாலும் ஹெபடைடிஸ் நோய் ஏற்படுகிறது.

கல்லீரல் திசுக்களுக்கு எதிராக நமது உடல் ஆண்டிபாடிகளை உருவாக்கும் போது நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொண்ட ஹெபடைடிஸை உருவாக்குகிறது .

ஹெபடைடிஸின் வகைகள்

ஹெபடைடிஸின் வகைகள்

ஹெபடைடிஸ் எ

ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஎஸ் சி

ஹெபடைடிஸ் டி

ஹெபடைடிஸ் இ

ஹெபடைடிஸ் எ

ஹெபடைடிஸ் எ

ஹெபடடைடிஸ் எ வைரஸால் ஹெபடைடிஸ் எ நோய் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மலம், உணவு, அல்லது தண்ணீர் ஆகியவற்றிலிருந்து பரவுகிறது.

ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஸ் பி வகை நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் திரவங்களின் மூலமாக பரவுகிறது. அதன்படி இரத்தம், யோனி சுரப்பு அல்லது விந்து ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்ளும் போதும், உடலில் உள்ள ரோமங்களை நீக்கும் ரேசர்களை பகிர்ந்துக் கொள்ளும் போது ஹெபடைடிஸ் பி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இவ்வகை நாள்பட்ட நோய்க்கு மட்டும் 350 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த தொகை அமெரிக்காவில் மட்டும் 1.2 மில்லியன் மக்களை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹெபடைடிஸ் சி

ஹெபடைடிஸ் சி

ஹெபடைடிஸ் சி என்னும் வைரசால் இந்நோய் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் சி ஊசிகள், உடலுறவால் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவுகிறது. எச்.சி.வி என்பது இரத்தத்தில் தொற்றுகிற வைரஸ் நோய்களில் முக்கியமானதாக உலகளவில் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

ஹெபடைடிஸ் டி

ஹெபடைடிஸ் டி

இவ்வகை நோய்கள் டெல்டா ஹெபடைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹெபடைடிஸ் டி வைரஸால் கல்லீரலில் மிக்கபெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும்.

பரவும் முறை

பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மூலமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. இவ்வகையான நோய்த்தாக்குதல் மிகவும் அரியவகையானது. ஹெபடைடிஸ் பியின் தாக்குதல் இருக்கும் போது தான் ஹெபடைடிஸ் டியின் தாக்குதல் இருக்கும் ஏனெனில் ஹெபடைடிஸ் பியின் துணை இல்லாமல் ஹெபடைடிஸ் டியினால் தனது வளர்ச்சியை மேற்கொள்ள முடியாது.

ஹெபடைடிஸ் இ

ஹெபடைடிஸ் இ

ஹெபடைடிஸ் நோயானது நீரினால் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். இது பெரும்பாலும் மோசமான சுகாதாரம் இருக்கும் இடங்களில் தான் இவ்வகைத் தொற்றுகள் ஏற்படுகின்றன.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகமாக குடிக்கும் போது கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வகை ஹெபடைடிஸ் ஆல்கஹால் ஹெபடைடிஎஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆல்கஹால் நேரிடையாக கல்லீரலிலுள்ள செல்களை நேரிடையாக பாதிக்கிறது. அதே சமயத்தில் இது கல்லீரல் செயலிழப்பையும் ஏற்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிக அளவு கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளும் போது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

சோர்வு

காய்ச்சல்

கருமையான சிறுநீர்

வெளிறிய மலம் போதல்

வயிற்று வலி

பசியிழப்பு

விவரிக்கமுடியாத உடல் எடை குறைதல்

மஞ்சள் தோல்

மஞ்சல் கண் (ஆனால் இது மஞ்சள் காமலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்)

எப்படிக் கண்டுபிடிப்பது

எப்படிக் கண்டுபிடிப்பது

கல்லீரல் செயல்பாடு ஆய்வு

இரத்த மாதிரிகளை வைத்து உங்கள் கல்லீரல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்பது எல்.எஃப்.டி சோதனை. இந்த சோதனையில் அசாதரண முடிவுகள் கிடைக்கும் போது கல்லீரல் சார்ந்த நோய்களின் அஸ்திவாரமாக இதைக் கருத வேண்டும்.

இரத்த சோதனை

இரத்த சோதனை

கல்லீரல் செயல்பாட்டு சோதனை அசாதரணமாக இருக்கும் போது நோயின் மூலக்காரணத்தை அறிவதற்காக கூடுதலான இரத்த சோதனைகளுக்கு மருத்துவர் பரிந்துரைப்பார்.

அல்ட்ரா சவுண்ட்

அல்ட்ரா சவுண்ட்

உங்கள் வயிற்றிலுள்ள உறுப்புகளின் படத்தை உருவாக்க அல்ட்ரா சவுண்ட் பயன்படுகிறது. அடிவயிற்றிலுள்ள திரவம், கல்லீரல் பாதிப்பு அல்லது பாதிப்பு, கல்லீரல் கட்டிகள், பித்தப்பையில் ஏற்படுகிற அசாதரணங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்துவதற்காக இந்தச் சோதனை செய்யப்படுகிறது. மேலும் அசாதாரண கல்லீரல் செயல்பாடுகளைக் கண்டறிவதில் முக்கிய சோதனையாக இது பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Hepatitis Day: Types, Symptoms and Treatment

World Hepatitis Day, observed on July 28 every year, aims to raise global awareness of hepatitis — a group of infectious diseases known as Hepatitis A, B, C, D, and E. For World Hepatitis Day, learn more about the different types of viral hepatitis that impact millions worldwide and what is being done to help eliminate hepatitis.
Story first published: Saturday, July 27, 2019, 15:11 [IST]
Desktop Bottom Promotion