Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
யாருக்கெல்லாம் குரங்கு அம்மை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது தெரியுமா?
மருத்துவர்களின் கூற்றுப்படி, 1980 ஆம் ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதாவது, 42 வயதிற்கு குறைவானவர்களுக்கு குரங்கு அம்மை தொற்றின் ஆபத்து அதிகம் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸின் பிடியில் சிக்கி, படாதபாடுபட்டது. எப்படியோ இந்த கொடிய வைரஸிற்கு எதிராக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கொடிய வைரஸிடம் இருந்து ஓரளவு மீண்டுள்ள நிலையில், தற்போது உலகம் ஒரு புதிய தொற்றுநோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அதன் பெயர் தான் குரங்கு அம்மை. உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை, இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

தற்போது இந்தியாவில் குரங்கு அம்மையின் வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. முதன்முதலாக நாட்டின் டெல்லியில் குரங்கு அம்மையின் புதிய வழக்கு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து 4 வழக்குகளும் நாட்டில் பதிவாகியுள்ளன. முக்கியமாக கேரளாவிலும் குரங்கு அம்மை வழக்கு பதிவாகியுள்ளது. குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் தான் இருந்தாலும், உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதால், இது பெரும் கவலையை அளிக்கிறது. அதாவது, குரங்கு அம்மையை சாதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது மற்றும் அதன் தொற்றைத் தடுக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் எடுக்க வேண்டியது முக்கியம்.

இதுவரை WHO வெளியிட்ட அவசரநிலைகள்
இதுவரை உலக சுகாதார அமைப்பு 2020 இல் கொரோனா, 2019 இல் எபோலா மற்றும் 2016 இல் ஜிக்கா வைரஸ் உள்ளிட்ட 6 முறை அவசரநிலையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதாரம் வெளியிட்ட அவசர நிலைகள் அனைத்துமே குறுகிய காலத்தில் பல உயிர்களை காவு வாங்கியது.

உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல்
குரங்கு அம்மை இதுவரை 75-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் ஸ்பெயினில் 3100-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் மற்றும் கனடா போன்ற நாடுகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக உள்ளன. உலகளவில் இந்த ஆண்டில் மட்டும் அதுவும் 80 நாட்களில் 16,000-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது.

2022-இல் குரங்கு அம்மை
2022 ஆம் ஆண்டில் முதல் குரங்கு அம்மை வழக்கு மே 6 ஆம் தேதி கண்டறியப்பட்டது. கடந்த மாதம், 47 நாடுகளில் 3,030 குரங்கு அம்மை வழக்குகள் மட்டுமே பதிவானது. ஆனால் அதன் பின் அடுத்த 30 நாட்களில் 5 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதைப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் பரவல் போன்று உள்ளது என்றே கூற வேண்டும்.

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?
மருத்துவர்களின் கூற்றுப்படி, 1980 ஆம் ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதாவது, 42 வயதிற்கு குறைவானவர்களுக்கு குரங்கு அம்மை தொற்றின் ஆபத்து அதிகம் உள்ளது. ஏனெனில் 1980-களுக்கு முன் பிறந்தவர்கள் சின்னம்மை அல்லது பெரியம்மை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஆராய்ச்சியின் படி, பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

குரங்கு அம்மை வைரஸின் தோற்றம்
முதன் முதலாக குரங்கு அம்மை 1958 ஆம் ஆண்டில் டேனிஷ் தலைநகர் கோபன்ஹேகனில் கண்டறியப்பட்டது. அதுவும் இரண்டு குரங்குகளில் பெரியம்மையில் இருந்து வேறுபட்ட வைரஸ் இருப்பது, அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்டது. குரங்குகளில் இருந்து புதிய வைரஸ் கண்டறியப்பட்டதால், இந்த வைரஸிற்கு குரங்கு அம்மை என்று பெயரிடப்பட்டது.

மனிதரிடம் முதல் பாதிப்பு
மனிதர்களிடம் குரங்கு அம்மையின் முதல் வழக்கானது ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே குரங்கு அம்மை வைரஸ் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு 2003 ஆண்டில் குரங்கு அம்மையின் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்காவில் காணப்பட்டன. இருப்பினும், குரங்கு அம்மையானது அந்த நேரத்தில் சோதனை மற்றும் கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.
அதன் பின் 2021 ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் மீண்டும் குரங்கு அம்மை வைரஸால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு 2022 மே மாதத்தில் மீண்டும் குரங்கு அம்மை தொற்றின் வழக்கு வேகமாக அதிகரித்தது. ஆனால் இந்த முறை குரங்கு அம்மை தொற்று உலகளவில் பல நாடுகளில் பரவியதுடன், நாளுக்கு நாள் குரங்கு அம்மை தொற்றின் வழக்கும் அதிகரித்து வருகிறது. எனவே குரங்கு அம்மையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்.

குரங்கு அம்மையின் அறிகுறிகள்
* அதிகப்படியான காய்ச்சல்
* தலைவலி
* தசை வலி
* முதுகு வலி
* சருமத்தில் தடிப்புகள்/கொப்புளங்கள்
* நடுக்கம்
* உடல் சோர்வு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications