Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
உடல் எடையை வேகமாக குறைக்கணுமா? அப்ப இரவு உணவை இத்தனை மணிக்கு சாப்பிடுங்க...!
ஊட்டச்சத்து நிபுணர்கள் இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இரவு உணவின் மூலம் அதிக நன்மைகளை பெற உங்கள் இரவு உணவு 8 மணிக்கு முன்னால் சாப்பிடப்பட வேண்ட
தினமும் சீக்கிரமாக தூங்குவது நம் உடலுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது நம் உங்களுக்கு தேவையான தூக்கத்தைப் பெற அனுமதிக்கிறது என்பதால் மட்டுமல்லாமல், மறுநாள் காலையில் நீங்கள் அதிக ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் பெற உதவும். ஆனால் விரைவில் தூங்குவது என்பது பலராலும் முடியாத காரியாகும்.

விரைவில் தூங்க முடியாதவர்கள் அதேயளவு நன்மை பெறுவதற்கு வேறொரு வழியும் உள்ளது, அதுதான் சீக்கிரமாக சாப்பிடுவது. ஊட்டச்சத்து நிபுணர்களும் இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இரவு உணவின் மூலம் அதிக நன்மைகளை பெற உங்கள் இரவு உணவு 8 மணிக்கு முன்னால் சாப்பிடப்பட வேண்டும். இந்த பதிவில் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

எடை குறைப்பு
இரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொள்ள முக்கிய காரணம் என்னவெனில் இது எடை இழப்புக்கு உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு சாப்பிடுவதற்கான சிறந்த நேரமாகும், மேலும் உங்கள் இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம், நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் சீக்கிரமாக திருப்தியான உணர்வை அடைவதால் இது நடக்கிறது. மேலும் உங்கள் உடல் உணவை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறது.

உடல் பருமன் அபாயத்தை குறைக்கிறது
நீங்கள் தாமதமாக சாப்பிடும்போது, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகள் ஆற்றல் உங்கள் உடலுக்கு தேவையில்லை, எனவே அவை கொழுப்பாக சேமிக்கப்படும். தாமதமாக சாப்பிடுவது கலோரிகளின் கொழுப்பாக சேமிக்கப்படும் ஒரு சுழற்சியைப் அதிகரிக்கிறது, இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு கூட வழிவகுக்கும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது
புற்றுநோய் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், படுக்கைக்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை, புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து 26% குறைகிறது, பெண்களுக்கு, மார்பக புற்றுநோயின் ஆபத்து 16% குறைகிறது.

மனநிலை மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது
சீக்கிரமாக இரவு உணவை உட்கொள்வது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த அதிக நேரம் தருகிறது, இது உங்களுக்கு குறைந்த சோர்வு மற்றும் எரிச்சலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சீக்கிரம் சாப்பிடுவது படுக்கைக்கு முன் செயல்பாடுகளைச் செய்வதற்கு அதிக சக்தியைத் தருகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்கள் உணவு சாப்பிட்டால் அமிலத்துவம், வாயுக்கோளாறு, வீக்கம் அல்லது வயிற்று வலி போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துவதால் உணவு சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்தும் அஜீரணத்தின் அறிகுறிகளாகும், மேலும் இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையில் நீங்கள் அதிக இடைவெளி விட்டால், உங்கள் செரிமான அமைப்பு நன்றாக செயல்படும்.

நல்ல தூக்கம்
இரவு உணவை சாப்பிட்டவுடன் உடனடியாக தூங்க செல்வது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். நீங்கள் தூங்கும்போது உங்கள் செரிமான அமைப்பு செயல்படும், இது உங்கள் REM அல்லது ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கும், அமைதியின்மை அல்லது தூக்கமின்மையை ஏற்படுத்தும். தாமதமாக சாப்பிடுவது ஆல்கஹால் போலவே தூக்கத்தில் இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்
இரவு உணவை தாமதமாக சாப்பிடும் நபர்கள் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் தாமதமாக சாப்பிடும்போது, கலோரிகள் எரிக்கப்படாது, அவை ட்ரைகிளிசரைட்களாக மாற்றப்படுகின்றன, இது கொழுப்பு அமிலம், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். முன்னதாக இரவு உணவை உட்கொள்வது ட்ரைகிளிசரைடுகள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.



Click it and Unblock the Notifications
