Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
இந்த 5 ஊட்டச்சத்துக்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பெண்களுக்கு ஆயுசு ரொம்ப அதிகமாம்...!
பெண்கள் தங்கள் குடும்பத்தினர் மீது செலுத்தும் அன்பையும், கவனிப்பையும் தங்கள் மீது செலுத்துகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
பெண்கள் தங்கள் குடும்பத்தினர் மீது செலுத்தும் அன்பையும், கவனிப்பையும் தங்கள் மீது செலுத்துகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆரோக்கியமான சமச்சீர் உணவு அனைவருக்கும் அவசியம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் பெண்களின் உடல் பல உடல் மாற்றங்களுடன், உடலில் இருக்கும் பல ஊட்டச்சத்துக்களையும் இழக்கின்றன.

எனவே வயதிற்கு ஏற்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எதிர்கால ஆரோக்கியமான எதிர்காலத்திற்காகவும் அனைத்து பெண்களும் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இரும்புச்சத்து
அதிக மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி காரணமாக, பெண்கள் தங்கள் உடலில் இருந்து இரும்புச்சத்தை அதிக அளவில் இழக்கின்றனர். வளர்ச்சிக்கும், உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், சில ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். இது பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். நட்ஸ், கடல் உணவுகள், பீன்ஸ், காய்கறிகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமுள்ளது.

வைட்டமின் பி மற்றும் போலிக் அமிலம்
உடலில் புதிய செல்களை உருவாக்க வைட்டமின் பி அவசியம், அதே நேரத்தில் ஃபோலிக் அமிலம் கர்ப்ப காலத்தில் நரம்புக் குழாயை உருவாக்க உதவுகிறது, இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. நட்ஸ், பீன்ஸ், கீரை, ஆரஞ்சு சாறு போன்றவற்றில் இவை அதிகமுள்ளது.

வைட்டமின் டி
மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பான்மையான இந்தியப் பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குச் சிறந்த இயற்கை ஆதாரம் சூரியன்தான். ஆனால் தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதன் எப்போதும் சூரிய ஒளியில் இருப்பது சாத்தியமில்லை. வைட்டமின் டி எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் உயிரணு வளர்ச்சிக்கும் முக்கியமானது. முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், வலுவூட்டப்பட்ட பால் இது அதிகமுள்ளது.

கால்சியம்
பெண்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே எலும்பு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது, எனவே போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வது அவசியமானதாகிறது. 40 வயதைக் கடந்தவுடன் கால்சியம் உட்கொள்வது மிகவும் அவசியம், ஏனெனில் இந்த நேரத்தில் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சும் திறனை இழக்கத் தொடங்கும். பால், சீஸ், தயிர் போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.

மக்னீசியம்
மக்னீசியம் தசைகள் மற்றும் நரம்புகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவையும் கட்டுப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இதனை போதுமான அளவில் பெற வேண்டியது மிகவும் அவசியமானது. நட்ஸ், கீரை, ஓட்ஸ், பால் பொருட்கள், பூசணி விதைகள், அவோகேடா போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.



Click it and Unblock the Notifications