Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
குளிர்காலத்தில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்க சில டிப்ஸ்...!
வருடம் முழுவதும் சமச்சீரான அளவில் உடலிலிருந்து நீர் செலவழிந்து கொண்டிருக்கும். ஆகவே குளிர்காலமாக இருந்தாலும் போதுமான அளவிற்கு தண்ணீர் அருந்துவது மிகவும் கட்டாயமாகிறது.
குளிர்காலம் மிக விரைவில் வரவிருக்கிறது. குளிர்காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிகமான குளிர், பனி மற்றும் வறண்ட வானிலை ஆகும். குளிர்காலத்தில் நாம் அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை உடல் நீரிழப்பாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவது ஆகும். ஆகவே குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடித்து, நமது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது என்பது அனைவருக்கும் மிகப் பெரிய சவாலான காரியமே.

பொதுவாக குளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பதில்லை. அதனால் மக்கள் தண்ணீர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி அருந்துவதில்லை. மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பர். அதனால் இயல்பாகவே உடலில் உள்ள நீர் குறைந்து விடுகிறது. அதனால் நீரிழப்பு ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் குறைவாக வியர்வை சுரந்தாலும், உடல் இயங்குவதற்குத் தேவையான நீரை உடல் தானாகவே உடலில் இருந்தே எடுத்துக் கொள்கிறது. அதனால் வருடம் முழுவதும் சமச்சீரான அளவில் உடலிலிருந்து நீர் செலவழிந்து கொண்டிருக்கும். ஆகவே குளிர்காலமாக இருந்தாலும் போதுமான அளவிற்கு தண்ணீர் அருந்துவது மிகவும் கட்டாயமாகிறது.
குளிர்காலத்தில் ஏற்படும் நீரிழப்பு, தோல் பிரச்சினைகள், உடல் சோர்வு, தசைத் திரிபு மற்றும் தலைவலி போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இரத்த அழுத்தத்தைக் குறைத்து நமக்கு எரிச்சலையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

நீரிழப்பின் அறிகுறிகள்
நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்திற்கு மாறுதல், தலைச்சுற்றல், தேவையில்லாத எரிச்சல் உணர்வு மற்றும் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்றவை நமது உடலில் போதுமான நீரில்லை என்பதை உணர்த்தும் காரணிகள் ஆகும்.

குளிர்காலத்தில் நமது உடலை எவ்வாறு நீர்ச்சத்துடன் வைத்திருக்கலாம்?
பொதுவாக குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையைான அளவு தண்ணீரை நாம் குடிப்பதில்லை. அதனால் நமது உடலில் மிக எளிதாக நீரிழப்பு ஏற்பட்டு நாம் பாதிப்படைகிறோம். எனவே இக்காலத்தில் நம்மால் போதுமான தண்ணீரை குடிக்க இயலவில்லையானால், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சூப் செய்தோ அல்லது சமைக்காமலோ அதிக அளவு உண்ணலாம். இந்தக் கட்டுரையில் குளிர்கால நீரிழப்பைத் தடுக்க என்னென்ன உணவுப் பொருட்களை உண்ணலாம் என்று பார்க்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
குளிர்காலத்தில் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தடுக்க அதிக அளவில் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும். அவற்றை சாறு பிழிந்தோ அல்லது சூப் செய்தோ அல்லது சாலட் செய்தோ சாப்பிடலாம். மேலும் அவற்றை சமைக்காமலும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழம்
தண்ணீரில் ஒரு புதினா இலை அல்லது ஆரஞ்சுப் பழத்தோல் சேர்த்து குடித்தால் அது மணமாகவும் அதே நேரத்தில் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். ஏனெனில் ஆரஞ்சுப் பழத்தில் 86 விழுக்காடு நீர் இருக்கிறது. அதோடு வைட்டமின் சி சத்தும் அதில் நிறைந்திருக்கிறது. மேலும் ஆரஞ்சுப் பழம் நம்மை நீர்ச்சத்தோடு வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நமது தசைகள், எலும்புகள், தமனிகள் மற்றும் தோல் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் ஒரு சத்து நிறைந்த உணவு மட்டும் அல்ல, மாறாக நமது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுத்து தேவையான நீர்ச்சத்தைத் தருகிறது. ஏனனில் ஒரு குவளை முட்டைக்கோஸின் சாற்றில் 59 மிலி தண்ணீர் இருக்கிறது. அதோடு முட்டைக்கோஸில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. அதனால் இவை நமது உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தையும் தரும்.

தக்காளி
தக்காளியில் 95 விழுக்காடு தண்ணீர் உள்ளது. எனவே தக்காளியை சமைக்காமலோ அல்லது சூப் மற்றும் சாலட் செய்தோ சாப்பிடலாம். மேலும் தக்காளியில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால் அது நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

கீரைகள்
கீரைகளில் 93 விழுக்காடு தண்ணீர் உள்ளது. அதனால் கீரைகள் நம்மை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும். மேலும் கீரைகள் நமக்கு போதுமான இரும்புச்சத்தையும் வழங்குகின்றன. அதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்துகின்றன. குளிர்காலத்தில் பயணம் செய்யும் போது தண்ணீரை எடுத்துச் செல்வது பயனளிக்கக்கூடிய ஒன்றாகும். அதனால் போதுமான அளவு பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீர் அருந்தி நீரிழப்பைத் தடுக்கலாம்.

சூடான பானங்கள்
சூடான பால், தேனீர் மற்றும் சூப் போன்ற பானங்கள் நம்மை இதமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீரிழப்பைத் தடுக்கின்றன. நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. மேலும் நமது சுவாசக் குழாயை சுத்தம் செய்கின்றன. அதே நேரத்தில் காற்று ஏற்றப்பட்ட பானங்கள், மதுபானம் அல்லது போதை மருந்துகள் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். அவை நீரிழப்பை அதிகரித்து வறட்சியை ஏற்படுத்தும். தண்ணீர் நமது வாழ்க்கையின் அன்னையாகவும், சாரமாகவும், அளவுகோலாகவும், வழியாகவும் இருக்கிறது.

தயிர்
தயிர் நீரின் ஆதாரமாக இருப்பதோடு அல்லாமல் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்கிறது. ஒரு குவளை தயிரில் 75 விழுக்காடு தயிர் இருக்கிறது. மேலும் தயிரில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு தயிர் உடல் எடையை குறைக்கவும், நமது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
எனவே மேற்சொன்ன இந்த உணவுகளை இந்த குளிர்காலத்தில் சீரான அளவில் உண்டு வந்தால் நாம் நீரிழப்பைத் தடுத்து, நமது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க முடியும்.



Click it and Unblock the Notifications
