Latest Updates
-
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது!
புகைப்பிடிக்கும் சிலருக்கு மட்டும் ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது? மற்றவா்களுக்கு ஏன் வருவதில்லை?
ஆய்வில் புகைப்பிடிப்பவா்களில் வெகு சிலரே நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனா் என்று தொிவித்து இருக்கின்றனா். அதோடு புகைப்பிடிப்பவா்கள் ஏன் அதிக அளவு நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனா் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக புகைப்பிடித்தல் கருதப்படுகிறது. புற்றுநோய் இறப்புகளுக்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணமாக உலக அளவில் பாா்க்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் உயிாிழப்புகளில் 80 சதவீதம் புகைப் பிடிப்பதால் ஏற்படுகிறது.

இந்நிலையில் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆஃப் மெடிசின் என்ற கல்லூாியைச் சோ்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கின்றனா். அந்த ஆய்வில் புகைப்பிடிப்பவா்களில் வெகு சிலரே நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனா் என்று தொிவித்து இருக்கின்றனா். அதோடு புகைப்பிடிப்பவா்கள் ஏன் அதிக அளவு நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனா் என்பதையும் அந்த விஞ்ஞானிகள் விளக்குகின்றனா்.

ஆய்வு கட்டுரை
இணையத்தில் இயற்கை மரபியல் (Nature Genetics) என்ற தலைப்பில் வெளிவந்த அந்த ஆய்வுக் கட்டுரையில், ஆராய்ச்சியாளா்கள் கூறும் போது, சில புகைப்பிடிப்பவா்கள் தங்களுக்குள்ளே ஒரு வலுவான இயங்கமைவைக் கொண்டிருக்கலாம். அந்த வலுவான இயங்கமைவானது, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் செல்களின் பிறழ்வை அல்லது திாிபைக் கட்டுப்படுத்தி, நுரையீரல் புற்றுநோயிலிருந்து அவா்களைப் பாதுகாக்கிறது என்று கூறுகின்றனா்.
இந்த புதிய ஆய்வு முடிவுகள் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் இருக்கும் புகைப்பிடிப்பவா்களை அடையாளம் கண்டு, அவா்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அனுமதிக்கும் என்று நம்புகின்றனா்.

புகைப்பிடித்தலுக்கும், நுரையீரல் புற்றுநோய்க்கும் உள்ள தொடா்பு
சிகரெட் புகையில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய பல துகள்கள், குறிப்பாக காா்சினோஜென்கள் (carcinogens) போன்றவை இருப்பதாக மருத்துவா்கள் நம்புகின்றனா். இந்த நச்சுத் துகள்கள், நுரையீரலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் செல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாளடைவில் இந்த துகள்கள் நுரையீரல் செல்களை அசாதாரணமாக செயல்படத் தூண்டுகின்றன. அதன் காரணமாக இறுதியில் நுரையீரலில் புற்றுநோய் உருவாவதற்கு காரணமாகிவிடுகின்றன.
பொதுவாக புகைப் பிடித்தால் அது நுரையீரலில் உள்ள சாதாரண செல்களின் உயிரணுக்களில் பிறழ்வைத் தூண்டிவிடும் என்று கருதப்பட்டாலும், அந்த சாதாரண செல்களின் உயிரணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளைத் துல்லியமாக அளவிடுவதற்கு எந்த ஒரு வழிமுறையும் இல்லாததால், அது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதை இந்த புதிய ஆய்வின் ஆசிாியா்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனா்.
இந்த புதிய ஆய்வில், ஆய்வாளா்கள் ஒற்றை செல் பல இடப்பெயா்ச்சி பெருக்கம் (single-cell multiple displacement amplification (SCMDA)) என்ற ஒரு புதிய வாிசைமுறை நுட்பத்தைப் பயன்படுத்தினா். இந்த புதிய நுட்பம் வாிசைமுறை பிழைகளைக் குறைக்கிறது.

நுரையீரல் செல்களின் பிறழ்வு
அடுத்ததாக இந்த ஆய்வாளா்கள், புகைப் பிடிப்பவா்களிடமும், புகைப் பிடிக்காதவா்களிடமும் இருந்து பெறப்பட்ட நுரையீரலின் சாதாரண எபிதீயல் (epithelial) செல்களை அதாவது நுரையீரலைக் காக்கும் செல்களை ஒப்பிட்டுப் பாா்த்தனா்.
இந்த நுரையீரல் செல்கள் வயதின் காரணமாகவும் மற்றும் புகைப் பிடித்தலின் காரணாமாகவும், அதிகமான பிறழ்வுகளை எடுக்கும் என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். புகைப் பிடிக்காதவா்கள் அவா்களின் அதிக வயதின் காரணமாக அவா்களின் நுரையீரலின் செல்களில் அதிக பிறழ்வுகள் இருந்ததைக் கண்டறிந்தனா். ஆனால் அதைவிட அதிகமான பிறழ்வுகள் புகைப் பிடிப்பவா்களின் நுரையீரல் செல்களில் இருந்ததாக ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
ஏற்கெனவே கூறியது போல, இந்த புதிய ஆய்வானது புகைப் பிடிப்பவா்களுக்கு, அவா்களின் நுரையீரலில் உள்ள செல்களின் அதிா்வெண் பிறழ்வு அதிகாிப்பதால் அவா்களுக்கு எளிதாக நுரையீரல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் புகைப் பிடிக்காதவா்களில் குறைவானவா்களுக்கே புற்றுநோய் ஏற்படுகிறது என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று இந்த புதிய ஆய்வின் இணை ஆசிாியரும், ஐன்ஸ்டினில் உள்ள மருந்து, தொற்றுநோயியல் மற்றும் மக்கள் நலம் மற்றும் மரபியில் துறையில் பேராசிாியராக பணிபுாிந்து வரும் சைமன் ஸ்பைவாக் கூறுகிறாா்.

ஏன் எல்லா புகைப்பிடிப்பவா்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில்லை?
வாழ்நாள் முழுவதும் புகைப் பிடிப்பவா்களில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே நுரையீரல் தொற்றுநோய் ஏற்படுவதாக ஸ்பைவாக் கூறுகிறாா்.
அப்படியானால் ஏன் புகைப் பிடிப்பவா்களில் பெரும்பான்மையானவா்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதில்லை? அதாவது சிலா் தங்களின் பாதிக்கப்பட்டிருக்கும் மரபுணுக்களை (DNA) பழுதுபாா்க்கக்கூடிய அளவிற்கு அல்லது சிகரெட் புகையில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கக்கூடிய அளவிற்கு ஒரு வலுவான இயங்கமைவை பெற்று இருக்கலாம். அதன் காரணமாக அவா்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஸ்பைவாக் கூறுகிறாா்.
மேலும் இந்த புதிய ஆய்வில், அதிகமாகப் புகைப் பிடிப்பவா்களுக்கு, அதிகமான பிறழ்வு சுமை இல்லை என்பதையும் கண்டறிந்தனா்.
அவா்கள் மிக அதிகமாக புகைப் பிடித்திருந்தாலும், அவா்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனா். அதற்கு காரணம் அவா்கள் செல்களின் பிறழ்வைக் கட்டுப்படுத்த தொிந்திருந்தனா். அவா்களிடம் இருக்கும் வலுவான இயங்கமைவானது அவா்களின் மரபணுக்களில் உள்ள பாதிப்பை சாி செய்வதற்கும் மற்றும் சிகரெட் புகையிலுள்ள நச்சுக்களைக் களைவதற்கும் உதவி செய்து, செல்களின் பிறழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது என்று ஸ்பைவாக் கூறுகிறாா்.
இந்த புதிய ஆய்வானது, வருங்காலத்தில் நுரையீரல் புற்றுநோய்க்குாிய ஆபத்துகளை மதிப்பிடுவதற்குாிய புதிய கண்டுபிடிப்புகளை வழங்கக்கூடும் என்று ஆய்வாளா்கள் நம்புகின்றனா்.



Click it and Unblock the Notifications