Latest Updates
-
5500 பணக்காரர்கள் அவர்களின் உடலை சேமிக்க பல கோடிகளை முதலீடு செஞ்சுருக்காங்க...காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பொதுக் கழிப்பறையை யூஸ் பண்ணும்போது... இந்த விஷயங்களை கண்டிப்பா நீங்க செய்யணுமாம்...ஏன் தெரியுமா?
பொது கழிப்பறைகளை தினமும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். பல இடங்களில் இருந்து கிருமிகளை சுமந்து வரும் பல கைகளால் கதவு கைப்பிடி தொடப்படுகிறது.
நாம் வீட்டில் இருக்கும்போது வீட்டு கழிவறையை பயன்படுத்துகிறோம். ஆனால், வெளியில் செல்லும்போது பொதுக்கழிவறையைதான் நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பொதுக்கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள். உங்கள் அந்தரங்க பகுதியிலும் உடலிலும் எந்த நோய்தொற்றும் ஏற்படாமல் இருக்க நீங்க பொதுக்கழிவறையை பயன்படுத்தும்போது, சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமாக இல்லாத பொதுக்கழிவறையை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதேபோல பார்க்க சுத்தமாக இருக்கும் கழிவறையை பயன்படுத்தும்போது கூட நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வளர்ந்துவரும் நவீன கலாச்சாரத்திற்கு ஏற்ப தற்போது வெஸ்டன் டாய்லட்தான் அதிக இடங்களில் இருக்கிறது.

பொதுக்கழிப்பறை இருக்கைகளில் மிதக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களைத் தொடாமல் இருக்க நம்மால் இயன்றவரை முயற்சி செய்து, கழிப்பறை இருக்கையின் மீது அமர்வதும், வட்டமிடுவதும் இந்த கலையில் நாம் அனைவரும் தேர்ச்சி பெற்றிருப்போம். இல்லையா? பொதுக் கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பது வேதனையாக இருக்கலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி என்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்கக்கூடாது?
பொதுக் கழிப்பறை இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் நீங்கள் சரியாக அமராமல் சிறுநீர் கழிக்கலாம், மேலும் கழிப்பறை இருக்கையின் மீது அமர்ந்துகொண்டு சிறுநீர் கழிக்காமல் சும்மாவே உட்க்கார்ந்திருப்பதால், உங்கள் இடுப்புத் தளம் பலவீனமாக மாறும். இடுப்பு தளம் வலுவாக இருக்கும்போது மட்டுமே உங்களால் சிறுநீர் அல்லது மலத்தை முற்றிலும் வெளியேற்ற முடியும்.

சிறுநீர் பாதை தொற்று
உங்கள் இடுப்புக்கு உள்ளே மூன்று உறுப்புகள் உள்ளன, நீங்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் உங்கள் சிறுநீர்ப்பை, உங்கள் குழந்தை வளரும் கருப்பை மற்றும் உங்கள் மலம் பை அல்லது மலக்குடல் உள்ளன. உங்கள் இடுப்பின் தளம் வலுவாக இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம். ஆதலால், டாய்லெட் இருக்கையின் மேல் வட்டமிடுவதை நிறுத்துங்கள். மேலும், கழிப்பறை இருக்கையில் இருந்து சிறுநீர் பாதை தொற்று அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றை நீங்கள் பெறாமல் இருக்க முடியும். நீங்கள் பாதுகாப்பாக சிறுநீர் கழிக்கலாம்.

சில பாதுகாப்பு நடவடிக்கைகள்
பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். கழிப்பறை இருக்கையை சரியான வழியில் பயன்படுத்த தெரிந்துகொண்டுபோல, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீங்கள் செய்யக்கூடிய மற்ற விஷயங்களும் உள்ளன. பல நோய் தொற்றுக்கள் பரவ வழிவகுக்கும் பொதுக்கழிவறையை பயன்படுத்துவதற்கு முன்பு இந்த விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கதவு கைப்பிடியைத் தொட வேண்டாம்
பொது கழிப்பறைகளை தினமும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். பல இடங்களில் இருந்து கிருமிகளை சுமந்து வரும் பல கைகளால் கதவு கைப்பிடி தொடப்படுகிறது. நீங்களும் அந்த கதவு கைப்பிடியை வெறும் கைகளால் தொடும்போது, உங்களுக்கு கிருமி தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கதவை திறந்து மூடவும், பைப் மற்றும் தண்ணீர் ப்ரஷை பயன்படுத்தும்போதும் டிஷ்யூவை கொண்டு பயன்படுத்துங்கள். இது உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

தனிப்பட்ட உடமைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்
நீங்கள் பொது கழிப்பறையைப் பயன்படுத்தி முடித்ததும், கிருமி தொற்றை தவிர்க்க ஹேண்ட்வாஷைப் பயன்படுத்தி உங்கள் கைகளை சுத்தம் செய்யலாம். ஆனால் உங்கள் தனிப்பட்ட பொருட்களை பேசின் அல்லது தரையில் வைத்தால், அவற்றில் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளலாம். அவற்றை நீங்கள் எடுத்து பயன்படுத்தும்போது, உங்களுக்கும் கிருமி தொற்று ஏற்படலாம்.

கை உலர்த்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
கழிவறையை பயன்படுத்திய பிறகு உங்கள் கைகள் ஈரமாக இருக்கலாம். விரைவாக கையை உலர்த்துவதற்கு நீங்கள் ஆசைப்பட்டாலும் கூட கை உலர்த்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ப்ளோ ட்ரையரில் இருந்து வரும் சூடான காற்று காற்றில் இருக்கும் கிருமிகளை பரப்பலாம். உங்கள் கைகளை கழுவிய பிறகு எந்த தொற்றுநோயும் ஏற்படாமல் தவிர்க்க, உங்கள் கைகளை உலர ஒரு காகித துண்டு அல்லது டிஷ்யூவை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











