Just In
- 2 hrs ago
சுவையான... தேங்காய் சாதம்
- 3 hrs ago
ஆண்களே! உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 3 hrs ago
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
- 3 hrs ago
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்க லாக்கர் இந்த இடத்தில் இருந்தா உங்க வறுமை எப்பவுமே உங்களைவிட்டு போகாது!
Don't Miss
- Movies
ரெடி.. ஒன் டூ த்ரீ.. "விக்ரம்" புக்கிங் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.. குஷியில் ரசிகர்கள்!
- News
#RealHai: IIFA 2022ல் கலந்து கொள்ள செம சான்ஸ்.. ஜோஷில் ரியல் வீடியோக்களை வெளியிடுங்கள்! வெல்லுங்கள்!
- Sports
சூப்பர் மேன் போல் பாய்ந்த அஸ்வின்.. டுபிளஸிசை திட்டம் போட்டு தூக்கிய சாம்சன்.. ஆர்சிபிக்கு ஏமாற்றம்
- Technology
ரீசார்ஜ் செய்தால் JioFi சாதனம் இலவசம்: ரூ.249, ரூ.299, ரூ.349 விலையில் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
- Finance
ட்ரோன் நிறுவனத்திலும் முதலீடு: எத்தனை சதவிகித பங்குகளை வாங்குகிறார் அதானி?
- Automobiles
சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்தது கீவே!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓமிக்ரானை விட அதிவேகமாக பரவும் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான்.. இது இந்தியாவில் உள்ளதா? ஆபத்தானதா?
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஓமிக்ரான் உலகளவில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதே வேளையில் ஓமிக்ரானில் இருந்து புதிய வேரியண்ட் தோன்றி வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை விகாரம் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் இந்த விகாரம் RT-PCR சோதனையில் இருந்தும் தப்பிக்கக்கூடியது என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை விகாரமான BA.2, 'ஸ்டெல்த் ஓமிக்ரான்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை விகாரம் ஐரோப்பா முழுவதும் வலுவான ஒரு புதிய அலையின் அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது. சரி, இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் என்றால் என்ன? அது எவ்வளவு ஆபத்தானது என்பன போன்ற சில முக்கியமான விஷயங்களை இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஓமிக்ரான் வகைகள்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஓமிக்ரான் மாறுபாடு மூன்று துணை விகாரங்களைக் கொண்டுள்ளது. அவை BA.1, BA.2 மற்றும் BA.3. இதில் உலகெங்கிலும் பதிவாகும் ஓமிக்ரானின் BA.1 என்ற துணை விகாரம் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், ஓமிக்ரானின் BA.2 என்ற விகாரமும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. அதுவும் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை உச்சத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளதால், தற்போது இந்த விகாரம் இந்தியாவிலும் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சமூக பரவல்
தற்போது இந்தியாவில் ஓமிக்ரான் சமூக பரவலில் உள்ளது மற்றும் அதுவும் பெருநகரங்களில் அதிகமாக உள்ளதால், அங்கு புதிய கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. மேலும் ஓமிக்ரானின் BA.2 விகாரமும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதன் S மரபணு காரணமாக இது பரிசோதனையில் அதிக தவறான எதிர்மறை முடிவுகளை கொடுக்க வாய்ப்புள்ளதாக INSACOG தெரிவித்துள்ளது.

ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதிப்புக்களைக் கொண்ட நாடுகள்
இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கைத் தவிர, ஓமிக்ரானின் BA.2 விகார வழக்குகள் ஸ்வீடன், நார்வே மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பிரான்ஸில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இந்த ஓமிக்ரான் விகாரம் குறித்து எச்சரித்துள்ளனர். ஏனெனில் இது ஓமிக்ரானின் BA.1 விகாரத்தை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர். ஜனவரி 10 ஆம் தேதி வரை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் BA.2 துணை விகாரத்தின் 53 வரிசைகளைக் கண்டறிந்துள்ளனர்.

ஸ்டெல்த் ஓமிக்ரான் மிகவும் கவலைக்குரியதா?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரானின் BA.2 துணை விகாரம் BA.1 விகாரத்துடன் 32 விகாரங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அதில் 28-க்கும் மேற்பட்ட தனித்துவமான பிறழ்வுகள் இருக்கலாம். BA.1 விகாரம் ஒரு பிறழ்வைக் கொண்டுள்ளது. அது S அல்லது ஸ்பைக் மரபணு இல்லாமல் இருப்பது. இது தான் PCR சோதனைகளில் ஓமிக்ரானை எளிதில் கண்டறிய உதவுகிறது. ஆனால் BA.2 என்ற விகாரத்தில் இந்த பிறழ்வு இல்லாததால், இந்த வகை விகாரத்தைக் RT-PCR சோதனையில் அறிவது கடினமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டெல்த் ஓமிக்ரானுக்கு எதிராக PCR சோதனைகள் பயனற்றதா?
BA.1 விகாரம் சில சமயஙக்ளில் RT-PCR சோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடும் என்றாலும், இந்த சோதனைகள் தான் வைரஸைக் கண்டறிவதில் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லேப் RT-PCR சோதனையானது தரமான சோதனையாகும். இந்த சோதனையைப் பயன்படுத்தும் போது ஓமிக்ரான் அல்லது முந்தைய டெல்டாவிற்கு இடையேயான உணர்திறன் விகிதத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை. சொல்லப்போனால் ஓமிக்ரான் மாறுபாட்டில் உள்ள ஸ்பைக் புரதத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பிறழ்வுகள், தற்போது கிடைக்கும் சோதனைக் கருவிகளின் உணர்திறனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

முடிவு
ஸ்டெல்த் ஓமிக்ரான் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் மற்றும் இதனால் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்னு ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். எதுவாயினும் இப்போதைக்கு உறுதியாக எதையும் கூற முடியாது என்றும் ஆராச்சியாளர்கள் கூறுவதோடு, இந்த விகாரம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்து வருவதாகவும் கூறுகின்றனர். எனவே எதுவாக இருந்தாலும், சரியான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்பாக இருக்க முயல்வோம்.