For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இந்த அறிகுறிலாம் இருந்தா உங்க கல்லீரல் சரியா வேலை செய்வதில்லை-ன்னு அர்த்தமாம்..

ஒருவரது கல்லீரல் சரியாக வேலை செய்வதில்லை என்பதை எவ்வாறு அறிவது, அதன் அறிகுறிகள் என்னவென்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கான விடை தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

|

மனித உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். கல்லீரல் தான் பித்தநீரை உற்பத்தி செய்கிறது மற்றும் ஒருவரின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது தவிர உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவி புரிகிறது. ஆனால் இந்த கல்லீரலானது நாம் உண்ணும் சில மோசமான உணவுகள், கெட்ட பழக்கங்கள் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கல்லீரலில் நோய் ஏதேனும் வந்தால், அது ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது என்பதால், தற்போது நிறைய பேர் கல்லீரல் நோயின் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி அவதிப்பட்டு வருகின்றனர்.

Signs That Your Liver Isnt FunctioningProperly In Tamil

ஒருவரது கல்லீரலில் எப்போது நோய் வரும் தெரியுமா? எப்போது கல்லீரலின் செயல்பாட்டில் நீண்ட நாட்களாக இடையூறு ஏற்படுகிறதோ அல்லது எப்போது கல்லீரல் சற்றும் ஓய்வின்றி நீண்ட நேரம் வேலை செய்கிறதோ, அப்போது தான் கல்லீரலில் நோய் வர தொடங்குகிறது. மயோகிளினிக்கின் கூற்றுப்படி, கல்லீரல் நோயானது மரபணு அல்லது வைரஸ், ஆல்கஹால் மற்றும் உடன் பருமன் போன்ற பல்வேறு காரணிகளால் சேதமடையலாம். சரி, ஒருவரது கல்லீரல் சரியாக வேலை செய்வதில்லை என்பதை எவ்வாறு அறிவது, அதன் அறிகுறிகள் என்னவென்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கான விடை தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிரிய நிறத்தில் மலம் வெளியேறுவது

வெளிரிய நிறத்தில் மலம் வெளியேறுவது

உங்கள் மலம் திடீரென்று வெளிரிய நிறத்திலும், மிதக்கவும் செய்கிறதா? அப்படியானால் உங்கள் கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், அது பித்த உப்புக்களை மலத்தில் கலந்து அடர் நிறத்தில் வெளியேற்றும். ஆனால் எப்போது கல்லீரலில் பிரச்சனை உள்ளதோ, அப்போது கல்லீரலால் அதிகளவிலான கொழுப்புக்களை ஜீரணிக்க முடியாது. இந்நிலையில் கொழுப்புக்களானது மலம் கழிக்கும் போது அதனுடன் கலந்து, வெளிரிய நிறத்தி வெளியேறுதுடன், மலத்தை மிதக்கவும் செய்கின்றன.

குமட்டல்

குமட்டல்

உங்களுக்கு திடீரென்று காரணமின்றி குமட்டல் உணர்வு ஏற்படுகிறதா? குமட்டலானது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான பொதுவான அறிகுறியாகும். இருப்பினும், கல்லீரலால் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை பிரித்தெடுக்க முடியாமல் போகும் போது, அந்த நச்சுக்கள் இரத்தத்தில் அதிகம் தேக்கமடைந்து, குமட்டல் உணர்வை உண்டாக்குகிறது.

உண்ட உடனேயே மலம் கழிப்பது

உண்ட உடனேயே மலம் கழிப்பது

நீங்கள் ஒவ்வொரு முறை உணவு உண்டதும் மலம் கழிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் இந்நிலையில் கல்லீரலால் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சு முடியாமல் போய், உண்ட உணவுகள் அப்படியே பெருங்குடலை அடைந்து, அவசரமாக மலத்தை வெளியேற்ற செய்யும்.

மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்

மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்

உங்களின் கண்கள் மற்றும் சருமம் திடீரென்று மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறதா? அப்படியானால் இரத்தத்தில் பிலிரூபின் அதிகரித்திருப்பது தான் காரணம். பிலிரூபினை கல்லீரலால் திறம்பட செயல்படுத்த முடியாத போது, இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்து, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காண்பதோடு, சில சமயங்களில் தோலில் அரிப்பும் ஏற்படும்.

அடர் நிற சிறுநீர்

அடர் நிற சிறுநீர்

அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா? அப்படியென்றால் அதற்கு கல்லீரலால் பிலிரூபினை சரியாக உடைக்க முடியாமல் போனதால், இரத்தத்தில் பிலிரூபின் அதிகரித்து, அடர் நிறத்தில் சிறுநீரை வெளியேற்ற நேரிடுகிறது.

வீங்கிய அடிவயிறு

வீங்கிய அடிவயிறு

ஒருவரது அடிவயிறு மட்டும் வீங்கிய நிலையில் இருந்தால், அது அஸ்சைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலை அடிவயிற்றில் திரவங்களை தக்க வைக்க செய்கிறது. கால் வீக்கம் மற்றும் கணுக்கால் வீக்கம் போன்றவையும் ஒருவரின் கல்லீரல் செயல்பாட்டில் உள்ள பிரச்சனையைக் குறிக்கும் முக்கிய அறிகுறிகளாகும்.

சிராய்ப்பு

சிராய்ப்பு

சிலருக்கு கீழே விழுந்தால் அல்லது உரசினால் கூட அவ்வளவு எளிதில் காயம் ஏற்படாது. ஆனால் இன்னும் சிலருக்கு எளிதில் காயம் ஏற்படும். இப்படி எளிதில் காயம் ஏற்படுகிறது என்றால், கல்லீரலால் இரத்த உறைதலுக்கு காரணமான புரோட்டீனை உற்பத்தி செய்ய முடியவில்லை என்று அர்த்தம். இதைக் கொண்டும் கல்லீரலில் உள்ள பிரச்சனையை அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Your Liver Isn't Functioning Properly In Tamil

Here are some signs that your liver isn'y working properly. Read on to know more...
Story first published: Friday, December 2, 2022, 17:43 [IST]
Desktop Bottom Promotion