For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாள்பட்ட சைனஸ் பிரச்சனை மற்றும் மூக்கடைப்பைப் போக்கும் அற்புதமான சில எளிய வழிகள்!

சைனஸ் பாதிப்பு யாரையும் தாக்கலாம். சைனஸ் வலி, ஃப்ளு, ஒவ்வாமை, மூக்கடைப்பு, அடர்த்தியான சளி வெளியேற்றம் என்று பல்வேறு அறிகுறிகளை பல லட்சக்கணக்கான மக்கள் அனுதினம் அனுபவித்து வருகின்றனர்.

|

சைனஸ் பாதிப்பு யாரையும் தாக்கலாம். சைனஸ் வலி, ஃப்ளு, ஒவ்வாமை, மூக்கடைப்பு, அடர்த்தியான சளி வெளியேற்றம் என்று பல்வேறு அறிகுறிகளை பல லட்சக்கணக்கான மக்கள் அனுதினம் அனுபவித்து வருகின்றனர். நெற்றி பகுதியில் ஒருவித அழுத்தம், தலைவலி போன்றவையும் சில அறிகுறிகளாகும்.

Tips To Avoid Chronic Sinusitis And Congestion During Seasonal Change

சைனஸ் தொடர்புடைய வலிகள் பொதுவாக மிதமான தலைவலி, முகத்தில் வலி, பல் வலி மற்றும் காது வலி போன்றவையாகும். இந்த வலி ஏற்படுதற்கான காரணம் என்னவென்றால் சைனஸ் கேவிட்டியில் உண்டாகும் அழற்சி மற்றும் அடைப்பு ஆகும். இதுவே சைனஸ் வலியை தரக்கூடிய முக்கிய நிலையாகும்.

சைனசிட்டிஸ் என்பது ஒருவித நோய்த்தொற்றாகும். இது சைனஸ் என்னும் எலும்பின் உட்பிழை மற்றும் நாசிகளில் உண்டாகும் அழற்சியைக் குறிக்கிறது. மூக்கைச் சுற்றியுள்ள துவாரங்களில் காற்று அடைக்கப்படும் நிலை சைனஸ் ஆகும். இவை கண்கள், கன்னம் மற்றும் நெற்றி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைனஸ் எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?

சைனஸ் எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?

மூக்கின் வழியாக சுவாசிக்கும் போது பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளே நுழைந்து பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன. இந்த பாக்டீரியாக்கள் மூக்கில் சேமிக்கப்படுகின்றன. அவை மீண்டும் சளி வழியாக வெளியேறவில்லை என்றால் , அது தலைவலி மற்றும் கன்னங்களில் வலி போன்றவற்றை உண்டாக்கும். எலும்பு உட்பிழை அடைப்பின் காரணமாக சைனஸ் தொற்று ஏற்படுகிறது . இதன் காரணமாக சளி வெளியேற முடியாமல், ஈரப்பதம் காரணமாக கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சை போன்றவை வேகமாக வளருகிறது.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

சைனஸ் தொற்று பாதிப்பைப் பின்வரும் அறிகுறிகள் மூலம் கண்டுகொள்ள முடியும். அவையாவன:

* மூக்கு ஒழுகுதல்

* காதுவலி

* கண்கள் , கன்னம் அல்லது பற்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதியில் வலி மற்றும் அழுத்தம்

* மயக்கம்

* தலைவலி

* தொண்டை வறட்சி

* காய்ச்சல்

* சோர்வு

* இருமல்

* காது கேளாமை

* நுகரும் தன்மை இழப்பு

* காதுகளில் ரீங்காரம் கேட்பது

அழற்சி காரணமாக வீக்கம் உண்டாவதோடு, சளி அதிகரிப்பு காரணமாக மூக்கடைப்பு ஏற்படும். மேலும் உடலில் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும், இதனால் சளியின் அடர்த்தி அதிகரிக்கும்.

எவ்வாறு குணப்படுத்துவது?

எவ்வாறு குணப்படுத்துவது?

அதிக தண்ணீர் பருகுங்கள்

உங்கள் உடல் அதிக நீர்ச்சத்தோடு இருப்பதால் சளி நீர்த்து போகும். மேலும் மூக்கடைப்பும் சரியாகும். அதிலும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் தேன் சேர்த்து பருகலாம். க்ரீன் டீ போன்ற மூலிகை டீ பருகுவதால் தொண்டை மற்றும் மூக்கு தெளிவாகிறது.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பது

நீராவி பிடிப்பதால், இந்த பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும். டீ ட்ரீ ஆயில், லாவெண்டர் எண்ணெய், தைல எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்யை சூடான தண்ணீரில் சேர்த்து ஆவியை நுகரலாம். இந்த எண்ணெய்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இவை தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவும்.

நாசிக்கான ஸ்ப்ரே

நாசிக்கான ஸ்ப்ரே

OTC நாசி ஸ்ப்ரே, நாசிகளில் உண்டான வீக்கத்தைக் குறைக்கவும், மூக்கடைப்பைப் போக்கவும் சிறந்த தீர்வை தருகிறது. இவை பக்க விளைவை உண்டாக்கும் என்பதால் இதனை எப்போது பயன்படுத்த வேண்டும், எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும். ட்ரையம்சினோலோன் (நாசாகார்ட்) போன்ற கார்டிகோஸ்டீராய்டு நாசி ஸ்ப்ரேக்கள் வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அவை மூக்கில் இரத்தப்போக்கு அல்லது பிற பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இவற்றைத் தவிர்க்க மருத்துவர் அறிவுறுத்தியபடி மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும்.

நாசியில் நீர்விடுவது

நாசியில் நீர்விடுவது

இந்த முறையைக் கையாளுவதால் தலைவலி மற்றும் வீக்கம் குணமாகிறது. ஒரு நீள மூக்குடைய கெண்டியை எடுத்துக் கொள்ளவும். குழாய் நீரைப் பருகுவதால் வயிற்றில் உள்ள கிருமிகள் கொல்லப்படும் ஆனால் மூக்கில் உள்ள கிருமிகள் அழிக்கப்படாது, எனவே சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம்.

* இரண்டு கப் சுத்தீகரிக்கப்பட்ட நீரை எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

* இந்த நீரில் அயோடின் சேர்க்கப்படாத உப்பு ½ ஸ்பூன் மற்றும் பேக்கிங் சோடா ½ ஸ்பூன் சேர்க்கவும்.

* நன்றாகக் கலந்து கொள்ளவும்.

* ஒரு சிறிய ஊசியைப் பயன்படுத்தி நாசிகளில் இந்த நீரை விடவும்

* ஒரு நாளில் இரண்டு முறை இதனை பின்பற்றவும்.

வெந்நீர் ஒத்தடம்

வெந்நீர் ஒத்தடம்

சைனஸ் பாதிப்பால் உண்டான வீக்கம், வலி மற்றும் அழுத்தத்தைக் குறைக்க முகத்திற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் தருவதால் வலி குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Avoid Chronic Sinusitis And Congestion During Seasonal Change

Here are some tips to avoid chronic sinusitis and congestion during seasonal change. Read on to know more...
Desktop Bottom Promotion