For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் பிறப்புறுப்பில் இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டரை பார்க்கணுமாம்...இல்லனா உயிருக்கே ஆபத்தாம்!

நீங்கள் ஆரோக்கியமாக உணர்வது மட்டுமே எப்போதும் உண்மையான ஆரோக்கியமாக இருந்துவிடாது. மேலும் பிரச்சனைகள் மோசமடையும் வரை புறக்கணிப்பது ஆரோக்கியத்தை மேலும் சிக்கலாக்கும்.

|

ஆரோக்கியம் என்பது பாலினம் சார்ந்த ஒன்று அல்ல. ஒவ்வொரு நபரும், அவர்களின் வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் ஆரோக்கிய பிரச்சினைகளை தடுக்க பரிசோதனைகளுக்குச் சென்று நல்ல உணவு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்ன்றாலும், பல ஆய்வுகள் ஆண்கள் உடல்நலப் பிரச்சினைகளை புறக்கணிக்க வாய்ப்புள்ளது அல்லது மருத்துவரிடம் செல்வதற்கு தயங்குவதாக உணர்கிறார்கள், மேலும் அவர்கள் ஏற்கனவே ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்வதாக கூறுகிறது.

Symptoms Men Should Never Ignore

நீங்கள் ஆரோக்கியமாக உணர்வது மட்டுமே எப்போதும் உண்மையான ஆரோக்கியமாக இருந்துவிடாது. மேலும் பிரச்சனைகள் மோசமடையும் வரை புறக்கணிப்பது ஆரோக்கியத்தை மேலும் சிக்கலாக்கும். சில குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றும் மோசமான உடல்நலக் குறைவின் எச்சரிக்கை அறிகுறிகளிடம் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், உடல்நலப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது நிறத்தில் மாற்றம்

சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது நிறத்தில் மாற்றம்

சிறுநீரின் நிறம், அமைப்பு அல்லது கழிவறைக்குச் செல்லும் அதிர்வெண்ணில் உள்ள வேறுபாடுகளைக் உணர்ந்தாலும், அவை சில ஆரோக்கிய பிரச்சினையின் அறிகுறியாக குறிக்கலாம். உதாரணமாக, சிறுநீரில் இரத்தத்தைக் கண்டறிவது சில தொற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது சில சமயங்களில், புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது சிறுநீரகக் கற்களின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைப்பது சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீர் பாதை தொற்று, நீரிழிவு அல்லது உங்கள் சிறுநீரகங்கள் அல்லது இதயத்தில் ஏதேனும் தவறு இருப்பதைக் குறிக்கலாம்.

மார்பில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

மார்பில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

வலியை அனுபவிப்பது பொதுவாக அசௌகரியத்தின் அறிகுறியாக புறக்கணிக்கப்படுகிறது, ஆனால் மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பது இதய பிரச்சனைகளின் அறிகுறியாக கருதப்படலாம். திடீர் மாரடைப்பு மார்பு மற்றும் தோள்பட்டையில் ஏற்படும் வலியுடன் தொடர்புடையது என்றாலும், அடிப்படை பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது இதயக் கோளாறு உருவாகும் நபர்கள் இத்தகைய அறிகுறிகளை சில நாட்கள் அல்லது மாரடைப்பிற்கு சில வாரங்களுக்கு முன்பே அனுபவிக்கலாம். எனவே, ஏதேனும் அசாதாரண நெஞ்சு வலி, சுவாசப் பிரச்சினைகள், அதிக வியர்வை அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சினைகள் போன்றவற்றை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும்.

MOST READ: உங்க ராசிப்படி அக்டோபர் மாதம் உங்க காதல் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா?இந்த 4 பேர் பாவம்!

பிறப்புறுப்பைச் சுற்றி அசாதாரண கட்டிகள்

பிறப்புறுப்பைச் சுற்றி அசாதாரண கட்டிகள்

பொதுவாக பிறப்புறுப்பு பிரச்சினைகளை பற்றி விவாதிப்பதை ஆண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள். ஆனால் இனப்பெருக்க உறுப்பின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நல்வாழ்விற்கு அவசியமானது. ஆண்குறியை சுற்றி கட்டிகள் இருப்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆய்வுகளின்படி, டெஸ்டிகுலர் புற்றுநோய் என்பது இளைய ஆண்கள் மத்தியில் காணப்படும் மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும், மேலும் இது பெரிதும் கவனிக்கப்படாமல் போகலாம். இது ஆபத்தானது மட்டுமல்ல, அதற்கு சரியான நேரத்தில் முக்கியமான கவனிப்பும் தேவை. சருமத்தின் அமைப்பு, கட்டிகள் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் ஏற்படும் வீக்கம் போன்ற ஏதேனும் மாற்றங்களை நீண்ட காலத்திற்கு அலட்சியம் செய்யக்கூடாது.

விறைப்புத்தன்மை குறைபாடு

விறைப்புத்தன்மை குறைபாடு

ஆண்குறி விறைப்புத்தன்மை என்பது வயதுக்கு ஏற்ப ஆண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை, ஆனால் நிறைய பேர் கருத்தில் கொள்ளாதது என்னவென்றால், விறைப்புத்தன்மை அல்லது படுக்கையறையில் செயல்திறன் பிரச்சினைகளை எதிர்கொள்வது அடிப்படை மருத்துவ நிலைக்கான அறிகுறியாக இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, சுமார் 70% செயலிழப்பு வழக்குகள் மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுடன் தொடர்புடையவை, இது நீங்கள் சமாளிக்க வேண்டிய ஒரு தீவிர மருத்துவப் பிரச்சினையாக இருக்கலாம் என்பதைக் குறிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் கோளாறுகள், கட்டுப்பாடற்ற அல்லது கடுமையான நீரிழிவு, குடிப்பழக்கம் ஆகியவை விறைப்பு செயலிழப்பு அல்லது பாலியல் செயல்திறனை பாதிக்கும் சில சுகாதார நிலைகள். சில நரம்புகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்துவதன் மூலம், ஒரு மனிதன் விறைப்புத்தன்மையை அடைவதையும் இந்த நிலைமைகள் கடினமாக்கும்.

அதிக தாகம்

அதிக தாகம்

ஹைட்ரேட்டிங் திரவத்தை முறையாக உட்கொள்வது மற்றும் ஒவ்வொரு நாளும் தவறாமல் 2-3 லிட்டர் தண்ணீர் (அல்லது குறைந்தது 8-10 கிளாஸ்) வைத்திருப்பது முக்கியம். சில நாட்களில் தாகம் ஏற்படுவது பொதுவானது என்றாலும், அதிக தாகத்தை அனுபவிப்பது அல்லது ஒரு நாளில் அதிக தண்ணீர் குடிப்பது நீரிழிவு நோய் வருவதற்கான அச்சுறுத்தலான ஹைப்பர் கிளைசீமியாவின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கு நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு இருந்தால், அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவுகளுடன் தொடர்புடைய அறிகுறிகளை அனுபவித்திருந்தால், உங்கள் உடல்நல அபாயங்களை மதிப்பிடுவதற்கான நேரமாக இருக்கலாம். நினைவில் வைத்து கொள்ளுங்கள், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் சரியான நேரத்தில் நோயறிதல் செய்யப்பட்டால், நீரிழிவு நோயை நன்கு நிர்வகிக்க முடியும்.

MOST READ: நாம அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் நமக்கே தெரியாமல் நம் இதயத்தை சூப்பரா பாதுகாக்கிறதாம் தெரியுமா?

நியாபக மறதி

நியாபக மறதி

அடிக்கடி நினைவாற்றல் இழப்பு அல்லது அசாதாரண மறதி, குறைந்த அளவு நியாபகம் மற்றும் நினைவக இடையூறுகள், கடுமையான நினைவாற்றல் இழப்பு, வயதுக்கு ஏற்ப மோசமடைதல் ஆகியவை அறிவாற்றலின் அறிகுறியாக இருக்கலாம். மந்தநிலை அல்லது மோசமடைதல் போன்றவற்றிற்கு விரைவில் பரிசோதனை தேவைப்படுகிறது. வயதானதால் ஓரளவு நினைவாற்றல் குறைவது பொதுவாக இருந்தாலும், கடுமையான நினைவாற்றல் இழப்பு மூளை தொற்று, சேதம், பக்கவாதம், அல்சைமர் அல்லது டிமென்ஷியா அல்லது குடிப்பழக்கம் போன்ற பிரச்சினைகளின் விளைவாக இருக்கலாம். நினைவக இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் இடையூறுகள் பெரும்பாலும் வைட்டமின் பி 12 குறைபாடு உட்பட ஊட்டச்சத்து குறைபாடுகளின் விளைவாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms Men Should Never Ignore

Here is the list of symptoms men should never ignore.
Story first published: Friday, October 1, 2021, 14:24 [IST]
Desktop Bottom Promotion