For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை, மஞ்சள் அல்லது ப்ரௌன் நிற வாழைப்பழம்... இவற்றில் எந்த வாழைப்பழம் நல்லது?

பெரும்பாலும் வாழைப்பழங்களில் பழுக்காத பச்சை நிறம் அல்லது அடர் மஞ்சள் நிறம் அல்லது புள்ளிகளுடனான வாழைப்பழங்களைத் தான் நாம் கண்டிருப்போம்.ஒவ்வொரு வகையும் நிறம்,சுவை மற்றும் பயன்பாட்டிலும் வேறுபடுகின்றன.

|

முப்பழங்களுள் ஒன்றான வாழைப்பழம் மிகவும் நல்லது. இத்தகைய வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வாழைப்பழம் ஒவ்வொரு வகையான நன்மைகளை வழங்கக்கூடியது. பெரும்பாலும் வாழைப்பழங்களில் பழுக்காத பச்சை நிறம் அல்லது அடர் மஞ்சள் நிறம் அல்லது புள்ளிகளுடனான வாழைப்பழங்களைத் தான் நாம் கண்டிருப்போம். இந்த ஒவ்வொரு வகையான பழமும் நிறங்களில் மட்டுமின்றி, சுவை மற்றும் பயன்பாட்டிலும் வேறுபடுகின்றன.

Which Banana Should You Eat- Green, Yellow or Brown?

மேலும் பழுக்காத வாழைப்பழங்கள் மற்றும் பழுத்த வாழைப்பழங்களில் கூட ஊட்டச்சத்துக்கள் வேறுபடுகின்றன. உங்களுக்கு இந்த வகையான வாழைப்பழங்களில் எவை சிறந்தவை, அவற்றில் என்ன சத்துக்கள் உள்ளது மற்றும் அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையில் உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான விடைகள் கிடைக்கும். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை வாழைப்பழம்

பச்சை வாழைப்பழம்

பழுக்காத பச்சை வாழைப்பழங்களில் ஸ்ராட்ச் அதிகம் உள்ளது. இது வயிற்றில் சென்றால், உடைத்தெறியவே கடினமாக இருக்கும். மேலும் இந்த வாழைப்பழத்தை பச்சையாக சாப்பிடுவது என்பது எளிதானது அல்லது. பழுத்த வாழைப்பழத்தின் சுவையுடன் ஒப்பிடும் போது, இதன் சுவை கேவலமாக இருக்கும். எனவே வாழைக்காயை பச்சையாக உண்பதற்கு பதிலாக, அவற்றை பஜ்ஜியாகவோ, பொரியலாகவோ, சிப்ஸாகலோ அல்லது குழம்பாகவோ தயாரித்து சாப்பிடலாம். ஆனால் வாழைக்காயால் சந்திக்கும் ஓர் முக்கிய பிரச்சனை, வாய்வுத் தொல்லை. இதற்கு அதில் உள்ள ஸ்டார்ச் தான் காரணம்.

வாழைக்காயின் ஓர் முக்கிய சிறப்பு என்றால், அதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. இதில் உள்ள ஸ்டார்ச் உடலினுள் சென்று க்ளுக்கோஸாக மாற்றமடைந்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.

மஞ்சள் வாழைப்பழம்

மஞ்சள் வாழைப்பழம்

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகம் மற்றும் சர்க்கரை குறைவு. ஆனால் மஞ்சள் வாழைப்பழம், இதற்கு அப்படியே எதிரானது. இதனால் தான் இது மென்மையாகவும், இனிப்பாகவும் உள்ளது. இந்த வகை வாழைப்பழத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம். இதனால் எளிதில் செரிமானமாகிவிடும். மேலும் இப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும். ஏனெனில் இதில் ஸ்டார்ச் மிகவும் குறைவு. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.

வாழைப்பழத்தின் துரதிர்ஷ்டமான பகுதி என்னவென்றால், வாழைப்பழமாகும் போது ஊட்டச்சத்தின் அளவு குறையும். அதாவது, வாழைக்காயாக இருக்கும் போது இருந்த சத்தை விட, வாழைப்பழமாகும் போது சத்து குறைவாகவே இருக்கும்.

டிப்ஸ்

டிப்ஸ்

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்க வேண்டுமானால், அவற்றை ப்ரிட்ஜில் வையுங்கள். இதனால் வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் வேகம் குறைக்கப்படும்.

புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழம்

புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழம்

புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இதில் உள்ள புள்ளிகள் வாழைப்பழத்திற்கு வயதாகிவிட்டதை மற்றும் அவற்றில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றம் அடைந்திருப்பதையும் குறிக்கிறது. ப்ரௌன் நிற புள்ளிகளின் அளவைக் கொண்டு, வாழைப்பழம் எவ்வளவு இனிப்பாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. அதாவது புள்ளிகள் ஆங்காங்கு இருந்தால், அப்பழம் சற்று இனிப்பாக இருக்கும். அது அதிக புள்ளிகள் இருந்தால், சற்று அதிகளவு இனிப்புடன் இருக்கும்.

புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். மேலும் இம்மாதிரியான பழங்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் கொண்டவை. அதாவது வாழைப்பழங்களில் உள்ள ப்ரௌன் நிற புள்ளிகள் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் வல்லமை பெற்றவை. ஆகவே, வாழைப்பழம் புள்ளி புள்ளிகளாக மாறினால், உடனே அவற்றை தூக்கி எறிய நினைக்காமல், சாப்பிட நினையுங்கள்.

ப்ரௌன் வாழைப்பழம்

ப்ரௌன் வாழைப்பழம்

இது தான் வாழைப்பழத்தின் கடைசி பகுதி. அதாவது அழுகிவிட்டது என்று முடிவு எடுப்பதற்கு முன்பான நிலை. இந்த வாழைப்பழம் சற்று அழுகிய தோற்றத்துடன் காணப்படும். இதற்கு இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை தான் காரணம். அதாவது இந்த நிலையில் வாழைப்பழத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ச்சுகளும் சர்க்கரையாக மாற்றப்பட்டிருக்கும். அதே சமயம் இந்த நிலை வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மற்ற நிலைகளை விட அதிகமாக இருக்கும்.

முக்கியமாக இந்த மாதிரியான வாழைப்பழங்களை வழக்கம் போல் கடித்து உண்பது என்பது சற்று கடினம். ஆனால் இவற்றை சமையலில் பயன்படுத்தலாம்.

குறிப்பு

குறிப்பு

வாழைப்பழத்தை உண்பது எல்லாம் ஒருவரின் உடல்நலம் மற்றும் அதைப் பார்க்கும் விதத்தைப் பொறுத்தது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், வாழைக்காய் தான் சிறந்தது. சுவையாகவும், ஆரோக்கியத்தையும் பெற நினைத்தால், மஞ்சள் அல்லது புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்கள் சிறந்தது. வாழைப்பழத்தில் உள்ள முழு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளையும் பெற நினைத்தால், ப்ரௌன் நிற வாழைப்பழத்தை வாங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which Banana Should You Eat- Green, Yellow or Brown?

There are four types of banana as per their ripening process- green, yellow, spotted and brown. All of them have different health benefits. Take a look and decide which one you should eat.
Story first published: Tuesday, October 8, 2019, 14:10 [IST]
Desktop Bottom Promotion