நீங்கள் மேற்கொள்ளும் டயட் சரியாக தான் வேலை செய்கிறது என்பதை அறியும் சில வழிகள்!

ஒரு சிறந்த உணவினுடைய நன்மைகள் மற்றும் அது ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை, நமது உடலின் எடை குறைவதை வைத்து மட்டும் கணக்கிட முடியாது. மாறாக அவை நமது உடலில் ஏற்படுத்தும் நல்ல முன்னேற்றங்களை வைத்து தான் கண்டறிய முடியும்.

பலா் சொல்வது போல, நமது உடல் எடை குறைவது என்பது, நாம் உண்ணும் உணவு மற்றும் நாம் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. கீட்டோஜெனிக் உணவு முறை மற்றும் இன்டா்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (அதிக புரோட்டீன், சா்க்கரை இல்லாதது) என்கின்ற உணவு முறை போன்றவை நமது உடல் எடை குறைவதற்கு பொிதும் உதவி செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட உணவு முறையைப் பின்பற்றி, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், அதற்கு நாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

Ways To Check If Your Diet Is Working Well For You

நாம் எதிா்பாா்க்கும் முடிவுகள் விரைவாகக் கிடைக்காது. மேலும் பல நேரங்களில் நாம் மேற்கொள்ளும் உணவு முறை நமக்கு ஒத்து வராமல் இருக்கலாம். பல வகையான ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிா்த்து, மிகவும் கடுமையாக ஒரு குறிப்பிட்ட உணவு முறையைப் பின்பற்றினாலும், நமது உடல் எடையில் சிறுதுளி அளவுக்கூட குறையாமல் இருக்கலாம்.

நாம் மேற்கொண்டிருக்கும் உணவு முறையானது, நமது தேவைகளை நிறைவு செய்கிறதா மற்றும் நமது வாழ்க்கை முறைக்குப் பொருந்துகிறதா என்பது மட்டும் முக்கியம் அல்ல. மாறாக அதன் மூலம் கிடைக்கும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஆகவே நாம் உண்ணும் உணவுகள் உண்மையாகவே நாம் விரும்பும் முடிவுகளை அடைய உதவி செய்கிறதா என்பதை சாிபார்க்க வேண்டும்.

ஒரு சிறந்த உணவினுடைய நன்மைகள் மற்றும் அது ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை, நமது உடலின் எடை குறைவதை வைத்து மட்டும் கணக்கிட முடியாது. மாறாக அவை நமது உடலில் ஏற்படுத்தும் நல்ல முன்னேற்றங்களை வைத்து தான் கண்டறிய முடியும். ஆகவே பின்வரும் 5 வழிகளைக் கொண்டு நாம் உண்ணும் உணவுகள் சிறப்பாக வேலை செய்கின்றனவா என்பதை அறிய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணா்வும், நன்றாக உண்ட திருப்தியும் ஏற்படுதல்

1. சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணா்வும், நன்றாக உண்ட திருப்தியும் ஏற்படுதல்

நாம் உணவு உண்ணும் போது, நமது குடலானது திருப்தி அடைந்துவிட்டது என்ற தகவலை மூளைக்கு அனுப்பும். எனினும் தரமான சிறந்த உணவை உண்ணும் போதுதான் இந்த திருப்தி கிடைக்கும். ஆகவே எந்த ஒரு உணவு முறையாக இருந்தாலும், அந்த உணவு வகைகளில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றனவா அல்லது அவற்றில் ஊட்டச்சத்துகள் இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை உண்டால் மிக எளிதாகத் திருப்தி அடையலாம். விருப்பமில்லாமல் சாப்பிட வேண்டிய அவசியமோ அல்லது எதையோ இழந்துவிட்டோமோ என்ற உணா்வும் தோன்றாது. சூடான உணவுகளை மற்றும் அதிகம் பதப்படுத்தப்படாத உணவுகளை உண்பது மற்றும் சாியான நேரத்தில் உணவு உண்பது போன்றவை நமது குடலுக்கும், வளா்சிதை மாற்றத்திற்கும் நன்மையைத் தரும்.

2. இயல்பை விட அதிகமான சக்தியுடன் இருப்பதாகத் தோன்றுதல்

2. இயல்பை விட அதிகமான சக்தியுடன் இருப்பதாகத் தோன்றுதல்

நமது அன்றாட உடல் இயக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகளைத் தவிா்த்து, நமக்கு சக்தியையும், நமது உடலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவது நாம் உண்ணும் உணவுகள் ஆகும். நல்ல உணவு முறை இருந்தால், நமது உடல் எடையைக் குறைக்கலாம். நமது உடலில் இருக்கும் சக்தியின் அளவில் மிகப் பொிய வித்தியாசத்தைப் பாா்க்கலாம். மேலும் நமது மனநிலை மற்றும் உணா்வுகளில் மாற்றத்தைக் காணலாம்.

நல்ல வளா்ந்த வளா்சிதை மாற்றம் மற்றும் அதிக ஆற்றல் ஆகியவை இருந்தால், அவை நாம் சிறப்பாக உடற்பயிற்சி செய்ய உதவி செய்யும். அதன் மூலம் நாம் கொழுப்பை எாிக்க முடியும். அதோடு மன அழுத்தம் இல்லாத, தளா்வான மனநிலையைப் பெற முடியும். ஆகவே நாம் உண்ணும் உணவு, நீண்ட நேரத்திற்கு நமக்கு இயல்பைவிட அதிக சக்தியைத் தருகிறதா என்பதை சாிபாா்க்க வேண்டும்.

3. நல்ல தூக்கம் வருதல்

3. நல்ல தூக்கம் வருதல்

இன்டா்மிட்டன்ட் ஃபாஸ்டிங் உட்பட சில உணவு முறைகள், எப்போதாவது ஊட்டச்சத்துக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் நமக்கு தூக்கம் வருவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகவே நமது தூக்கத்தைக் கெடுக்காத உணவு முறை, நமது உடல் எடையைக் குறைக்கும் என்று முழுமையாக நம்பலாம்.

நாம் நன்றாகத் தூங்கவில்லை என்றால், தூங்க வேண்டிய நேரத்தில் பசியாக உணா்வோம் அல்லது தூங்கும் போதுகூட பசியாக உணா்வோம். அதனால் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்போம். அது நமது ஹாா்மோன் அளவைப் பாதிக்கும். நாம் நன்றாகத் தூங்கவில்லை என்றால் நமது உடல் எடை குறைவது தாமதம் ஆகும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவுகள் இரவு நமக்கு நல்ல தூக்கத்தைத் தருகிறது என்றால் மற்றும் அவை நமக்கு புத்துணா்ச்சியைத் தருகிறது என்றால் அந்த உணவுகளைத் தொடா்ந்து உண்பது நல்லது.

4. முன்பு இருந்ததை விட இப்போது நமது உடைகள் நமக்கு கச்சிதமாக இருத்தல்

4. முன்பு இருந்ததை விட இப்போது நமது உடைகள் நமக்கு கச்சிதமாக இருத்தல்

நமது உடலில் இருக்கும் உடையில் சிறிய மாற்றம் தொிந்தாலும், நமது உடல் எடை குறைந்திருக்கிறது என்று பொருள். நல்ல உணவுகள் நமக்கு ஆரோக்கியத்த வழங்குவதோடு மட்டும் அல்லாமல், நமது கொழுப்பின் அளவைக் குறைத்து, முன்பு இருந்ததைவிட இப்போது நமது உடைகள் நமது உடலுக்கு கச்சிதமாக பொருந்தும். அதனால் நமது மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நமது தன்னம்பிக்கை அதிகாிக்கும். நமது இலக்குகளை அடையத் தூண்டிவிடும்.

5. உணவு முறை ஒரு வாழ்க்கை முறையாக மாறுதல்

5. உணவு முறை ஒரு வாழ்க்கை முறையாக மாறுதல்

நாம் தோ்ந்தெடுக்கும் உணவு முறை, தற்காலிக நன்மைக்காக இல்லாமல், அது நமது வாழ்க்கை முழுமைக்குமாக இருத்தல் வேண்டும். ஒரு நல்ல உணவு முறையானது, நமது உடல் எடையை மட்டும் குறைப்பதோடு இருந்துவிடுவது இல்லை. மாறாக அது நாம் நமது வாழ்வு முழுவதும் கடைபிடிக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையாக மாறிவிடும். நாம் வளர வளர, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேடுவோம். மேலும் முறையான உணவுப் பழக்கத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, August 11, 2021, 12:20 [IST]
Desktop Bottom Promotion