Latest Updates
-
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்.. -
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை
ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று பெருங்குடல் புற்றுநோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வதே, இவ்வகை புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி.
உலகில் மரணத்திற்கு வழிவகுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று புற்றுநோயாகும். வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் குறிப்பிட்ட புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. புற்றுநோய் உடலில் பரவ ஆரம்பித்தவுடன் சிகிச்சை அளிப்பது என்பது கடினமாகிவிடும். ஆகவே புற்றுநோய் செல்கள் உடலினுள் பெருகுவதற்கு முன்பு அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று பெருங்குடல் புற்றுநோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வதே, இவ்வகை புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி. அதோடு இந்த வகை புற்றுநோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெருங்குடல் புற்றுநோய் பெரிய குடலில் ஆரம்பமாகிறது மற்றும் பரம்பரையில் யாருக்கேனும் குடல் புற்றுநோய் இருந்தால், இந்த புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் இந்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வேறு சில காரணிகளும் உள்ளன. அதில் உடல் பருமன், புகைப்பிடிப்பது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை அடங்கும்.
இன்று உலக புற்றுநோய் தினம் என்பதால் ஆண்களை அதிகம் தாக்கும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் இந்த அறிகுறிகளை சற்றும் புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், இந்த புற்றுநோயில் இருந்து குணமாகலாம்.

ஆண்களில் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்
யாருக்காவது பெருங்குடல் புற்றுநோய் இருந்தால், அதற்கான அறிகுறிகள் உடனடியாக தெரியாது. இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகள் வெளியே தெரிய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். இப்போது ஆண்களிடையே காணப்படும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளைக் காண்போம்.

குடலியக்கத்தில் மாற்றம்
குடலியக்கத்தில் சாதாரண குடலியக்கம் என்று எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் வெளியேற்றும் மலத்தில் தொடர்ச்சியான மாற்றங்களை சந்திக்கக்கூடும். உதாரணமாக, ஒருவர் திடீரென்று ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்கலாம். ஆனால் திடீரென்று உங்களின் இந்த வழக்கமான செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, மலத்தின் நிறம், அளவு மற்றும் அதை வெளியேற்றுவதில் சிரமத்தை சந்தித்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இரத்தம் கலந்த மலம்
இரத்தம் கலந்த மலம் கட்டாயம் புறக்கணிக்கக்கூடாத பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாகும். மலக்குடல் இரத்தப்போக்கு மூல நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே இந்த மாதிரியான அறிகுறியை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று பிடிப்புகள்
அதிகப்படியான வாயு மற்றும் வயிற்று உப்புசம் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இது பெருங்குடல் புற்றுநோயின் பிற்பகுதியில் நோயின் வளர்ச்சிக்கு பிறகு தோன்றும் அறிகுறியாகும். கார்பனேட்டட் பானங்கள், பால் பொருட்கள், அதிகப்படியான நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் குடல் அழற்சி நோய் போன்ற செரிமான பிரச்சனைகள் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

குமட்டல்
குமட்டல் மற்றும் வாந்தி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால் இந்த அறிகுறிகளுடன், மலச்சிக்கல் அல்லது வயிற்று வலி போன்ற பிற அறிகுறிகளையும் சந்தித்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகும். குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் வலிமிக்க பிடிப்புக்களை அடிக்கடி சந்தித்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்று.

சோர்வு
பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் சோர்வு, சாதாரணமான மக்கள் சந்திக்கும் சோர்வுக்கு சமமானது அல்ல. ஏனெனில் இந்த வகையான சோர்வில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்காது. அதோடு இது பெருங்குடல் புற்றுநோயின் முற்றிய கட்டத்தில் தோன்றும் அறிகுறியாகும்.

விவரிக்க முடியாத எடை இழப்பு
விவரிக்க முடியாத எடை இழப்பு என்பது ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத பெருங்குடல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறியாகும். ஒருவர் காரணமின்றி எடையை அதிகளவில் இழந்தால், அது பெருங்குடல் புற்றுநோய் வெளிக்காட்டும் ஓர் முக்கிய அறிகுறி. ஏனெனில் கட்டிகளானது உடலின் இரத்தத்தையும், ஊட்டச்சத்துக்களையும் அது வளர பயன்படுத்தி, அதன் விளைவாக திடீரென எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

மூச்சுத் திணறல்
பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறியாவிட்டால், அது நுரையீரல் வரை பரவக்கூடும். இதன் விளைவாக மூச்சுத் திணறல், இருமல் மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications