Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
வெங்காயமும் பூண்டும் நீங்க அதிகமா சாப்பிடுறீங்களா? அப்ப உங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன தெரியுமா?
வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோபம், ஆக்ரோஷம், அறியாமை, சோம்பல், பதட்டம் மற்றும் பாலியல் ஆசை அதிகரிப்பு போன்ற சில எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு என்பது நம் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், இது உயிர் வாழ அவசியமானது. உணவு நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சமையல் பிடிக்கும். எந்த வகை சமையலாக இருந்தாலும் சரி, அவற்றில் சில பொருட்கள் கட்டாயம் இடம் பிடிக்கும். அப்படி இடம் பிடிக்கும் உணவுப்பொருட்கள்தான் வெங்காயமும் பூண்டும். இந்தியாவை பொறுத்தவரை, வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் இல்லை எனலாம்.

இவை இரண்டுமே உணவின் சுவையை மேலும் கூட்டுவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது, அதிகப்படியான கொழுப்பை குறைப்பது, இயற்கை இரத்த சுத்திகரிப்பானாக செயல்படுவது, ஆன்டி-ஃபங்கல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பது மற்றும் ஆன்டி-பயாடிக்காக செயல்படுவது என இவற்றின் ஆரோக்கிய பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பூண்டும், வெங்காயமும் ஏன் அதிகமாக சாப்பிடக்கூடாது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வெங்காயம் மற்றும் பூண்டு
ஆயுர்வேதம் மற்றும் ஒரு சில மேற்கத்திய ஆராய்ச்சிகளின்படி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக எப்போதும் இருக்காது என்று கூறப்படுகிறது. வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதில்லை என்பதற்காக கூறப்படும் காரணங்கள் (ஆயுர்வேதத்தின்படி) மாறுபடுகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இத்தகைய காரணங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. மேலும், எக்காரணம் கொண்டும் இவற்றை பொதுமைப்படுத்தவே முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உட்கொள்ளாததன் பின்னணியில் கூறப்படும் காரணங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ள்ளலாம்.

சக்தி வாய்ந்த பண்புகள்
பூண்டு ஒரு சக்திவாய்ந்த மூலிகை ஆகும். மேலும், ஆயுர்வேத மருத்துவர்கள் இதை மருந்தாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், தினசரி உணவுகளில் இதனை உட்கொள்ள ஒருபோதும் பரிந்துரைக்கப்படுவது கிடையாது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக். பூண்டு கெட்ட கிருமிகளை மட்டுமல்ல, உடலிற்கு தேவையான மற்றும் முக்கியமான நட்பு பாக்டீரியாக்களையும் கொல்லும் என்றும் கூறப்படுகிறது.

ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று உயிர் சக்திகள் உண்டு. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான உடலமைப்பை வழங்குகின்றன. பித்தம் ஆனது தீ மற்றும் நீரின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளையும், உடலின் வெப்பநிலை மற்றும் ஹார்மோன் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

பிரச்சனைகளை ஏற்படுத்தும்
சல்பர் நிறைந்த எந்த மூலப்பொருளோ, வெங்காயம் மற்றும் பூண்டு மிகவும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிவை. அவை உடல் மற்றும் உணர்ச்சி மட்டங்களில் பித்தத்தை மிகவும் மோசமாக்குகின்றன. அமில பிரதிபலிப்பு, புண்கள், பெருங்குடல் அழற்சி, நெஞ்செரிச்சல், குடல் அழற்சி, சரும வெடிப்பு அல்லது சிவத்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், பிரச்சனை மேலும் மோசமாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையான காரணம்
வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோபம், ஆக்ரோஷம், அறியாமை, சோம்பல், பதட்டம் மற்றும் பாலியல் ஆசை அதிகரிப்பு போன்ற சில எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தியானம் செய்வோர் அல்லது ஆன்மீக பாதையை பின்பற்ற விரும்புவோர், வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர்.

மனநிலை பாதிக்கப்படலாம்
வெங்காயம், பூண்டு போன்ற ராஜ்சிக் உணவுகள் ஒருவரின் மனநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு நபரின் கவனத்தை சிதறச்செய்யலாம், மனநிலையை பாதிக்கலாம், மேலும் நிலையற்ற புத்தியையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ராஜ்சிக் உணவு என்பது சூடான, காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் கலவையாகும். இது எதிர்மறை, ஆர்வம், அமைதியின்மை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆய்வு முடிவு
ஒரு ஆய்வின் படி, பூண்டு மூளைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. பூண்டு அதிகமாக உட்கொள்வது மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கூறுகிறார்கள். ஏனெனில் அதன் சல்போன் ஹைட்ராக்சில் அயனிகள் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்தவோ அல்லது மூளை செல்களுக்கு விஷத்தை ஏற்படுத்தவோ கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications