Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Havana syndrome: வியட்நாமில் பரவும் மர்மமான ஹவானா நோய்க்குறி - அதன் அறிகுறிகள் என்ன?
சமீபத்தில் அமெரிக்க துணைத் தலைவரான கமலா ஹாரிஸின் சிங்கப்பூரில் இருந்து வியட்நாம் செல்லும் விமானம் "ஹவானா சிண்ட்ரோம்" என்று அழைக்கப்படும் ஒரு மர்ம நோய் காரணமாக பல மணிநேரம் கழித்து புறப்பட்டது.
சமீபத்தில் அமெரிக்க துணைத் தலைவரான கமலா ஹாரிஸின் சிங்கப்பூரில் இருந்து வியட்நாம் செல்லும் விமானம் "ஹவானா சிண்ட்ரோம்" என்று அழைக்கப்படும் ஒரு மர்ம நோய் காரணமாக பல மணிநேரம் கழித்து புறப்பட்டது.
ஹவானா சிண்ட்ரோம் என்பது ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதகரத்தால் 2016 இல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மர்மமான நோய். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு தலையில் காயம் அல்லது மூளை காயம் போன்ற எதுவும் இல்லாமல், தலைவலி, நினைவாற்றல் இழப்பு, கண் செயலிழப்பு, காது வலி, டின்னிடஸ் மற்றும் மூளை அசாதாரணங்கள் போன்ற மனநோயின் அறிகுறிகள் இருக்கும்.

பின்னர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கியூபா மற்றும் சீனாவில் உள்ள பல அமெரிக்க தூதர்கள் அதே அறிகுறிகளை சந்தித்ததாக அறிவித்தனர். ஆகவே இது ஒரு சோனிக் சாதனத்தால் தொடங்கப்பட்ட ஒலி தாக்குதல் என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை சந்தேகிக்க வைத்தது. இப்போது ஹவானா சிண்ட்ரோம் என்றால் என்ன, இந்த நிலைக்கான சரியான காரணம் என்ன என்பன பற்றி விரிவாக காண்போம்.

ஹவானா சிண்ட்ரோம்மின் அறிகுறிகள்
ஹவானா சிண்ட்ரோட்மின் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிகுறிகளின் பட்டியல் இதோ:
* திடீரென்று காது வலியுடன் அதிகப்படியான சப்தம் கேட்பது
* தலையில் அழுத்தம் அல்லது அதிர்வுகள்
* டின்னிடஸ்
* கண் கூச்சம் அதிகம் இருக்கும், ஆனால் சோதனையில் பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள் இருக்காது.
* வெர்டிகோ
* அறிவாற்றல் சிரமங்கள்
* தொடர்ந்து தலைச்சுற்றல்
* தலைவலி
* குமட்டல்
* உடல் சோர்வு
* ஞாபக மறதி
* மந்தமாக இருப்பது
* நடப்பதில் சிரமம்
* தூக்கமின்மை
* குழப்பம்
* கவனம் செலுத்துவதில் சிரமம்
* மூளை அசாதாரணங்கள்

காரணங்கள்
ஆரம்பத்தில், ஹவானா சிண்ட்ரோம் தறைசெயலான அல்லது வேண்டுமென்றே ஒரு விஷமிக்க ரசாயனம், பூச்சிக்கொல்லி அல்லது மருந்தின் வெளிப்பாடு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் கொண்டனர். இருப்பினும், அத்தகைய தடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களிலோ அல்லது அவர்களின் வீடுகளிலோ காணப்படவில்லை. ஆனால் அல்ட்ராசோனிக் அல்லது மைக்ரோவேவ் ஆற்றலை வெளியிடும் ஒரு வகை இயந்திரம் காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய கதிரியக்க அதிர்வெண் ஆற்றல் வெளிப்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்த உயிரி ஆயுதங்கள் மூலம் ஒருவரின் காதுக்குள் உள்ள திரவத்தில் நுண்குமிழிகளை உருவாக்கும். அந்த குமிழ்கள் இரத்தத்தின் வழியாக மூளைக்குள் பயணிக்கும் போது, அவை மூளையில் உள்ள செல்களில் சேதத்தை ஏற்படுத்தி, மூளை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது.
மற்றொரு விளக்கத்தின் படி, கதிரியக்க அதிர்வெண் அலைகளை மண்டைக்குள் நேரடியாக ஊடுருவுவதால், இம்மாதிரியான அறிகுறிகள் ஏற்படலாம். ஹவானா சிண்ட்ரோம் ஒருவரை பலகூனப்படுத்தினாலும், ஆபத்தானது அல்ல. இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அனைவருமே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

ஹவானா சிண்ட்ரோம்-க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடும் போது, இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களில் உள்ள வெள்ளை நிற பகுதியில் வேறுபாடுகளை காட்டுகின்றன. இதைப் பார்க்கும் போது, ஹவானா சிண்ட்ரோம் என்பது மூளை செயல்பாடு மற்றும் கட்டமைப்பில் குறிப்பிடப்படாத மற்றும் புரிந்து கொள்ள முடியாத மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு கோளாறு என்பது தெரிகிறது.
ஹவானா சிண்ட்ரோம் நோயாளிகளுக்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. இருப்பினும், சில நரம்பியல் பயிற்சிகள், அறிவாற்றல் பயிற்சிகள், மூளை பயிற்சிகள் மற்றும் நரம்பு தசை மறுபயன்பாட்டு பயிற்சிகள் போன்ற சில தீவிர பயிற்சிகள் அறிகுறிகளைக் குறைக்கவும், நோயாளிகளின் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு இந்நோய்க்கான மேலாண்மை சிகிச்சையில் தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளைக் கொண்டுள்ளது.

முடிவு
ஹவானா சிண்ட்ரோம் இன்னும் விசாரணையில் உள்ளது. ஏனெனில் காது வலிக்கும் அளவில் சப்தம் எப்படி வருகிறது மற்றும் ஏன் அமெரிக்க தூதர்கள் மட்டுமே இம்மாதிரியான பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.



Click it and Unblock the Notifications
