For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பிறப்புறுப்பில் மீன் நாற்றம் அடிக்குதா? அப்ப உங்களுக்கு இந்த பாலியல் பிரச்சனைகள் இருக்க வாய்பிருக்காம்!

வஜினிடிஸ் என்பது யோனியில் ஏற்படும் ஓர் அழற்சி நிலை. மீன் நாற்றம் கொண்ட யோனி துர்நாற்றத்திற்கு மிகவும் பொதுவான காரணம் வஜினிடிஸ் ஆகும்.

|

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் பிறப்புறுப்பு பகுதியில் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறப்புறுப்பு பகுதி சுத்தமாக இல்லாததாலும், பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடாததும் உங்கள் பிறப்புறுப்பில் நோய்தொற்றுக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களே! உங்கள் யோனியில் லேசான நாற்றம் வீசுவது சாதாரணமானது. அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால், அருவருப்பான, மீன் நாற்றம் கொண்ட யோனி வெளியேற்றம் உங்கள் சுகாதாரத்தை பற்றி எச்சரிக்கிறது. யோனி நோய்தொற்றுகள் காரணமாக உங்களின் யோனியில் மீன் நாற்றம் வீசலாம். மேலும், பல உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

what-it-could-mean-if-you-have-a-fishy-vaginal-odor-in-tamil

அதனால்தான் எந்தவொரு குறிப்பிடத்தக்க அறிகுறியும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உங்கள் யோனியில் மீன் நாற்றம் இருந்தால், உங்களுடைய சுகாதார நிலையை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வஜினிடிஸ்

வஜினிடிஸ்

வஜினிடிஸ் என்பது யோனியில் ஏற்படும் ஓர் அழற்சி நிலை. மீன் நாற்றம் கொண்ட யோனி துர்நாற்றத்திற்கு மிகவும் பொதுவான காரணம் வஜினிடிஸ் ஆகும். இது உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் வெளியேற்றம், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். யோனி பாக்டீரியாவின் சமநிலை மாற்றம் அல்லது தொற்று காரணமாக இது நிகழ்கிறது. மேலும், மாதவிடாய் நிறுத்தம் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க வழிவகுக்கும், இதனால் வஜினிடிஸ் ஏற்படலாம். யோனி அழற்சியின் மிகவும் பொதுவான வகைகளில் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

பாக்டீரியா வஜினோசிஸ்

பாக்டீரியா வஜினோசிஸ்

பாக்டீரியல் வஜினோசிஸ் என்பது இயற்கையாகவே யோனியில் காணப்படும் பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். யோனியின் இயற்கையான சமநிலையில் ஏற்படும் இந்த சுகாதார நிலை வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது யோனி வலி, அரிப்பு, வலுவான மீன் நாற்றத்துடன் வெள்ளை அல்லது சாம்பல் நிற வெளியேற்றத்தை கொண்டிருக்கும். குறிப்பாக உடலுறவுக்குப் பிறகு எரியும் போன்ற அறிகுறிகளுக்கும் வழிவகுக்கிறது.

டிரிகோமோனியாசிஸ்

டிரிகோமோனியாசிஸ்

ஆய்வின் கூற்றுப்படி, ட்ரைக்கோமோனியாசிஸ் என்பது ஒட்டுண்ணியால் ஏற்படும் பொதுவான பாலியல் பரவும் தொற்று (STI) ஆகும். இந்த நிலைக்கான ஆபத்து காரணிகளில் முக்கியமான ஒன்று, உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்தாதது. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசும் வெளியேற்றம், பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் வலிமிகுந்த சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

உங்கள் நோயறிதலை உறுதிப்படுத்த, நீங்கள் மீன் நாற்றத்துடன் இருக்கும் மற்ற அனைத்து பொதுவான யோனி தொற்று அறிகுறிகளையும் பார்க்க வேண்டும். இதில் சாம்பல் மற்றும் வெள்ளை, பச்சை கலந்த மஞ்சள் அல்லது வெள்ளை யோனி வெளியேற்றம் ஆகியவை அடங்கும். இது அரிப்பு மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கிறது. உடலுறவுக்குப் பிறகு யோனியில் மீன் நாற்றம் அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் அல்லது அனைத்தையும் நீங்கள் சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?

பாக்டீரியா வஜினோசிஸ் அல்லது ட்ரைக்கோமோனியாசிஸ் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களால் அதைத் தடுக்கலாம். அவை என்னென்ன பழக்கங்கள் என்று இங்கே காணலாம்.

ஆரோக்கியமான பாலியல் சுகாதாரத்தை கடைபிடித்தல்

யோனி பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்

மிகவும் இறுக்கமாக இல்லாத பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும்

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

மிக முக்கியமாக, ஆணுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What it could mean if you have a fishy vaginal odor in tamil

What it could mean if you have a fishy vaginal odor in tamil
Story first published: Wednesday, January 25, 2023, 12:11 [IST]
Desktop Bottom Promotion