Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
பொங்கல் சாப்பிட அழுபவரா நீங்க? இப்படி பண்ணி சாப்பிடுங்க... சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்...!
பொங்கல் என்பது அரிசி மற்றும் பச்சைப்பருப்பின் கலவையாகும். இந்த உணவு கார்போ - புரதம் சமநிலையை உறுதி செய்கிறது. பொங்கல் எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு உணவாகும். இதில் கொழுப்பு மற்றும் கலோரி குறைவாக உள்ளது.
வீட்டில் நெய் குறைவாக சேர்த்து தயாரிக்கப்படும் பொங்கல் ஒரு சிறந்த காலை உணவாகும். குறிப்பாக ஆரோக்கியமான உணவும் கூட. பொங்கலை ஆரோக்கியமான ஒரு விருந்தாக மாற்ற சில குறிப்புகள் இதோ உங்களுக்காக.

வெள்ளை அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி பயன்படுத்தலாம்
பொதுவாக வெண்பொங்கல் தயாரிக்க வெள்ளை அரிசி மற்றும் பச்சைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பழுப்பு அரிசி போன்ற மாற்று மூலப்பொருட்கள் கொண்டு ஆரோக்கியமான உணவு தயாரிப்பது தற்போது பிரபலமாகி வருகிறது.
பழுப்பு அரிசி மற்றும் பச்சைப் பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் பொங்கல் சுவை மற்றும் ஆரோக்கியம் கொண்ட ஒரு சிறப்பு உணவாகும். மேலும் தீட்டிய வெள்ளை அரிசியைக் காட்டிலும் சோடியம் அளவு குறைவாகக் கொண்டிருக்கும் பழுப்பு அரிசி.
எனவே உப்பின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மையைத் தரும்.
ஆரோக்கிய நன்மைகளுக்கு சிறுதானியம் பயன்படுத்தலாம்
பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தில் சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது . குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட தினை அரிசியில் க்ளைகமிக் குறியீடும் குறைவாகவே உள்ளது.
க்ளைகமிக் குறியீடு என்பது உணவுக்குப் பிறகு உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை அளவிட பயன்படும் ஒரு காரணி. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, ஆனால் ஆரோக்கியமான விளைபொருட்களை கூட அதிகமாக சாப்பிடக் கூடாது, எனவே சாப்பிடக் கூடிய அளவை கவனத்தில் கொள்வதால் மற்ற விளைவுகள் தடுக்கப்படலாம்.
கலப்படமற்ற வெல்லம் பயன்படுத்துங்கள்
இனிப்புபொங்கல் தயாரிப்பதில் இது ஒரு சிறந்த குறிப்பாகும். சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு கல்கண்டு அல்லது வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கும்போது சுத்தமான வெல்லம் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வெல்லத்தில் ஒரு துண்டு எடுத்து சுவைத்து பாருங்கள்; அது இயற்கையானது என்றால் அது உப்பு அல்லது கசப்பாக இருக்கக்கூடாது. வெல்லத்தின் சுத்தத்தில் அதன் நிறம் கூட பங்குவகிக்கிறது. வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இது நல்ல தரம் வாய்ந்ததாக இருந்தால், அது ஒரு சிறந்த செரிமானப் பொருளாகவும், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்த பொருளாகவும் இருக்கலாம்.
கீரை பொங்கல்
இந்த பருவத்தில் கீரைகள் அதிகமாக அறுவடை செய்யப்படுகின்றன. மற்றும் சிறு கீரை , தண்டுக்கீரை ஆகியவற்றைச் சேர்ப்பது சுவையான பொங்கலை அதிக சத்தானதாகவும் நிரப்பக்கூடியதாகவும் மாற்றும்.
இந்த கீரைகள், பல தாவர ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடெண்ட், மினரல் போன்றவற்றைக் கொண்டுள்ளன. மேலும் 100கிராம் அளவிற்கு 23 கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

