Latest Updates
-
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது..
வயிறு சரியில்லையா? வாய்வு தொல்லையா? நொடியில் விடுபட இப்படி செய்யுங்க...
வயிற்று பிரச்சனைகளை சந்தித்தால், நாம் உடனே கை வைத்தியங்களைத் தான் மேற்கொள்ள நினைப்போம். அப்படி வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள சில பொருட்கள் தீர்வளிக்கும்.
ஒவ்வொருவரும் நிச்சயம் தங்களது வாழ்நாளில் வயிற்று பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டிருப்போம். அதிலும் வயிற்று வலி ஒருவருக்கு ஏற்பட அசுத்தமான உணவுகள், நாள்பட்ட நோய்கள் என பல காரணங்கள் இருக்கலாம். மேலும் காரணங்களைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். அதில் சில வயிற்று பிரச்சனைகளாவன வயிற்று வலி, தலைவலி மற்றும் வாந்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக வயிற்று பிரச்சனைகளை சந்தித்தால், நாம் உடனே கை வைத்தியங்களைத் தான் மேற்கொள்ள நினைப்போம். அப்படி வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள சில பொருட்கள் தீர்வளிக்கும். மேலும் சமையலறைப் பொருட்களின் மூலம் தீர்வு கண்டால், எவ்விதே பக்கவிளைவுகளும் ஏற்படாது, விரைவில் குணமாகும்.
இருப்பினும் கடைகளில் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும் பல மருந்துகள் விற்கப்படுகின்றன. அந்த மருந்துகளை நாம் எந்நேரமும் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த மருந்துகளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. இந்த கட்டுரையில் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு பொருள் குறித்தும், அப்பொருளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

இஞ்சி
வயிற்றுப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் ஓர் பொருள் தான் இஞ்சி. இஞ்சியில் இருக்கும் உட்பொருட்கள் அஜீரணம் முதல் வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை வரை பலவற்றிற்கு தீர்வளிக்கும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இஞ்சியைத் தான் பயன்படுத்தினார்கள். மேலும் ஆய்வுகளும் இஞ்சி, வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணப் பொருளாக செயல்படுவதாக கூறுகின்றன. ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.
கீழே வயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சியை எப்படியெல்லாம் எடுக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றுங்கள்.

இஞ்சி துண்டு
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்றில் உள்ள அமிலங்கள் நடுநிலைப்படுத்தும் மற்றும் செரிமான அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் செரிமான செயல்பாட்டிற்கு உதவும் மற்றும் வயிற்றில் உள்ள அதிகப்படியான வாய்வை வெளியேற்றும். அதற்கு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, அவ்வப்போது ஒரு கிராம் அளவில் உட்கொண்டு வாருங்கள்.

இஞ்சி ஜூஸ்
வயிற்று பிரச்சனைகளை சரிசெய்ய இஞ்சியை ஜூஸ் வடிவிலும் எடுக்கலாம். அதற்கு இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, சுவைக்கு சர்க்கரை சேர்த்து, தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, வயிற்று உப்புசமும் நீங்கும்.

இஞ்சி டீ
உங்களுக்கு டீ பிடிக்குமானால், இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். அதற்கு 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சியை, 1 டம்ளர் நீரில் போட்டு, 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த டீயை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேறு சில மூலிகை டீ-க்களின் உதவியுடனும் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யலாம். அதில் சில இதோ!

புதினா டீ
உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பதன் மூலமும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு புதினா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரில் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். குறிப்பாக வயிற்று வலியால் அவஸ்தைப்படுபவர்கள், சீமைச்சாமந்தி டீயை ஒரு கப் குடித்தால், வயிற்றுத் தசைகள் ரிலாக்ஸாகி, வலி மற்றும் பிடிப்புக்களைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications