மனச்சோர்வைப் போக்கி வாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்வதற்கான வழிகள்!

பல்வேறு மனநல பாதிப்புகளை எதிர்த்து போராடும் ஒவ்வொரு நபரும் மனச்சோர்வில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

சில காலங்களுக்கு முன்பு வரை மக்களுக்கு மனஅழுத்தம் என்பது பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் எல்லா தரப்பு மக்களும் மனஅழுத்தத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Ways to Find Happiness After Depression In Tamil

1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2010 ஆம் ஆண்டு 45-60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மனஅழுத்த அளவு மிக அதிகம் இருப்பதாக 'அமெரிக்கன் சைக்காலஜிஸ்ட்' என்ற பத்திரிகை ஆய்வு வெளியிட்டுள்ளது. மனநல ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த மனஅழுத்தம் அதன் தன்மை மற்றும் அளவில் வேறுபடுகிறது. சில நேரங்களில் டிப்ரெஷன் எனப்படும் மனச்சோர்வையும் உண்டாக்குகிறது.

மனச்சோர்வு பாதிப்பைக் கொண்ட ஒரு நபர் அவ்வப்போது மனநிலை மாற்றம், சோகம், இழப்பு மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளால் மாறி மாறி பாதிக்கப்படுகிறார்.

இன்றைய சூழ்நிலையில் பலரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே இந்த பாதிப்பை தைரியமாக ஒப்புக் கொள்கின்றனர். பல்வேறு மனநல பாதிப்புகளை எதிர்த்து போராடும் ஒவ்வொரு நபரும் மனச்சோர்வில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆகவே மனச்சோர்விற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை நிர்வகிக்க சில எளிய குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடைப்பயிற்சி/உடற்பயிற்சி

நடைப்பயிற்சி/உடற்பயிற்சி

சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்வதால் மனச்சோர்வை எதிர்த்து எளிதில் போராட முடியும். ஒரு நபர் மனச்சோர்வினால் பாதிக்கப்படும் போது, அவருக்குள் ஆற்றல் குறைந்த உணர்வு தோன்றும், சுறுசுறுப்பு குறைந்த உணர்வு தோன்றும். ஆகவே சில சுறுசுறுப்பான உடல் செயல்பாடுகள் அவருடைய மனநிலையில் நல்ல முன்னேற்றத்தை தரும். சில நேரங்களில் யோகா பயிற்சி செய்வது கூட நல்ல பலனை அளிக்க முடியும். சரியான ஆன்மீக வழிநடத்துதல் மற்றும் யோகா பயிற்சி நடைமுறைகள் போன்றவற்றை கற்றுத் தரும் சில ஆன்லைன் பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.

மற்றவரிடம் பேசலாம்

மற்றவரிடம் பேசலாம்

நம்மை எதிர்மறையாக தாக்கும் சில பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசுவது மிகவும் முக்கியம். நம்மை தொந்தரவு செய்யும் பாதிப்புகள், மனநிலையில் உண்டாகும் குழப்பம் போன்றவற்றைப் பற்றி நமக்கு நம்பிக்கை மிகுந்த நபருடன் கலந்துரையாடும் போது மனதில் அடைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் வெளியேறும். மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் சுமைகள் வெளியேறும் போது மனதிற்கு இதமான உணர்வு கிடைக்கும். உங்கள் நம்பிக்கைக்கு உகந்த நபர் யாரும் இல்லை என்றால், ஆன்லைன் தளங்களான ப்லாஹ்தெரபி, 7 கப்ஸ் போன்றவை நல்ல பலன் தரலாம். இந்தியாவில் ‘ஈட் லவ் ன் ப்ரே' போன்ற ஆன்லைன் தளங்கள் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்கள் போன்றவர்களைக் கொண்டு விரைவில் தொடங்கவிருக்கிறது.

நல்ல ஊட்டச்சத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்

நல்ல ஊட்டச்சத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்

நாம் உட்கொள்ளும் உணவு, நமது பசியுணர்வு மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக நமது மனநிலைக்கும் நாம் உட்கொள்ளும் உணவிற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது. மேலும் மனச்சோர்வு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள் - சிலர் எதுவுமே சாப்பிடமாட்டார்கள், ஒரு சிலர் மிக அதிகமாக உட்கொள்வார்கள். ஆனால் மனச்சோர்வு பாதிக்கப்பட்டவர்கள் போதுமான ஊட்டச்சத்து பெறுவது அவசியமாகிறது. அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள் அதாவது ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். உங்களுக்கு பசியுணர்வு இல்லையென்றாலும் அவ்வப்போது ஒரு துண்டு பழம் உட்கொள்வது நல்லது.

அறிவைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்

அறிவைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்

அறிவை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் ஒருவரின் ஞானத்தை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் மனதை பாதிக்கும் பிரச்சனையில் இருந்து மாறி வேறு விஷயத்தை யோசிக்கவும் உதவுகிறது. சிலர் புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்வார்கள், சிலர் ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள். பிளாக் எழுதுவது ஒரு சிறந்த பழக்கமாகும், பல்வேறு பிரச்சனைகள் குறித்த உங்கள் உள்ளார்ந்த உணர்வை எழுதுவதன் மூலம் வெளிப்படுத்த முடியும். உங்கள் பிரச்சனைகள் மற்றும் மனஅழுத்தம் குறித்து மற்றவர்களிடம் பேசி அவர்களை சார்ந்து இருப்பதை விட நீங்களாகவே அதனை மனதில் இருந்து வெளியேற்ற இந்த பழக்கம் உதவுகிறது.

நிதர்சனமான குறிக்கோளை உருவாக்குங்கள்

நிதர்சனமான குறிக்கோளை உருவாக்குங்கள்

கட்டுப்பாட்டுடன் கூடிய எளிதில் நிர்வகிக்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய எந்த ஒரு குறிக்கோளையும் ஒருவரால் நிச்சயம் அடைய முடியும். குறிக்கோளை நோக்கிய எல்லா முயற்சிகளும் வெற்றியை கொடுப்பதில்லை என்றாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். ‘நான் எதற்கும் தகுதியானவன் இல்லை' என்ற வாசகத்திற்கு மாற்றாக ‘இதில் இருந்து என்னால் என்ன கற்றுக் கொள்ள முடியும்' என்ற உணர்வு உங்களுக்குள் எழ வேண்டும். விவரிக்கப்பட்ட உண்மையான குறிக்கோள்கள் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும், உங்கள் கற்பனையைத் தூண்டும். இதனால் உங்கள் மனநல ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion