Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆணுறுப்பு சிறியதாக இருக்கும் ஆண்கள் ஆணுறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்ன தெரியுமா?
பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆண்களின் ஆண்குறி அளவு குறித்து திருப்தி அடைந்தாலும், இந்த கிரகத்தில் கிட்டத்தட்ட பாதி ஆண்கள் தங்களுஆணுறுப்பின் அளவு குறித்து திருப்தி அடைவதில்லை.
பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆண்களின் ஆண்குறி அளவு குறித்து திருப்தி அடைந்தாலும், இந்த கிரகத்தில் கிட்டத்தட்ட பாதி ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் அளவு குறித்து திருப்தி அடைவதில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் பார்க்கும் ஆபாசப்படங்கள், இது அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் தவறாக வடிமைக்கிறது.

சராசரி ஆண்குறியின் அளவு விறைத்திருக்கும் நிலையில் 4.7 முதல் 6.3 அங்குலங்களாகும், இது நீங்கள் நினைப்பதை விட சிறியது. சிறிய ஆணுறுப்பு என்பது சாதாரண நிலையில் இருக்கும்போது 2.8 அங்குலத்திற்கும், விறைப்பு நிலையில் 4.7 க்கும் குறைவாக இருக்கும். இருப்பினும், உடலுறவில் ஈடுபட அவை தகுதி உள்ளவைதான். சிறிய ஆணுறுப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இது மிகவும் சாதாரணமான ஒன்றாகும்
சராசரி நீளத்தை விட உங்கள் ஆண்குறியின் அளவு சிறியதாக இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியது ஆணுறுப்பின் அளவைப் பற்றி அல்ல, அது சரியாக செயல்படுகிறதா என்பதை பற்றித்தான். சிறிய ஆணுறுப்பும் விறைப்புத்தன்மை அடையலாம், விந்தணுக்களை வெளியேற்றலாம், சுயஇன்பமும் காணலாம். அவர்களின் ஒரே பிரச்சினை அவர்களுடைய மனநிலைதான் வேறொன்றும் இல்லை.

ஆணுறுப்பு விரிவாக்க சிகிச்சை தேவையில்லாத ஒன்று
ஆண்களின் இந்த மிகப்பெரிய கவலையை நீக்குவதாக உறுதியளிக்கும் அறுவை சிகிச்சை முறைகள் இருந்தாலும், குறைபாடுகள் இல்லாத ஒரு நடைமுறையை யாரும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த அறுவைசிகிச்சைகள் விலை உயர்ந்தது, ஆபத்தானது, வேதனையானது மற்றும் ஒருவரின் பாலியல் உணர்வைத் தடுக்கலாம். இருப்பினும், ஒருவர் அதைத் தேர்வுசெய்தால், ஆண்குறியின் அளவின் அதிகபட்ச அதிகரிப்பு 2 சென்டிமீட்டர் ஆகும். இது இந்த அளவு வேதனைகளுக்கு மதிப்புக்குரியது அல்ல.

சிறிய ஆண்குறி உள்ளவர்கள் வேறு விஷயங்களில் சிறப்பாக இருப்பார்கள்
கலவியில் பெண்களை திருப்திப்படுத்துவதே சிறிய ஆணுறுப்பை கொண்ட ஆண்களின் முக்கிய பிரச்சினையாக இருக்கும். இவர்களால் அது முடியுமென்றாலும், இவர்கள் வேறு வழிகளிலும் பெண்களை திருப்திப்படுத்த அனைத்தையும் கற்றுக்கொள்வார்கள். அதில் அவர்கள் சிறந்தும் விளங்குவார்கள்.

ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே மைக்ரோபெனீஸ் உள்ளது
மைக்ரோபெனிஸ் என்று அழைக்கப்படும் வழக்கத்தை விட மிகச்சிறிய ஆணுறுப்பு அதாவது விறைப்படைந்த நிலையிலும் 2.7 அங்குலங்கள் இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதைக் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை உலகின் மொத்த ஆண்களின் மக்கள் தொகையில் மிகக்குறைவாக உள்ளது, ஆனால் அவர்கள் இருக்கிறார்கள்.

சில பாலியல் நிலைகள் நீளமாக உணர வைக்கக்கூடும்
உளவியல் தடையை நாம் ஒதுக்கி வைத்தால், ஒரு சிறிய ஆண்குறி கொண்ட ஒரு ஆண் பெண்களுக்கு உச்சகட்டத்தை ஏற்படுத்த உதவும் பாலியல் நிலைகள் உள்ளன. உண்மையில், ஆண்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், 20 சதவீத பெண்கள் மட்டுமே ஊடுருவலின் மூலம் உச்சக்கட்டம் அடைகிறார்கள். எனவே, அளவைப் பற்றி ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? ‘எக்ஸ் ஸ்பாட் மார்க்ஸ்' அல்லது ‘டாக்கி ஸ்டைல்' போன்ற நிலைகள் ஊடுருவலை ஆழமாக்கும், இதனால் நீங்கள் வழக்கத்தை விட நீளமாக உங்கள் ஆணுறுப்பை உணர முடியும்.

சிறிய ஆணுறுப்பு இருப்பது ஆண்மைக்குறைவு அல்ல
பெண்களை கலவியில் திருப்திப்படுத்த முடியாத ஆண்கள் அவர்களை வெறுப்புடன் நடத்த தொடங்குகிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். ஆண்குறியின் அளவு ஒரு நபரின் மனித மதிப்புகளுடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும், சிறிய ஆணுறுப்பு இருப்பதால் அவர் ஆணாக இருக்க தகுதியற்றவர் என்று அர்த்தமல்ல. சிறிய ஆணுறுப்பு இருக்கும் ஆண்களின் தாழ்வு மனப்பான்மை என்பது ஆண்கள் அதிக எடைக்கு கொண்டுள்ளதை போல மோசமானது.



Click it and Unblock the Notifications
