Latest Updates
-
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க
ஆண்கள் நீண்ட நேரம் படுக்கையில் செயல்பட உதவும் எளிய மற்றும் ஆரோக்கியமான வழிகள்...!
பெண்களை விட ஆண்கள் உடலுறவின் போது விரைவில் உச்சக்கட்டம் அடைந்து விடுகிறார்கள் என்பது பலரும் அறிந்ததே. பெரும்பாலான ஆண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சந்திக்கும் முக்கியமான பிரச்சினையாக இது உள்ளது.
பெண்களை விட ஆண்கள் உடலுறவின் போது விரைவில் உச்சக்கட்டம் அடைந்து விடுகிறார்கள் என்பது பலரும் அறிந்ததே. பெரும்பாலான ஆண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சந்திக்கும் முக்கியமான பிரச்சினையாக இது உள்ளது. குறிப்பாக 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் பெரும்பாலானோர் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

முன்கூட்டியே விந்து வெளியேறுவதால் பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் முழு திருப்தி அடைவதில்லை. இது பெண்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். பெரும்பாலும் தம்பதிகளுக்கு இடையே விரிசல் உருவாக இது முக்கியமான காரணமாக மாறிவிடுகிறது. படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும் சில எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

விரைந்து செயல்படக்கூடாது
ஆண்கள் படுக்கையில் முதலில் அவசரப்படக்கூடாது. நீங்கள் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள விரும்பினால் நீங்கள் மெதுவாக தொடங்க வேண்டும். ஒவ்வொரு கால அளவிற்கும் ஒரு குறிக்கோளை நியமித்துக் கொள்ளுங்கள். பின்னர் படிப்படியாக ஒரு உச்சநிலைக்கு எடுத்துச்செல்லுங்கள். இந்த ஒவ்வொரு உந்துதலும் உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். நீங்கள் விரைவில் முடிக்கப்போவதாக உணர்ந்தால் சில நொடிகள் இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கவும்.

மீண்டும் முயற்சிக்கவும்
உடலுறவுக்கு முன் வீரியமான ஃபோர்ப்ளே உங்கள் இருவருக்கும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் புணர்ச்சியைப் பெறுவது மட்டுமல்லாமல், உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் இது ஏற்படுத்தும். ஆனால் முக்கிய நிகழ்வுக்கு முன்பு விந்து வெளியேற்றுவது உங்கள் நேரத்தை தாமதப்படுத்தும். பல ஆண்களுக்கு, தங்களை ரீசார்ஜ் செய்ய சில நிமிடங்கள் ஆகும், இதனால் பெண்கள் திருப்தி அடைய நிறைய நேரம் இதன்மூலம் கிடைக்கும்.

இடுப்பு தசை உடற்பயிற்சிகள்
உங்கள் இடுப்புத் தசைகளை வலுப்படுத்துவது படுக்கையில் நீண்ட நேரம் செயல்படுவதற்கான முக்கியமான ஒன்றாகும். இது உங்கள் விந்து வெளியேற்றத்தை தாமதப்படுத்தும். ஆண்களில் முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கு சிகிச்சையளிக்க உதவும் அதே பயிற்சிகள்தான் இடுப்பு தசையை பலப்படுத்தவும் உதவுகின்றன. இந்த உடற்பயிற்சிகள் பெரும்பாலான ஆண்களுக்கு கிட்டத்தட்ட 12 வாரங்களுக்குப் பிறகு முன்கூட்டிய விந்துதள்ளல் விகிதங்களை மேம்படுத்தலாம்.

காண்டம் உபயோகியுங்கள்
இது வேடிக்கையானதாக தோன்றலாம். கருத்தரிக்க விரும்பாதவர்கள் காண்டம் பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் அது இயற்கையாக இல்லாமல் இருப்பதால் அதனை தவிர்க்கின்றனர். காண்டம் அணிந்து உடலுறவு மிகவும் வித்தியாசமானது, இதனை ஆண்கள் தாமதமான விந்து வெளியேற்றத்துக்கு பயன்படுத்தலாம். ஆண்குறியின் உணர்வு ஆணுறை மீது சிறிது பலவீனமாக இருக்கும், இது நீண்ட கால உடலுறவை குறிக்கும்.

பொசிஷன்களை மாற்றவும்
தம்பதிகள் இருவரும் ஒரே சீரான உடலுறவு பயணத்தை மேற்கொள்ளும்போது அது ஆண்களை விரைவில் அதிலிருந்து விலக்கிவிடும். ஏனெனில் ஆண்கள் ஒரு நிலையில் வசதியாக உணர்ந்தால் அது அவர்களை விரைவில் உச்சக்கட்டத்தை அடைய வைக்கிறது. ஒரு சில பொசிஷன்களை பரிசோதிக்க உடலுறவு நிலையை மாற்றவும், அதனால் நிச்சயமாக ஆண்களுக்கு விந்து வெளியேறும் நேரம் அதிகரிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
