Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
ஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!
ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான சீரற்ற இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் சூடு, களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை தெரியும்.
தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரக்கும் நிலைமை தான் ஹைப்பர் தைராய்டிசம். இந்த நிலைமையில் தைராய்டு சுரப்பி மிகவும் கடினமாக வேலை செய்யும். ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்கள் பல்வேறு கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைளால் அவஸ்தைப்படுவார்கள்.

ஒருவரது உடலில் அதிகமான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரந்தால், அது உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அதிலும் ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான சீரற்ற இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் சூடு, களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை தெரியும். சிலருக்கு உடல் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இடையூறால் வேகமான எடை இழப்பு அல்லது உடல் பருமனை அனுபவிக்கக்கூடும்.
இப்போது ஒரு ஆணுக்கு ஹைப்பர் தைராய்டு இருந்தால் வெளிப்படும் சில முக்கியமான அறிகுறிகளைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து, உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.

உடல் எடையில் மாற்றங்கள்
ஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள் வேகமாக உடல் எடையை இழக்கக்கூடும். இதற்கு காரணம் இந்த நிலைமையால் வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படுவது தான். மேலும் இந்த பிரச்சனை உள்ள ஆண்கள், எவ்வளவு தான் கலோரி அதிகமான உணவுகளை உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை குறையும். சில சந்தர்பங்களில், தைராய்டு நிலையால் உடல் எடை அதிகரிக்கும்.

நடத்தையில் மாற்றங்கள்
எப்போது ஒருவரது தைராய்டு சுரப்பி அதிகமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறதோ, அவர்கள் அதிகமாக எரிச்சலடைவதோடு, மன கவலையும் கொள்வார்கள். மேலும் இப்பிரச்சனை உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக ஏற்ற இறக்க மனநிலையில் இருப்பதோடு, அடிக்கடி மன கவலையால் பாதிக்கப்படுவார்கள். நடத்தையில் மாற்றம் இருந்தால், அது தூங்குவதில் சிரமத்தை உண்டாக்கும்.

முறையற்ற இதய துடிப்பு
ஒருவரது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள் முறையற்ற இதயத் துடிப்பு அல்லது இதய படபடப்பை சந்திப்பார்கள். சில சந்தர்பங்களில், இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 100 முறை துடிக்கும். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு தவிர, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதயம் வெடிக்கப் போவது போன்றும் சிலர் உணரலாம். வயதானவர்களாக இருந்தால், இவர்களுக்கு இதய செயலிழப்பு என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.

தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு சுரப்பி அதிகப்படியான செயல்பாட்டில் இருந்தால், அது கோயிட்ரே அல்லது தைராய்டு முடிச்சுக்களை உருவாக்கலாம். சில சந்தர்பங்களில், கழுத்தின் அடிப்பகுதி வீக்கத்துடன் காணப்படலாம்.

இரைப்பை குடல் பிரச்சனைகள்
குடல் செயல்பாட்டில் மாற்றங்கள், குறிப்பாக வழக்கத்தை விட அதிகமான குடலியக்கம், ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை வெளிப்படுத்துகின்றன. சில சமயங்களில் ஹைப்பர் தைராய்டு இருந்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும்.

சரும பிரச்சனைகள்
ஹைப்பர் தைராய்டு சரும பிரச்சனைகளான சரும வறட்சி, சரும அரிப்பு, சரும நிற மாற்றம், முகப்பரு மற்றும் நீர்க்கோர்வை போன்றவற்றுடன் தொடர்புடையது. எனவே சில காலமாக நீங்கள் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், உங்களுக்கு ஹைப்பர் தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.

மற்ற அறிகுறிகள்
ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்களுக்கு வெளிப்படும் இதர அறிகுறிகளாவன அதிகமான வியர்வை, அதிக உடல் சூடு, தசை நடுக்கம், மிகுந்த களைப்பு. ஆண்களில் ஹைப்பர் தைராய்டிசத்தின் குறைவான பொதுவான அறிகுறிகளாவன முடி உதிர்தல், வாந்தி, வீங்கிய கண்கள், கண்களில் எரிச்சல் மற்றும் அதிக கண்ணீர் உற்பத்தி.
மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடல் மருத்துவரை அணுகுங்கள். ஒரு பிரச்சனைக்கு சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்தால், எப்பேற்பட்ட பிரச்சனையையும் எளிதில் சரிசெய்யலாம் என்பதை மறவாதீர்கள்.



Click it and Unblock the Notifications
