Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஆங்காங்கு கொடுக்கப்படும். புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் சில உணவுகள் இதோ!
World Cancer Day 2023: உலகிலேயே மிகவும் கொடிய நோயாக கருதப்படுவது புற்றுநோய். இந்த புற்றுநோயால் உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகிறார்கள். உலகில் ஏற்படும் இறப்புக்கு இரண்டாவது காரணமாக இருப்பது புற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் நமது வாழ்க்கை முறை மட்டுன்றி, நாம் உண்ணும் உணவுகளும் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

தற்போது நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் ஏராளமான ஃபாஸ்ட் புட் உணவுகள் மற்றும் கெமிக்கல் கலக்கப்பட்ட உணவுகள் அதிகம் விற்கப்படுகின்றன. இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, அது நமது உடலினுள் ஒருவித சமநிலையின்மையை ஏற்படுத்தி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஆங்காங்கு கொடுக்கப்படும். அந்த வகையில் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் சில உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக அந்த உணவுகளானது தற்போது மக்களால் அதிகம் உண்ணப்பட்டு வருகின்றன. நீங்களும் அதை உட்கொள்பவராயின், உடனே அதை தவிர்த்திடுங்கள்.

மைதா உணவுகள்
முழு தானியங்கள் ஆரோக்கியமானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் பதப்படுத்தப்படுத்தப்பட்ட தானியங்கள் மிகவும் ஆபத்தானது. தானியங்களின் பதப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் தான், மைதா. இந்த மைதாவைக் கொண்டு ஏராளமான சுவையான உணவுகள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் மைதா மாவு வெள்ளை நிறத்தில் இருக்க என்ன காரணம் தெரியுமா? பதப்படுத்தும் செயல்முறையின் போது குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது. இமது தவிர, மைதாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் என்பதால், இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவுகளை சட்டென்று உயர்த்தும். இந்த மைதாவை அதிகளவில் உணவில் சேர்க்கும் போது, அது புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்
பாப்கார்ன் தயாரிக்கும் மைக்ரோவேவ் பையில் PFOA என்னும் பொருள் உள்ளது என்பது தெரியுமா? இது கணையம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு காரணமான பொருளாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே மைக்ரோவேவ் பை கொண்டு பாப்கார்ன் தயாரித்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமானால், பாப்கார்னை கேஸ் ஸ்டவ்வில் தயாரித்து சாப்பிடலாம்.

ஆல்கஹால்
எந்த ஒரு உணவுப் பொருளும் அதிகமாக எடுக்கும் போது அது ஆபத்தை தான் ஏற்படுத்தும். அதேப் போல் தான் ஆல்கஹாலை அதிகமாக அருந்தும் போது, கல்லீரல் சேதமடைவதோடு, சிறுநீரகங்களிலும் அழுத்தம் அதிகரிக்கிறது. ஆய்வுகளில் கூட, அதிகளவு மது அருந்துவது வாய், உணவுக்குழாய், கல்லீரல், குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியர்கள் ஏராளம். ஆனால் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸில் உப்பு மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகளவில் உள்ளன. இவை உடலுக்கு தீங்கை விளைவிகும். முக்கியமாக இவற்றில் அக்ரிலாமைடு என்னும் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் உள்ளன. எனவே உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகம் உட்கொள்ளும் போது, அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக இந்த கெமிக்கலானது சிகரெட்டிலும் காணப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் புற்றுநோயுடன் தொடர்புடையவை. மேலும் இவற்றில் கொழுப்புக்கள் அதிகளவில் உள்ளதால், இது இதயத்திற்கும், செரிமான மண்டலத்திற்கும் தீங்கை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி சாப்பிடுவதை அறவே தவிர்த்திடுங்கள்.

சோடா
சோடா உடலுக்கு ஆரோக்கியமற்றது என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் இந்த சோடாவை அதிகளவில் குடிக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே நீங்கள் புற்றுநோயின்றி வாழ விரும்பினால், சோடாவை அதிகம் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.

கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்
பொதுவாக கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகள் ஆபத்தானவை. ஏனெனில் அந்த கேன்களில் ஆபத்தான இரசாயன BPA இருப்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் புற்றுநோயுடன் நேரடி தொடர்பை கொண்டவை. இந்த மாதிரியான உணவுகளை உண்ணும் போது, புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருமடங்கு அதிகம் உள்ளது.

பண்ணையில் வளர்க்கப்படும் சால்மன் மீன்
வெளிநாடுகளில் பண்ணையில் சால்மன் மீன்கள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த வகையான மீன்களை ஆரோக்கியமானதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால் சமீபத்திய் ஆய்வு ஒன்றில் பண்ணையில் வளர்க்கப்படும் சால்மன் மீன்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்ணையில் வளர்க்கப்படும் சால்மன் மீன்கள் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களால் மாசுபட்டுள்ளதால், அவற்றை உட்கொள்ளும் போது புற்றுநோயால் பாதிக்கப்பட நேரிடுகிறது. எனவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications