For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு அடிக்கடி ரொம்ப சோர்வா இருக்கா? அப்ப அது இந்த பயங்கர நோயோட அறிகுறின்னு தெரியுமா?

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்று கல்லீரல். இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி சுத்திகரிப்புக்கு காரணமாகும். அளவுக்கு அதிகமாக மது அருந்தால், அது கல்லீரலில் கொழுப்புக்கள் படிவதற்கு வழிவக்கும்.

|

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்று கல்லீரல். இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி சுத்திகரிப்புக்கு காரணமாகும். ஆனால் இத்தகைய கல்லீரல் செயலிழந்தால், அது உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். மது அருந்துவதால் கல்லீரல் சேதமடையும்.

MOST READ: தினமும் ஒரு துண்டு பனை வெல்லத்தை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

அதிலும் அளவுக்கு அதிகமாக மது அருந்தால், அது கல்லீரலில் கொழுப்புக்கள் படிவதற்கு வழிவக்கும். இந்த நிலையே கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், கல்லீரலில் கொழுப்புக்கள் படிவது என்பது மது குறைவாகவோ அல்லது அருந்தாமல் இருந்தாலும் கூட ஏற்படலாம். இந்த நிலையே ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது.

MOST READ: நெருப்பில் வைத்தது போல கால் எரியுதா? இதோ அதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள்

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள்

வழக்கமாக ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. ஒருவேளை அறிகுறிகள் தென்பட்டால், அது பின்வரும் அறிகுறிகளாவே இருக்கும். அவையாவன:

* அடிவயிற்று வலி

* மஞ்சள் காமாலை

* களைப்பு/சோர்வு

* உட்புற இரத்தக்கசிவு

* ஆஸ்கைட்ஸ்

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் பொதுவான காரணங்கள்

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் பொதுவான காரணங்கள்

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயுடன் தொடர்புடைய பொதுவான சில ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு:

* உயர் இரத்த அழுத்தம்

* சர்க்கரை நோய்

* கர்ப்பம்

* கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்பாடு

* ஆரோக்கியமற்ற அளவிலான உடல் கொழுப்பு

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான சிகிச்சை

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான சிகிச்சை

சரியான மருத்துவ நிபுணரை அணுகுவது மற்றும் சரியான சிகிச்சையை நோக்கி செயல்படுவது ஆகியவை இந்த நோய்க்கான சிகிச்சையின் பொதுவான முறைகள் ஆகும். ஆயினும், பெரும்பாலும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லாததால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.

ஆரோக்கியமான கல்லீரலுக்கான சில டிப்ஸ்

ஆரோக்கியமான கல்லீரலுக்கான சில டிப்ஸ்

நீங்கள் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரோக்கியமான கல்லீரலுக்கு பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

* உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பைக் குறைக்கவும். நீங்கள் உடல் பருமனானவரானால், உடல் எடையை அவ்வப்போது கண்காணிக்கவும். இது கல்லீரலையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

* காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவை உண்ணவும்.

* ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்க்கவும்.

* இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்கவும்.

* தினமும் உடற்பயிற்சியை குறைந்தது ஒரு மணிநேரம் தவறாமல் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முடிவு

முடிவு

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது சிரோசிஸ் எனப்படும் கல்லீரலின் திசுக்களின் வடு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும் முன்னேறினால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். கல்லீரல் பெரும்பாலும் நீரால் ஆனது. ஆகவே உங்கள் கல்லீரலையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான அளவு நீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs Of Non-Alcoholic Fatty Liver Disease

People who do not consume an unhealthy amount of alcohol can also suffer from liver disorders. Non-alcoholic fatty liver disease or NAFLD is one such disorder.
Desktop Bottom Promotion