For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சு கொரோனாவராமல் தடுக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க...!

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

|

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி கடந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் ஒன்றாகும். ஏனென்றால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகும்.

Ways To Boost Your Immunity Without Any Supplements

நம்முடைய உணவுமுறைகளும், மருந்துகளும் நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்று நாம் அறிவோம். ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேறுசில எளிய வழிகளும் உள்ளன. உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளுடன் இந்த எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களும் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

போதுமான தூக்கத்தைப் பெறுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடிப்படை படிகளில் ஒன்றாகும். ஆம், தூக்கம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு நல்ல இரவு தூக்கம் டி-செல்கள் சிறப்பாக செயல்பட உதவும். உடலில் சேதமடைந்த செல்களை அழிப்பதற்கும் நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவதற்கும் டி செல்கள் காரணமாகின்றன. நீங்கள் தூங்கும் போது, அட்ரினலின் மற்றும் புரோஸ்டாக்லாண்டின் ஹார்மோன்கள் உடலில் குறைவாக இருக்கும். இந்த ஹார்மோன்கள் டி-செல்களை தங்கள் வேலையைச் செய்யாமல் தடுக்கின்றன. போதுமான தூக்கம் கிடைக்காதவர்களைக் காட்டிலும் நல்ல தூக்கத்தைக் கொண்டவர்கள் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஆல்கஹால் அருந்தக்கூடாது

ஆல்கஹால் அருந்தக்கூடாது

இந்த கடினமான காலங்களில், ஒரு கிளாஸ் ஆல்கஹால் உங்களுக்கு ஆறுதலை வழங்குவதாக நீங்கள் உணரலாம், அது உண்மையல்ல. ஒரு கிளாஸ் ஆல்கஹால் உண்மையில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அழிவை ஏற்படுத்தும். இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கிறது. எனவே, ஒருவர் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த குடிப்பழக்கத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

MOST READ: தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

புகைப்பிடிக்க கூடாது

புகைப்பிடிக்க கூடாது

கோவிட் வைரஸ் ஒரு சுவாச நோயாகும், மேலும் புகைபிடிப்பது நமது நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது. எனவே இரண்டிற்கும் நேரடித் தொடர்புள்ளது. கைபிடித்தல் உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது, இதனால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை இழப்பதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் தவறுகிறது. புகைபிடித்தல் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சமநிலையை சீர்குலைத்து, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கிறது.

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்

மன அழுத்தம் நம் நோயெதிர்ப்பு அமைப்பில் அழிவை ஏற்படுத்தும். நீங்கள் சரியாக சாப்பிட்டாலும், போதுமான தூக்கம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்தாமல் இருந்தாலும், மன அழுத்தம் இன்னும் உங்கள் வாழ்க்கையில் ஒரு பிரச்சினையாக மாறலாம், இது உங்கள் உடலின் தொற்றுநோய்களை வெல்லும் திறனைக் குறைக்கிறது. நாம் மனஅழுத்தமாக இருக்கும்போது, நம் உடல் கார்டிசோல் ஹார்மோனை அதன் இயற்கையான சண்டையின் ஒரு பகுதியாக வெளியிடுகிறது. உடலில் கார்டிசோலின் அதிக அளவு ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கும். எனவே நீங்கள் தொடர்ந்து அழுத்தமாக இருப்பதாக உணர்ந்தால், அதைச் சமாளிக்க சில மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை நீங்கள் முயற்சிக்க வேண்டும்.

MOST READ: உலகையே கொலைகளால் நடுங்கவைத்த ஆபத்தான கொலைகார ஜோடிகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...!

உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்

உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்

ஆய்வுகளின்படி, உடற்பயிற்சி செய்யாதவர்கள் உடற்பயிற்சி செய்யாதவர்களைக் காட்டிலும் அதிகமான டி-செல்களை உருவாக்க முனைகிறார்கள். விளையாட்டு மற்றும் சுகாதார அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, ஒவ்வொரு முறையும் நீங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு மேம்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Boost Your Immunity Without Any Supplements

Check out the best ways to boost your immunity without any supplements.
Story first published: Friday, May 21, 2021, 12:17 [IST]
Desktop Bottom Promotion