Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
லிப்-கிஸ் கொடுக்கும் போது உங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுது-ன்னு தெரியுமா?
உதட்டில் முத்தம் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதைக் காண்போம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், உங்கள் துணைக்கு அடிக்கடி முத்தம் கொடுங்கள்.
அன்பை வெளிப்படுத்தும் விதமாக கொடுக்கப்படும் முத்தம், தம்பதியர்களிடையே சிறப்பான உணர்வை உணர வைப்பதோடு மட்டுமல்லாமல், இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பையும் வலுப்படுத்தும். அதுமட்டுமின்றி, முத்தம் கொடுப்பது நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக, உங்களுக்கு தலைவலிக்கும் போது உங்கள் துணைக்கு முத்தம் கொடுக்கத் தோன்றாது. ஆனால் தலைவலியில் இருந்து விடுபட முத்தம் பெரிதும் உதவக்கூடும்.

இப்போது உதட்டில் முத்தம் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதைக் காண்போம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், உங்கள் துணைக்கு அடிக்கடி முத்தம் கொடுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, இருவருக்கும் இடையேயுள்ள உறவும் மேம்படும்.

இரத்தக்குழாய்கள் ஆரோக்கியமாகும்
ஆய்வு ஒன்றில், அடிக்கடி முத்தமிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. முத்தம் கொடுக்கும் போது, உடல் அதிக ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த ஹார்மோன் அதிக கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கக்கூடிய மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைப் போக்க உதவுகிறது. மேலும் முத்தம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

அழற்சியின் தீவிரம் குறையும்
முத்தம் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நேர்மறையான உணர்வுகளை அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள அழற்சி குறையும். இருப்பினும், ஒருவேளை உங்கள் துணை உங்களுக்கு அழற்சியை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால், முத்தம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு அழற்சி ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முகம் இளமையாகத் தோன்றும்
முத்தம் கொடுக்கும் போது, முகத் தசைகள் அதிகமாக ஈடுபடுகின்றன. எனவே முத்தம் கொடுப்பது முகத்திற்கான சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். முத்தம் கொடுப்பதால் ஒரு நிமிடத்திற்கு 26 கலோரிகளை எரிக்கலாம். மேலும் முத்தம் கொடுக்கும் போது, முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், அது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியைத் தூண்டி, முகத்தை இளமையாக வெளிக்காட்டும்.

தலைவலி அல்லது பிடிப்புகள் சரியாகும்
உங்களுக்கு தலைவலி அல்லது மாதவிடாய் காலத்தில் பிடிப்புகள் ஏற்பட்டால், அதில் இருந்து நிவாரணம் பெற முத்தம் கொடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்கும் போது, இரத்த நாளங்கள் தளர்ந்து போகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் வலி குறையும்.

சொத்தைப் பற்களைப் பெறுவதற்கான வாய்ப்பு குறையும்
முத்தம் கொடுக்கும் போது எச்சிலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, பல் சொத்தையைத் தடுக்கும். சில வல்லுநர்கள் எச்சிலில் உள்ள கனிம அயனிகள் எனாமலில் ஏற்படும் சிறு புண்களை சரிசெய்ய உதவும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், உங்களின் வாய் ஆரோக்கியம் மற்றும் உங்கள் துணையின் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏனெனில் முத்தமிடும் போது, பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பகிரப்படுகின்றன.

உடல் எடை குறையக்கூடும்
முத்தமிடும் போது உடல் அதிக டோபமைனை உற்பத்தி செய்கிறது. உடலில் இந்த ஹார்மோன் போதுமான அளவு இல்லாமல் இருந்தால் தான், அதிக பசியுணர்வை உணர்வார்கள். இந்த சூழ்நிலையில் கலோரிகள் அதிகமான உணவுகளை சாப்பிட்டு, உடல் எடை அதிகரிக்கும். ஆனால் முத்தம் கொடுக்கும் போது, டோபமைன் உற்பத்தி செய்யப்படுவதால், பசியுணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

உடல் சோர்வை குறைவாக உணரலாம்
டோபமைன் ஒருவரது ஆற்றல் மட்டங்களைப் பாதிக்கிறது. உங்கள் டோபமைன் அளவு மிகவும் குறைவாக இருந்தால், நீங்கள் அதிக சோர்வுடனும், வழக்கத்தை விட அதிக தூக்க உணர்வையும் பெறுவீர்கள். ஆனால் முத்தம் கொடுப்பது, உடலின் விழிப்புணர்வை அதிகரித்து, அடிக்கடி சோர்வடைந்து தூங்குவதைத் தடுக்கும்.



Click it and Unblock the Notifications
