Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும்-ன்னு தெரியுமா?
மலச்சிக்கலின் போது உடலுக்கு என்ன நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அல்லது உங்களுக்கு என்ன நடக்கும் என்றாவது தெரியுமா?
பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல். இப்பிரச்சனையைப் பற்றி பலர் வெளிப்படையாக மற்றவர்களுடன் பேச தயக்கம் கொள்வார்கள். மலச்சிக்கலானது ஒருவருக்கு ஏற்படுவதற்கு அவர்களது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம்.

நார்ச்சத்து குறைவாக உணவுகளைக் குறைத்து, கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பதால், குடலால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல், வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கலை உண்டாக்குகின்றன. இப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பல இயற்கை வழிகள் உள்ளன.
ஆனால் மலச்சிக்கலின் போது உடலுக்கு என்ன நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அல்லது உங்களுக்கு என்ன நடக்கும் என்றாவது தெரியுமா? இல்லையெனில், இக்கட்டுரையில் மலச்சிக்கலின் போது உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தசை கிழியும்
மலம் எளிதில் வெளியேறாமல் இருக்கும் போது சங்கடமாக இருக்கலாம். ஆனால் மலச்சிக்கலால் கழிவறையில் சிரமப்படும் போது அது குறிப்பிட்ட தசை கழிய வழிவகுக்கும். அதிலும் மலத்தை வெளியேற்ற அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கும் போது, மலம் வெளியேறும் வெளிப்புற தசை கழிக்கப்படலாம். இந்த தசை தான் குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த தசையில் வழக்கத்திற்கு அதிகமான அழுத்தம் தினசரி கொடுக்கப்படும் போது, அப்பகுதியில் வீக்கத்தை மட்டுமின்றி, இரத்தப்போக்கையும் ஏற்படுத்தக்கூடும்.

பசியில் மாற்றம் ஏற்படும்
எப்போது ஒருவரால் சரியாக மலத்தை வெளியேற்ற முடியாமல் போகிறதோ, அப்போது சிறிது சாப்பிட்டாலும், அது எளிதில் வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும். குறிப்பாக நாள்பட்ட மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தான், இம்மாதிரியான பிரச்சனையை சந்திப்பார்கள்.

உடல் வறட்சி/நீரிழப்பு
உடலில் போதுமான அளவு நீரில்லாமல் போகும் போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கல் ஏற்படுகிறது. அதிலும் ஒருவர் மலச்சிக்கலுடன், உடல் வறட்சியையும் கொண்டிருந்தால், அது அவர்களுக்கு தலை வலி, தலைச் சுற்றல் மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுவது போன்றவற்றை சந்திக்க வழிவகுக்கும்.

மூல நோய்
மலச்சிக்கலால் அடிக்கடி கஷ்டப்படுபவர்களுக்கு, மூல நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் மலம் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தத்தை வழக்கத்தை விட அதிகமாக கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள சிறிய இரத்த குழாயில் தொடர்ச்சியாக அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, அந்த இரத்த நாளங்கள் வீக்கமடைய ஆரம்பித்து, மூல நோயை உண்டாக்கும்.

சிறுநீர் கசிவு
உடலில் சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடலும் அருகாமையில் அமைந்துள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சிறுநீரகத் துறையின் கூற்றுப்படி, சிறுநீர்ப்பையை ஒழுங்குபடுத்தும் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும், குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும் தசைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. பெருங்குடலில் அதிகளவிலான மலம் சேரும் போது, அது சிறுநீர்ப்பையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும்.

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை
மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களால், எளிதில் வாய்வு வெளியேற்ற முடியாமல் போகும். இதன் விளைவாக அவர்கள் வயிறு உப்புச பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் எப்போது ஒருவரது குடலில் மலம் வழக்கத்தை விட அதிக நேரம் இருக்கிறதோ, அப்போது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மலத்துடன் சேர்ந்து செயல்பட்டு வாய்வை உருவாக்கும். இப்படி உருவாகும் வாய்வு இறுக்கமடைந்த மலம் காரணமாக எளிதில் வெளியேற்ற முடியாமல், வயிற்று உப்புச பிரச்சனையை சந்திக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications
