Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கர்ப்பிணிப் பெண்கள் கோவிட்-19 தடுப்பூசி போடலாமா? ஒன்றிய அரசு என்ன சொல்கிறது தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில், இனி கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பலராமன் பார்கவா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தன் கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது. உலக நாடுகள் பல கொரோனாவால் பெரும் இழப்பை சந்தித்து வந்துள்ளன. இந்தியாவும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகிறது. தற்போதுள்ள ஒரே நம்பிக்கையாக கொரோனா தடுப்பூசி மட்டுமே மக்களுக்கும் நிபுணர்களும் ஆறுதலையும் நம்பிக்கையும் தருகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை முதல் அலையை விட பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரண்டாவது அலையில் இறப்பு விகிதமும் பாதிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. 18 வயது முதல் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், கர்ப்பிணிகளை கொரோனா தாக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆதலால், கோவிட் -19 க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து இக்கட்டுரையில், தெரிந்துகொள்ளுங்கள்.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே கர்ப்பிணி பெண்களிடம் பரிசோதனை செய்யப்படவில்லை என்பதால், இந்திய அரசு இவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை பரிந்துரைக்காமல் இருந்தது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில், இனி கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பலராமன் பார்கவா தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனால் கர்ப்பிணிப் பெண்களில் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ளது
ஜூன் 25 அன்று மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா தெரிவித்தார். இந்த தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கண்காணிக்க வேண்டும்
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மருத்துவமனையில் 30 நிமிடங்கள் கட்டாயமாக கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆபத்து, கோவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய நன்மைகள் மற்றும் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய அரிய சிக்கல்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் தடுப்பூசி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அரசு கூறுவது
கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டாலும், கரு மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியின் நீண்டகால பாதகமான எதிர்விளைவுகள் மற்றும் பாதுகாப்பு இன்னும் நிறுவப்படவில்லை என்பதை கர்ப்பிணிப் பெண்களுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

அமெரிக்காவிலும் பரிந்துரைக்கப்படுகிறது
பல மருத்துவர்கள் டி.என்.எம் நிறுவனத்திடம், கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளில் கோவிட்-19 யால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். பல மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் எவ்வாறு கடுமையான கோவிட்-19 நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினர். அமெரிக்காவிலும், கர்ப்பிணி பெண்கள் கோவிட்-19 தடுப்பூசி எடுக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

2 முதல் 18 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி
இதற்கிடையில், தொடர்புடைய தரவு கிடைக்கும் வரை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த சந்தேகம் தொடர்கிறது. தற்போது, கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பிடோடெக், இரண்டு முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் பரிசோதித்து முடிவுகள் தெரியவரும் எனவும் அறிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications