For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போடணும் தெரியுமா?

கொரோனா தடுப்பூசி பூஸ்டர் ஷாட்டுகள் வயதானவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

|

கொரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து இன்று வரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மக்களுக்கு போடப்பட்டு வரும் கோவிட்-19 தடுப்பூசிகள் கொரோனா புதிய உருமாற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் சற்று குறைவான செயல்திறனைக் கொண்டுள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அதனால் தான் கோவிட் பூஸ்டன் ஷாட் போட வேண்டுமென்ற பேச்சு அதிகரித்து வருகிறது.

What Is COVID-19 Vaccine Booster? Is It Really Effective? All You Need to Know In Tamil

இஸ்ரேலில் ஏற்கனவே ஆபத்தில் உள்ள பெரியவர்களுக்கு பூஸ்டர் ஷாட்டுகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவிலும் பூஸ்டர் ஷாட்டை அறிமுகப்படுத்துவதற்காக ஃபைசருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், பூஸ்டர் ஷாட்டுகள் குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இன்னும் உள்ளன. இப்போது கோவிட் பூஸ்டர் ஷாட்டுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூஸ்டர் ஷாட் என்றால் என்ன?

பூஸ்டர் ஷாட் என்றால் என்ன?

பூஸ்டர் ஷாட் என்பது நோய்க்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் மக்களுக்கு வழங்கப்படுவதைக் குறிக்கிறது. பொதுவாக தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் திறன் குறைவதால், நோயின் அபாயத்தைக் குறைக்க பூஸ்டர் ஷாட் பெறுவது அவசியம். குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய அளவு தடுப்பூசியை எடுத்துக் கொள்வது உடலில் உள்ள வைரஸை திறம்பட எதிர்த்துப் போராம உதவுகிறது. பெரும்பாலும் தடுப்பூசி பூஸ்டரானது முந்தைய டோஸ் போன்றது தான். சில நேரங்களில் அவை செயல்திறனை அதிகரிக்க மாற்றியமைக்கப்படுகின்றன. காய்ச்சல், டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் (DTaP) போன்ற பல வைரஸ் தொற்றுகளிலும் பூஸ்டர் ஷாட்கள் வழங்கப்படுகின்றன.

ஏன் பூஸ்டர் ஷாட் எடுக்க வேண்டும்?

ஏன் பூஸ்டர் ஷாட் எடுக்க வேண்டும்?

பூஸ்டர் ஷாட்கள் எடுப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், தடுப்பூசியால் வழங்கப்படும் நோயெதிர்ப்பு சக்தி சிறிது காலம் கழித்து குறைந்துவிடும். இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவது உடலில் உள்ள ஆன்டிஜெனை மீண்டும் அறிமுகப்படுத்தி, ஒரு பாதுகாப்பை பராமரிக்க நோயெதிர்ப்பு அமைப்பிற்கு உதவுகிறது. மற்றொரு காரணம், வைரஸின் பிறழ்வு ஆகும். வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பதால், அதனுடன் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு பூஸ்டர் ஷாட் உதவியாக இருக்கும்.

யாரெல்லாம் பூஸ்டர் ஷாட் எடுக்க வேண்டும்?

யாரெல்லாம் பூஸ்டர் ஷாட் எடுக்க வேண்டும்?

பூஸ்டர் ஷாட்டுகள் வயதானவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கொரோனாவுக்கு பூஸ்டர் ஷாட் பெறுவதற்கான அதிகபட்ச கால வரம்பு என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்தியாவில் பூஸ்டர் ஷாட்டுகளின் நிலை என்ன?

இந்தியாவில் பூஸ்டர் ஷாட்டுகளின் நிலை என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசி பூஸ்டர் ஷாட் எப்போது போடலாம்?

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவல்லா சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியின் மூன்றாவது அல்லது பூஸ்டர் டோஸ் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு தேவை என்று கூறினார். பொதுவாக தடுப்பூசி போட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அளவு குறையும். எனவே தான் பூஸ்டர் ஷாட் தேவை என்றும் அவர் கூறினார்.

கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்

கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்

ஏப்ரல் மாதத்தில் பாரத் பயோடெக் தயாரிப்பாளர்கள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலில் இருந்து கோவாக்ஸின் மூன்றாவது ஷாட் சோதனை நடத்த அனுமதி பெற்றனர். முதல் சோதனை முடிவு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இறுதி முடிவு நவம்பர் 2021-க்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் பிரியா ஆபிரகாம் கூட நாட்டில் பூஸ்டர் டோஸின் அவசியத்தை வலியுறுத்தினார். வைரஸின் புதிய உருமாற்றங்கள் காரணமாக இது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

தற்போது உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பூஸ்டர் ஷாட் போட வேண்டியதன் அவசியத்தை தவிர்க்கிறது. மேலும் கோவிஷீல்டு பயன்படுத்துபவர்களுக்கு பூஸ்டர் ஷாட் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. ஆறு மாதகால முழுமையான தடுப்பூசிக்கு பிறகு கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் குறித்த கவலை எழும் நிலையில், இம்மாதிரி உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.

பிப்ரவரி 8, 2021 அன்று தடுப்பூசி குறித்த மூலோபாய ஆலோசனைக் குழு (SAGE) வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டது. மேலும் அதிகளவு தரவுகளை திட்டிய பின்னர் பூஸ்டர் டோஸின் தேவை மற்றும் நேரம் மதிப்பீடு செய்யப்படும் என்று UN அமைப்பு தெளிவுபடுத்தியது. ஆனால் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் பற்றி இதுவரை எதுவும் கூறப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is COVID-19 Vaccine Booster? Is It Really Effective? All You Need to Know In Tamil

What is COVID-19 Vaccine Booster in Tamil: covid-19 booster shot really effective against different variants of Coronavirus, why and who should take covid vaccine booster shot. Know more.
Story first published: Wednesday, August 25, 2021, 16:11 [IST]
Desktop Bottom Promotion